Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கருவாடு" மீனாகுதா.. யார் ஜி.கே.வாசனா.. "3 பேருக்கு" போனை போட்ட பாஜக.. அப்ப "சைக்கிள்" டெல்லி போகுதா

ஜிகே வாசனின் தமாகா, பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியல் களம் சூடாகி உள்ளது.. எம்பி தேர்தலுக்கான பேச்சுவார்த்தைகளும், கூட்டணி விவகாரங்களும் தலைதூக்கி வருகின்றன.. திமுகவுக்கு எதிராக, கூட்டணி அமைக்க போவது யார்? வரும் தேர்தலில் யாருடைய தலைமையில் கூட்டணி அமைய போகிறது? என்ற எதிர்பார்ப்புகள் எழுந்து வரும் நிலையில், பாஜக எடுத்து வரும் "மூவ்" குறித்த தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.

எடப்பாடியை பொறுத்தவரை, ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு தயாராக இல்லை.. கட்சி 95 சதவீதம் தன்னிடம், நிர்வாகிகளும் தன்னிடம் உள்ளதால், தன்னையை தலைமையாக அங்கீகரிக்க சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி..

அதிமுக தலைமையில் மெகா கூட்டணி என்று இன்றைய தினமும், எடப்பாடி பழனிசாமி அறிவிக்க காரணமே அதுதான்.. ஆனால், அதிமுக வாக்குகள் சிதறிவிடக்கூடாது, ஒருங்கிணைந்த அதிமுக மட்டுமே தேவை என்பதை பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

 பூசலோ பூசல்

பூசலோ பூசல்

எடப்பாடியின் பிடிவாதம் தளராத நிலையில், ஒருவேளை பாஜகவை தவிர்த்து அவர் கூட்டணி அமைக்க கூடுமோ என்ற பேச்சும் தமிழக அரசியல் களத்தில் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.. கடந்த சில நாட்களுக்கு முன்பு, கமலாலயத்தில் பாஜக கூட்டம் நடந்தது.. அந்த கூட்டத்திலேயே நிர்வாகிகளிடம் நிறைய அறிவுரைகளை அண்ணாமலை தந்திருந்ததாக செய்திகள் வந்தன.. அப்போது அதிமுக கூட்டணி பற்றியும் பேசியிருக்கிறார்.. குறிப்பாக, "அதிமுக கூட்டணியை முழுமையாக நம்பிவிட முடியாது.. அதிமுகவே இப்போது பிளவுபட்டு உள்ளது.. உட்கட்சி பூசல் தீரவில்லை.. கட்சி யாருக்கு என்ற பஞ்சாயத்து கோர்ட்டிலும் உள்ளது, தேர்தல் ஆணையத்திலும் உள்ளது.. அதனால் நாம் யார் பக்கமும் இப்போதே ஓட முடியாது.

 பச்சைக்கொடி

பச்சைக்கொடி

எம்பி தேர்தலில், 5, 6 சீட்களுக்காக யாரிடமும் தொங்கி நின்று, அவர்கள் கொடுக்கும் தொகுதிகளில் போட்டியிட்டு, ஒன்றிரண்டு சீட்டுகள் ஜெயிப்பதில் விருப்பமில்லை.. இதை பிரதமரிடம் நான் எடுத்து சொன்னேன்.. அதற்கு தனித்து போட்டியிட பிரதமரும் பச்சைக்கொடி காட்டி விட்டார்.. தனித்துப் போட்டியிடும் அளவுக்கு, நாம் வளர்ந்தாக வேண்டும்" என்று அண்ணாமலை கூறியிருந்தாராம்.. அதாவது, நாற்பதும் நாமே என்று மூத்த தலைவர் தம்பிதுரை சொல்ல ஆரம்பித்துவிட்ட நிலையில், தனித்துபோட்டியிட ரெடியாகுங்கள் என்று அண்ணாமலையும் காய்நகர்த்தல்களை துவங்கியுள்ளார்.

 ஏசி சண்முகம்

ஏசி சண்முகம்

ஆனால், பாஜக அதிமுக இந்த இரண்டு கட்சிகளுமே தனித்து நின்றால், ஆளுங்கட்சிக்கு எதிரான ஓட்டுகள் பிரிந்து, அது அவர்களின் வெற்றிக்கே சுலபமாகிடும் என்பதையும் நாம் இங்கு சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது. இப்படிப்பட்ட சூழலில், பாஜக குறித்த ஒரு முக்கிய தகவல் நமக்கு கிடைத்துள்ளது.. எடப்பாடி இல்லாத கூட்டணியை உருவாக்க வேண்டுமானால், அதற்கான பலத்தை பெருக்கி கொள்ள பாஜக முனைப்பு காட்ட துவங்கி உள்ளதாம்.. எனவே, சில கட்சிகளை நேடியாகவே தொடர்பு கொண்டு பேசியதாம்.. அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட சிறிய கட்சிகள் இருக்கின்றன...

