மதில் மேல் பூனையாக ஜி.கே.வாசன்! முடிவெடுக்க முடியாமல் திணறல்! கண்டுகொள்ளாத அதிமுக!
சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் திமுக, அதிமுக வேகம் காட்டி வரும் நிலையில் இன்னும் பல கட்சிகள் கூட்டணி தொடர்பான எந்த முடிவையும் எடுக்காமல் திணறி வருகின்றன.
குறிப்பாக அதிமுக -பாஜக கூட்டணியில் பயணித்த தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம், ஆகிய இரண்டு கட்சிகளும் மதில் மேல் பூனையாக நிற்கின்றன. அதிமுக பக்கம் செல்வதா, இல்லை பாஜக பக்கம் செல்வதா என முடிவெடுக்க முடியாமல் ஜி.கே.வாசன் தடுமாறி வருகிறார். காரணம் ஜி.கே.வாசனை ராஜ்யசபா உறுப்பினராக்கியது அதிமுக தான். அதே வேளையில் ஜி.கே.வாசனுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கச் சொல்லி அதிமுகவை வலியுறுத்தியதே பாஜக தான்.

இதனால் இரண்டு கட்சிகளுக்கும் கடமைப்பட்டவராக ஆகிறார் ஜி.கே.வாசன். அதுமட்டுமல்ல வாசன் மீது பிரதமர் மோடிக்கு மிகுந்த நன்மதிப்பு உண்டு. ஒரு கட்டத்தில் வாசன் மத்திய அமைச்சராக ஆகப் போகிறார் என்றெல்லாம் தகவல்கள் உலா வந்தன. இந்நிலையில் அதிமுக -பாஜக கூட்டணியில் ஏற்பட்ட விரிசலால் வாசன் கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்க முடியாமல் ஆலோசனை மேல் ஆலோசனை நடத்தி வருகிறார். ஜி.கே.வாசன் மீது பிரதமர் மோடி வைத்திருக்கும் மரியாதை காரணமாக அவரை பாஜக பக்கம் இழுப்பதற்கு வேலைகள் நடந்து வருகின்றன.
அதேவேளையில் ஜி.கே.வாசனை அதிமுக தலைமை பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை. வந்தால் வரவேற்போம், சென்றால் விட்டுவிடுவோம் என்ற மனநிலையில் தான் அதிமுக உள்ளது. காரணம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வாக்கு வங்கி இல்லை எனக் கருதுகிறது அதிமுக தலைமை. இருப்பினும் பிரச்சாரம் உள்ளிட்ட ஆதரவுக்கு வாசன் தேவைப்படுவார் என்பதும் அதிமுகவில் உள்ள ஒரு சில நிர்வாகிகளின் எண்ணமாக உள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவிடம் போராடி தஞ்சாவூர் தொகுதியை கேட்டு வாங்கிய ஜிகே வாசன், அங்கு ஆட்டோ ரிக்ஷா சின்னத்தில் தனது கட்சியின் சார்பில் வேட்பாளரை போட்டியிட வைத்தார். புதிய தமிழகம் கிருஷ்ணசாமியை பொறுத்தவரை அவரும் கூட்டணி தொடர்பாக இன்னும் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க முடியாமல் திணறி வருகிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications