பாமக இளைஞரணித் தலைவராக தமிழ்குமரன் நியமனம்! லைகா திரைப்பட தயாரிப்பு நிறுவன அதிகாரிக்கு ஜாக்பாட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவராக ஜி.கே.எம்.தமிழ் குமரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் பாமக முன்னாள் தலைவர் ஜி.கே.மணியின் மகன் ஆவார். தற்போது லைகா திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

பாமக இளைஞரணித் தலைவர் பதவி என்பது அன்புமணி ராமதாஸ் வகித்த பதவி என்பதால் அதனை பெறுவதற்கு பலரும் முயற்சித்த நிலையில் கடைசியில் ஜி.கே.மணியின் கை ஓங்கியுள்ளது.

 பாமக தலைவர்

பாமக தலைவர்

பாமக இளைஞரணித் தலைவராக இருந்த அன்புமணி ராமதாஸ் சில மாதங்களுக்கு முன்னர் கட்சியின் தலைவராக புரோமோஷன் பெற்றார். இதையடுத்து அவர் வகித்து வந்த இளைஞரணித் தலைவர் பதவியை கைப்பற்ற பாமக முன்னணி நிர்வாகிகள் பலரும் ஆர்வம் காட்டினர். படித்த, நிர்வாக திறமைமிக்க ஒருவரை அந்தப் பதவியில் அமர்த்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து தேடலில் இருந்து வந்தார்.

ஜி.கே.மணி மகன்

ஜி.கே.மணி மகன்

இந்நிலையில் அன்புமணிக்காக பாமகவில் தலைவர் பதவியை ராஜினாமா செய்து வழிவிட்டு ஒதுங்கிக் கொண்ட ஜி.கே.மணி தனது மகன் தமிழ் குமரனை பாமக இளைஞரணித் தலைவராக்க விரும்பினார். இதையடுத்து அதற்கான காய் நகர்த்தலில் ஈடுபட்ட வந்த அவர் இறுதியில் வெற்றியும் பெற்றுவிட்டார். பாமக இளைஞரணித் தலைவராக ஜி.கே.மணியின் மகன் ஜி.கே.எம்.தமிழ் குமரனை நியமித்த ராமதாஸ் அதற்கான நியமன கடிதத்தை நேற்று வழங்கியுள்ளார்.

சினிமா தொழில்

சினிமா தொழில்

ஜி.கே.மணியின் மகன் ஜி.கே.எம்.தமிழ் குமரனை பொறுத்தவரை நன்கு படித்தவர் என்பதோடு மட்டுமல்லாமல் நிர்வாகத் திறமையும் மிக்கவர். பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான லைகாவில் தலைமை அதிகாரியாக அவர் பணியாற்றி வருகிறார். இதனால் இவரது தொடர்புகள், நட்புகள் அனைத்தும் கடல் கடந்தும் பரந்து விரிந்து உள்ளன. இவை அனைத்தும் பாமகவின் வளர்ச்சிக்கு ஏதோ ஒரு வகையில் உதவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தைலாபுரம் தோட்டம்

தைலாபுரம் தோட்டம்

தைலாபுரம் தோட்டத்தில் ராமதாசிடம் நியமன கடிதம் பெறுவதற்காக சென்ற ஜி.கே.எம்.தமிழ் குமரனுக்கு, இளைஞரணித் தலைவர் பதவியில் எவ்வாறு செயல்பட வேண்டும், என்னென்ன மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்பது பற்றியெல்லாம் பாடம் நடத்தியிருக்கிறார் ராமதாஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+