 டாக்டர் கிருஷ்ணசாமி

டாக்டர் கிருஷ்ணசாமி

அந்த கட்சிகளின் தலைவர்களை அண்மையில் தொடர்புகொண்டிருக்கிறது பாஜக தலைமை. அப்போது, பாஜக தலைமையில் கூட்டணி அமைக்க விரும்புகிறோம். நீங்கள் பாஜக கூட்டணியில் இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த கட்சிகளின் தலைவர்களோ, அதிமுக தலைமையிலான கூட்டணியில் இருக்கவே விரும்புகிறோம் என்று சொல்லி பாஜகவின் கோரிக்கையை நிராகரித்துவிட்டார்களாம்.. இந்த நிராகரிப்பு குறித்து பாஜகவின் தேசிய தலைமைக்கு சொல்லப்பட்டுள்ள நிலையில், அதைக்கேட்டு அவர்கள் அதிர்ந்து போய்விட்டார்களாம்.

 சபாஷ் வாசன்

சபாஷ் வாசன்

இதையடுத்து, அவர்கள் உடனே ஜி.கே.வாசனிடம் பேசியுள்ளனர்... சில மாதங்களாக அமுங்கிக் கிடந்த பழைய பஞ்சாங்கத்தை மீண்டும் வாசனிடம் வாசிக்கப்பட்டுள்ளது. அதாவது, மத்திய அமைச்சராக்குகிறோம். பாஜகவில் இணைந்துவிடுங்கள் என்று அட்வைஸ் செய்துள்ளனர்... இதற்கு முன்பு, இதே ஆஃபரை 3 முறை வாசனிடம் பாஜக வைத்திருக்கிறது... அப்போதெல்லாம், பாஜகவுடன் தமாகாவை இணைப்பதற்கு ஒப்புக்கொள்ளவில்லை ஜி.கே.வாசன்... ஆனால், முதல்முறையாக, கட்சியினரிடம் கலந்து பேசிவிட்டு சொல்கிறேன் என்று இப்போது பாசிட்டிவ்வாக சொல்லியுள்ளாராம்.. இதனையடுத்து, கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் முதல் கட்டமாக இதுகுறித்து விவாதிக்கவிருக்கிறாராம் ஜி.கே.வாசன்.

மூப்பனார்

மூப்பனார்

ஜிகே வாசனை பொறுத்தவரை, மிகவும் மென்மையானவர்.. பெரிதாக எந்த சர்ச்சையிலும் சிக்காதவர்... யாரையும் அநாகரீகமாக பேசாதவர்.. குறிப்பாக, தேர்தல் காலங்களில், எப்போதுமே கூட்டணி கட்சி தலைவர்களிடம் இவர் டிமாண்ட் செய்ததே கிடையாது.. கூட்டணி தலைமைக்கு எந்தவிதமான நெருக்கடியும் தந்ததில்லை.. அதனாலேயே தனிப்பட்ட மரியாதை எல்லா கட்சியினரிடமும் இவருக்கு இன்றுவரை இருக்கிறது... அதிலும், பிரதமர் மோடியின் அபிமானத்தை நேரடியாகவே பெற்றவர்.. வாசனை சந்திக்க வேண்டும் என்று பிரதமரே விருப்பப்பட்டு, நேரில் வரவழைத்து சந்தித்த தருணங்கள் நிறைய உண்டு..

 வாசன் வாசன்

வாசன் வாசன்

ஆனால், பிரதமரை அப்படி சந்தித்தபோதும்கூட, தனக்கான பதவி, பொறுப்பு வேண்டும் என்று வாசன் இதுவரை மோடியை நிர்ப்பந்தித்தது கிடையாது... 3 முறை மத்திய அமைச்சர் பொறுப்பு தருகிறோம் என்று 3 முறை கேட்டுக் கொண்டும், 3 முறையும் நிராகரித்த தலைவர்கள், வாசனை தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது.. இந்த குணம்தான், இப்போதுவரை வாசனை இழுத்து பிடித்து வைத்து வருகிறது.. ஒருவேளை கூட்டணிக்கு வாசன் தயாரானால், மற்ற கட்சிகளையும் ஒருங்கிணைக்கும்படி, வாசனிடம் பாஜக கேட்டுக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.. அதேபோல வாசன் கேட்டுக் கொண்டதற்காக, பிற கட்சி தலைவர்கள் மனம் மாறி பாஜகவுடன் கூட்டணி வாய்ப்பு உண்டு என்றாலும், வாசன் அவ்வாறு செய்வாரா? என்பது சந்தேகம்தான். என்ன நடக்க போகிறது? பார்ப்போம்..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+