"எங்களுக்கே மறந்துபோச்சு”.. என்டிஏ கூட்டணி பற்றிய கேள்விக்கு ஜி.கே.வாசன் சொன்ன அல்டிமேட் பதில்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "NDA கூட்டணியில் இருந்து ஏன் விலகினோம்? என்பது எங்களுக்கே மறந்து விட்டது. 100 நாட்களில் செய்த சாதனைகள் மூலம், இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெறும்" என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

நடைபெற இருக்கின்ற மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணிக்கு ஜிகே வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

GK Vasan says that We Have Even Forgotten Why We Left the NDA Alliance

இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமாகா தலைவர் ஜி.கே.வாசன், "தவெக ஆட்சியின் மக்கள் நலன் சார்ந்த 100 நாட்கள் நிறைவடைந்த நல்லாட்சிக்கு எடுத்துக்காட்டாக இரண்டு சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி வாய்ப்பு மிகச் சாதகமாக இருக்கும் என்று குறிப்பிட விரும்புகிறேன்.

கர்நாடக அரசு தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறப்பதற்கு முற்றிலும் சாத்தியமற்றது என்று கூறுவது ஒருபோதும் ஏற்புடையதல்ல. ஒழுங்காற்றுக் குழுவும் ஆணையமும் கூறிய பிறகும் கூட அவர்களுடைய பிடிவாதம் தேவையற்றது. கூட்டாட்சித் தத்துவத்திற்கு எடுத்துக்காட்டாக கர்நாடக அரசு செயல்பட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

நேர்மையான ஆட்சி தமிழகத்திலே தொடங்கியிருக்கிறது. அனைத்துத் துறைகளிலும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர்களும் தொண்டர்களும் நல்லாட்சிக்கு ஆதரவு கொடுக்கக்கூடிய முடிவை என்னிடம் கொடுத்தார்கள். அதன் அடிப்படையிலே ஆதரவு தெரிவித்தோம்.

நம்முடைய ஆட்சியாளருடைய கட்சி, ஆளுகின்ற கட்சி, நம்முடைய த.வெ.க பொதுச்செயலாளர், மூத்த அமைச்சர்கள் எல்லாம் என்னோடு பேசி நன்றி தெரிவித்ததை நான் குறிப்பிட விரும்புகிறேன். எல்லோரும் தற்போது தேர்தல் களத்திலே இருக்கிறார்கள். இடையிலே சந்தித்துப் பேசக்கூடிய நல்ல வாய்ப்பு ஏற்படும் என்பதையும் தெரிவிக்க விரும்புகிறேன்" என்றார்.

அப்போது செய்தியாளர்கள் என்.டி.ஏ கூட்டணியில இருந்து வெளியே வர என்ன காரணம் எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு ஜி.கே.வாசன், "அது எங்களுக்கே மறந்து போச்சு, நீங்க ஞாபகப்படுத்துறீங்களா" எனச் சிரித்தபடி கேள்வி எழுப்பினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+