5000 ரூபாய் ஜாக்பாட்.. 50% மானியம் உண்டு.. கிரைண்டர் வேணுமா? பெண்களுக்கு சர்ப்ரைஸ் தந்த தமிழக அரசு
சென்னை: மகளிர் உதவித்திட்டம், அறிவுசார் குறைபாடு உடையோர், தொழுநோயாளிகள் உள்ளிட்டோருக்கு மாதம் ரூ.2,000 பராமரிப்பு உதவித் தொகை, வீட்டு மனை பட்டா, விடியல் பயணம் என பெண்களின் நலனுக்காகவே ஏராளமான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், முக்கிய அறிவிப்பு ஒன்று சட்டப்பேரவையில் வெளியாகியிருக்கிறது. இது அனைத்து தரப்பு மக்களுக்குமே உற்சாகத்தையும், நம்பிக்கையையும், தைரியத்தையும், மகிழ்ச்சியையும் தந்து வருகிறது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடந்து வருகிறது. இதில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

மனநலம் குன்றிய குழந்தைகளின் பெற்றோர்களுக்கு உரிமை தொகை மறுக்கப்படுவதால், அவர்களுக்கும் மகளிர் உரிமை தொகை வழங்க வேண்டும் என்று எம்எல்ஏ தங்கமணி கோரிக்கை விடுத்தார்..
மாற்றுத் திறனாளிகள் ரு.1000
அதற்கு பதிலளித்த அமைச்சர் கீதா ஜீவன்,"மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை பெற்றாலும் அந்த குடும்பத்திலுள்ள பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை பெறலாம் என்று விதிவிலக்கு உள்ளது. மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை பெறும், குடும்பத்திலுள்ள மகளிருக்கும் ரூ.1000 வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருக்கிறார்" என்றார் கீதா ஜீவன்.
அமைச்சரின் இந்த அறிவிப்பானது, மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்திலுள்ள பெண்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது. அதேபோல,
சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை மானியக் கோரிக்கை குறித்த அறிப்புகளையும் அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்டார். இந்த அறிவிப்பில் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு உதவிடும் வகையில், பல திட்டங்கள் உள்ளிட்ட 22 புதிய அறிவிப்புகளையும் அமைச்சர் வெளியிட்டிருக்கிறார்.
பெண்களுக்கான திட்டங்கள்
அதில் சத்துணவு மையங்களில் எரிவாயு அடுப்பு, பாலூட்டும் தாய்மார்களுக்கு பயிற்சி,பெண்களுக்கு கிரைண்டர், பள்ளி மாணவர்கள் போதை பழக்கத்தில் மீள நடவடிக்கை, அரசு கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள் , பாதுகாப்பு இல்லங்கள் , IVRS தொழில்நுட்ப வசதி,சமூக நல அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள், திருநங்கைகளுக்கான "அரண்" என்ற பெயரில் 2 தங்கும் இல்லங்கள் போன்றவை அறிவிக்கப்பட்டுள்ளன.
"அரண்" என்ற பெயரில் 2 தங்கும் இல்லங்கள், சென்னை மற்றும் மதுரையில் ரூ.64 லட்சம் செலவில் திருநங்கைகளுக்காக அமைக்கப்படுகிறது. அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்புகளில், கிரைண்டர் குறித்த அறிவிப்பு பெண்களை ஈர்த்து வருகிறது..
ஈர மாவு கிரைண்டர்
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு, 2000 மகளிருக்கு உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்க மொத்தம் 1 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும்.
தமிழ்நாடு அரசின் மூலம் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு ரூபாய் 10,000 அல்லது அதற்கு மேல் மதிப்பிலான உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்கும்போது, மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூபாய் 5000/- மானியத் தொகையாக வழங்கப்படும்.
இத்திட்டத்தில் கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இத்திட்டத்தில் 2000 மகளிருக்கு மொத்தம் 1 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்திருக்கிறார்.
சுயதொழில் தொடங்க மானியம்
தமிழக அரசை பொறுத்தவரை, பல்வேறு திட்டங்கள் மூலம் பெண்களுக்கு மானியத்தொகை வழங்கி வருகிறது.. சுயதொழில் தொடங்க ரூ. 50,000 மானியம், மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் ரூ. 18,000 நிதி உதவி, சமையல் எண்ணெய் உற்பத்தி செய்யும் பெண்களுக்கு ரூ. 3 லட்சம் வரை கடன் மற்றும் 50% மானியம் போன்ற திட்டங்கள் உள்ளன.
எனினும், தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மகளிர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த புதிய முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, கிரைண்டருக்கு 5 ஆயிரம் மானியம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது, பெண்களுக்கு மிகுந்த நம்பிக்கையையும், உற்சாகத்தையும் தந்து வருகிறது.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு












Click it and Unblock the Notifications