அங்குட்டு சரத்குமார் மாதிரி.. இங்குட்டு இவங்க! காங்கிரஸில் கரையும் தமாகா! ஜிகே வாசன் எடுத்த முடிவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் இன்னொரு கட்சி இணைப்புக்கு தயாராகி வருகிறது. திமுக - அதிமுக என பல கட்சிகளில் பயணித்த சரத்குமார் தனது கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் இணைந்தது போல. தமிழ் மாநில காங்கிரசை ஆரம்பித்து பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த. ஜிகே வாசன், ராகுலுடன் சமீபத்தில் பேசியிருக்கிறார். இந்நிலையில் மீண்டும் தனது கட்சியை காங்கிரஸில் இணைக்க பேச்சுவார்த்தையை அவர் தொடங்கி இருப்பதாக சொல்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

2026 தமிழக சட்டசபை தேர்தலுக்குப் பிறகு பல்வேறு அதிரடி மாற்றங்கள் அரங்கேறி வருகிறது. அதிமுகவும் திமுகவும் இதுவரை கூட்டணியே அமைத்ததில்லை என்ற வரலாற்றை மாற்றி, இரு கட்சிகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றதாக வெளியான தகவல் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

GK Vasan

இதனால் அதிமுகவும் உடைந்தது. அது மட்டும் இல்லாமல் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக திமுகவுடன் நெருக்கமான கூட்டணியில் இருந்த விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியேறின.

தமிழக வெற்றிக் கழகம்

அது மட்டுமல்லாமல் 108 இடங்களில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க உதவியோடு விசிக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை கூட்டணி அரசிலும் பங்கேற்றுன. இது ஒரு புறம் இருக்க அதிமுக பாஜக கூட்டணியில் இருந்து அடுத்தடுத்து பல கட்சிகள் விலகி வருகிறது. ஏற்கனவே புரட்சி பாரதம், ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் ஆகியவை கூட்டணியில் இருந்து விலகி வெளியேறிவிட்டன.

ஜிகே வாசன்

இதற்கிடையே மீண்டும் காங்கிரஸில் இணைவது குறித்து ஜிகே வாசன் யோசித்து வருவதாக சொல்கின்றனர். ஜி கே வாசனின் தந்தையான ஜி கே மூப்பனார் தமிழக காங்கிரசை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைமையகமான சத்தியமூர்த்தி பவன் முழுமையாக அவரது கட்டுப்பாட்டில் இருந்தது. அதிமுகவுடன் கூட்டணி பிடிக்காததால் தமிழ் மாநில காங்கிரசை தொடங்கினார் மூப்பனார். அவர் மறையும் வரை முழுக்க முழுக்க சத்தியமூர்த்தி பவன் அவரது கட்டுப்பாட்டில் இருந்தது.

பாஜக ஆதரவு

அவரது மறைவுக்குப் பிறகு மகன் ஜி கே வாசன் அரசியலுக்கு வந்தார். தேர்தலின் போது எந்த கூட்டணி - எந்த கட்சியில் இருந்து வெளிவந்தாரோ அதே காங்கிரசுடன் கூட்டணி அமைத்து. மத்திய அமைச்சராகவும் இருந்தார். அதற்கு பிறகு மீண்டும் வெளியேறி தமிழ் மாநில காங்கிரசை தொடங்கினார். அதற்குப் பிறகு முழுக்க முழுக்க பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் இருந்தார். இடையில் அதிமுக மூலம் மாநிலங்களவை எம்பி ஆஅக்வும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

விஜய் ஆட்சி

தற்போது இதற்கிடையே 2026 தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி படுதோல்வையை சந்தித்த நிலையில், அதில இடம் பெற்ற ஜிகே வாசன் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்தார். தற்போது விஜய் ஆட்சியை வெகுவாக பாராட்டி வரும் அவர் சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற வைகோ புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது ராகுல் காந்தியுடன் பேசினாராம். அப்போது பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியவர் பழைய நட்பையும் புதுப்பித்துக் கொண்டார் என்கின்றனர்.

காங்கிரஸ் கட்சி

இதற்கிடையே தமிழ் மாநில காங்கிரஸ் மீண்டும் காங்கிரஸ் கட்சியோடு இணைக்கப்படலாம் என்கின்றன தகவல்கள். டெல்டா மாவட்டங்களை தவிர்த்து பெரும்பாலும் ஜி.கேவாசனுக்கு செல்வாக்கு இல்லாத நிலையில் காங்கிரசின் செல்வாக்கை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது அவர் திட்டமாக இருக்கிறது. ஏற்கனவே திமுக ஆதரவாளராக இருந்து பின்பு அதிமுகவுடன் கூட்டணி வைத்து எம்எல்ஏ ஆன சரத்குமார் பின்னர் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கினார். அதற்கு பிறகு அவருக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை. இதை அடுத்து பாஜகவில் தனது கட்சியை இணைத்தார். இந்த நிலையில் 2026 சட்டசபை தேர்தலில் தோற்ற ஜிகே வாசனும் சரத்குமார் பாணியில் தனது கட்சியை காங்கிரஸில் இணைக்க போகிறார் என்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+