டெல்லியில் ரவுண்டடிக்கும் ஜிகே வாசன் ஆட்டோ.. அமைச்சர் பதவிக்காக கேம்ப்பா (அ) காங்.கில் இணைய திட்டமா?

பாஜகவுடன் இணைய வாசன் யோசித்து வருவதாக கூறப்படுகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: வாசன் தன் "ஆட்டோவை" டெல்லி பக்கம் ஓட்டி செல்வாரா என்று தெரியவில்லை. இப்போதைக்கு அங்கதான் வாசம் செய்து வருகிறாராம் வாசன்!

காங்கிரசில் இருந்து பிரிந்து சென்று தனிக்கட்சி நடத்தி வரும் வாசன், யாருடன் கூட்டணி வைப்பது என்று போன தேர்தலிலும், இந்த தேர்தலிலும் கொஞ்சம் திணறிதான் போனார்.

அதேபோல எங்கே போய் கூட்டணி வைத்தாலும் குறைந்தது 3 சீட்டாவது கேட்டு விட வேண்டும் என்பதும், அதற்கு கூட்டணி தலைமை மறுப்பு சொல்வதும் நடந்தே வருகிறது.

 தஞ்சாவூர்

தஞ்சாவூர்

இந்த முறையும், அப்படித்தான் நடந்து தமாகாவுக்கு ஒரு சீட் ஒதுக்கப்பட்டது. அதிமுகவுடன் கூட்டணி அமைத்து, தஞ்சாவூர் தொகுதியில், சுயேச்சை சின்னத்தில், தமாகா, போட்டியிட்டார். இந்நிலையில்தான் வாசனின் டெல்லி பயணம் அமைந்துள்ளது. அங்குதான் முகாமிட்டுள்ளாராம். இதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது.

 ராஜ்யசபா

ராஜ்யசபா

ஒன்று, தஞ்சையில் தான் வெற்றி பெற்றால், மத்தியில் யார் ஆட்சி அமைத்தாலும் சரி... தனக்கு எப்படியாவது ராஜ்யசபா எம்பி பதவியையும், மத்திய அமைச்சர் பதவியையும் தரும் கட்சிக்கு ஆதரவு அளிப்பது எனவும், அந்த கட்சியுடனே தமாகாவை இணைக்கலாம் என்று யோசிப்பதாகவும் கூறப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தைக்குதான் வாசன் டெல்லியில் முகாமிட்டுள்ளார் என்கிறார்கள். மற்றொருபக்கம்,

 பதவிகள்

பதவிகள்

வாசன் டெல்லி போவது ஒன்றும் புதுசு இல்லைதான். ஏனெனில் அவர் தமிழக காங்கிரஸ் தலைவர், அகில இந்திய செயலாளர், 2 முறை ராஜ்யசபா எம்பி, 2 முறை மத்திய அமைச்சர் என்று பல பதவிகளை வகித்தவர். இதனால் நிறைய நண்பர்கள் டெல்லியில் வாசனுக்கு உண்டு. அதனால் தன் நண்பர்களை சந்திக்கவே, வாசன் டெல்லி சென்றுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

 டெல்லி முகாம்

டெல்லி முகாம்

இதனிடையே, வாசனின் டெல்லி முகாம் பற்றி தமாகா பொதுச்செயலர், முனவர் பாட்ஷா அறிக்கை ஒன்றில், "பதவியை தேடி செல்பவர் வாசன் அல்ல. பாஜகவில், இணைய வேண்டிய நிர்ப்பந்தம், தமாகாவுக்கு ஏற்படவில்லை.தன் நண்பர்களை சந்திக்கவே, வாசன் டில்லி சென்றுள்ளார். ஸ்டாலின் மருமகன், சபரீசனும் டில்லியில் தான் முகாமிட்டுள்ளார். ஆனால் வாசன் செல்வது மட்டும் வதந்தியாக கிளப்பி விடப்பட்டுள்ளது" என்று சொல்லி உள்ளார்.

 சபரீசன்

சபரீசன்

ஆக மொத்தம் வாசன், சபரீசன் டெல்லியில்தான் இருக்கிறார்கள்.. எதற்காக என்றுதான் தெரியவில்லை. பாட்ஷா கேட்ட கேள்வியும் வாஸ்தவம்தானே?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+