மோடி மீண்டும் பிரதமர் ஆகவேண்டும்.. அதற்காகவே பாஜக கூட்டணியில் இணைகிறது தமாகா: ஜிகே வாசன் பரபர பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மக்களவை தேர்தலை பாஜக உடன் இணைந்து த.மா.கா எதிர்கொள்ளும். தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை விரைவில் நடைபெற்று அனைத்தும் நிறைவு பெறும் என தமாகா தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு, கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தையே தீவிரப்படுத்தி வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை ஆளுங்கட்சியான திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை முதல் கட்டத்தை முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட பேச்சுவார்த்ததையை நடத்தி வருகிறது. இதுவரை திமுக அணியில் முஸ்லிம் லீக் மற்றும் கொங்கு தேசிய மக்கள் கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

GK Vasan announces that TMC joins with BJP alliance for lok sabha election


பாஜக அதிமுக கூட்டணி கடந்த சில மாதங்களுக்கு முன்பாக முறிந்த நிலையில் இரண்டு கட்சிகளும் தனித்தனியாக கூட்டணி அமைக்க திட்டமிட்டு வருகின்றன. இதற்காக பாமக, தேமுதிக, தமாகாவை தங்கள் அணிக்கு இழுக்க தீவிரமாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. எனினும், கூட்டணி இன்னமும் முடிவடையாமல் இழுபறி நிலையிலேயே உள்ளது.

அதிமுக பாஜக கூட்டணியை ஒன்றிணைக்கும் பணியில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் ஈடுபட்டிருந்தார். இதற்காக எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக தேசிய தலைவர்களை நேரில் சந்தித்து பேசி இருந்தார் ஜிகே வாசன். ஆனால் மீண்டும் பாஜகவுடன் இணைவதற்கான வாய்ப்பே இல்லை என அதிமுக சார்பில் உறுதியாக தெரிவித்துவிட்டது. இந்த நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி எந்த கூட்டணியில் இடம்பெறும் என்ற கேள்வி எழுந்தது.

பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது தமிழ் மாநில காங்கிரஸ்-ஜிகே வாசன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!


இந்த நிலையில் திடீரென பாஜகவின் மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் நேற்று இரவு ஜிகே வாசனை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது பாஜக கூட்டணியில் ஜிகே வாசன் இணைய வேண்டும் என்றும், பிரதமர் மோடி நாளை பங்கேற்கும் பல்லடம் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதோடு, சீட் பகிர்வு பற்றியும் பேசியதாகத் தெரிகிறது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்து, பாஜக உடன் கூட்டணி என உறுதி செய்துள்ளார் ஜிகே வாசன்.

இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தமாகா தலைவர் ஜிகே வாசன், “பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் என்னுடன் பேசினார். பிரதமர் மோடி நாளை பங்கேற்கும் பல்லடம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறேன். வரும் லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்து தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடும். நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக ஆதரவு அளித்து பாஜக கூட்டணியில் இடம்பெறுகிறோம்.” எனத் தெரிவித்துள்ளார் ஜிகே வாசன்.

மேலும் பேசிய அவர், “மக்களவை தேர்தலை பாஜக உடன் இணைந்து த.மா.கா எதிர்கொள்ளும். தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை விரைவில் நடைபெற்று அனைத்தும் நிறைவு பெறும். தமிழ் கலாச்சாரத்திற்கு பாஜக முக்கியத்துவம் அளிப்பதால், பாஜக உடன் கூட்டணி அமைக்கிறோம். விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கட்சியாக பாஜக உள்ளது. வாக்களித்த தமிழக மக்களை திமுக அரசு ஏமாற்றி வருகிறது.” எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+