இறங்கி வந்த தேமுதிக.. மரத்தில் ஏறிய தமாகா.. அதிமுக கூட்டணியில் ஒரே தமாஷ்தான்!
அதிமுக கூட்டணியுடன் பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெறுவதாக வாசன் கூறியுள்ளார்.
Recommended Video

சென்னை: கத்தி போய் வாள் வந்த கதையாக... தேமுதிக முடிந்து தமாகா பிடிவாதம் காட்ட ஆரம்பித்துள்ளது.
பழசை மறக்க கூடாது என்ற ஒரே காரணத்துக்காக அதிமுகவிலேயே மீண்டும் வாசன் கூட்டணி வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது.. இப்போதும் அதே நிலைமைதான்! ஆனல் என்னமோ இழுபறியே நீடித்து வருகிறது.
மோடி சென்னை வந்த அன்று அந்த மேடையில் விஜயகாந்த் படம், கொடிகள் இறக்கியும், ஏற்றியும் வைக்கப்பட்டு கசமுசா ஆனதோ, அதேபோன்று சம்பந்தமே இல்லாமல் அந்த படங்கள், கொடிகளுடன் ஏடாகூடமானது வாசனின் படமும், கொடியும்தான்!

இரட்டை இலை
எப்படியும் தமாகா அதிமுகவுடன் அணி சேரும் என்றே நினைக்கப்பட்டாலும், வாசனுக்கு ஒன்றுதான் என்பதும் அதுவும் மயிலாடுதுறை மட்டும்தான் ஒதுக்க முடியும் என்பதும் அதிமுகவின் பிளான் ஆகும். இரட்டை இலை சின்னத்தில் தான் தமாகா போட்டியிட போகிறது என்றாலும், வாசன் கேட்டதோ 3 தொகுதிகள்.

இழுபறி
இதனிடையே தேமுதிகவில் இழுபறி என்றதும், அந்த கூட்டணிக்கு 3தான் தரப்படும் என்ற செய்திகள் பரவியதும் எப்படியும் தனக்கு 3 சீட்டுகள் கன்பார்ம் என்றுதான் வாசன் நினைத்தார். எவ்வளவுக்கெவ்வளவு தேமுதிகவுக்கு சீட் குறைகிறதோ அவ்வளவும் தனக்குதான் என்றும் கணக்கு போட்டார்.

2 சீட்டுக்கள்
ஆனால் நேற்று 4 தொகுதிகள் தேமுதிகவுக்கு முடிவாகி விட்டதால், வாசன் இடிந்துபோய் உள்ளாராம். எப்படியோ 2 சீட்டாவது தர மாட்டார்களா என்றே யோசிக்கிறாராம்.

ஒத்த கருத்து
நேற்று சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘‘அதிமுகவுடன் தமாகா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஒத்த கருத்து ஏற்பட்டால் மட்டுமே, அதிமுகவுடன் கூட்டணி. அது சம்பந்தமாக இன்னும் 2 நாட்களில் அறிவிக்கப்படும்" என்றார்.

பிடிவாதம்
ஒருவேளை ஒத்த கருத்து ஏற்படாவிட்டால், என்னாகும் என்று தெரியவில்லை. இன்னொரு விஜயகாந்த்தாக அதாவது தேமுதிக பார்ட்-2 ஆக வாசனின் தமாகா உருமாற போகிறதோ என்ற கேள்வியும் கூடவே எழுந்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications