"மிஸ் பண்ணிடாதீங்க".. பொங்கல் பரிசு தொகுப்பை எந்த ரேஷன் கடையிலும் பெறலாமா?.. இதோ இதை பாருங்க

பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த சந்தேகத்தை உணவுத்துறை அதிகாரிகள் தீர்த்துள்ளனர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்காக தமிழக மக்கள் மகிழ்ச்சியுடன் தயாராகி வருகிறார்கள்.. எனினும், அந்த பரிசு தொகுப்பை, எந்த ரேஷன் கடைகளிலும் நாம் பெற்றுக் கொள்ள முடியுமா? என்ற சந்தேகம் எழுந்த நிலையில், அதற்கு தெளிவான விளக்கத்தையும் உணவுத்துறை அதிகாரிகளே கூறியுள்ளனர்.

பொங்கல் பண்டிகை ஜனவரி 15ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடுவதற்காக தமிழக அரசு பொங்கல் பரிசுத்தொகுப்பை அறிவித்திருக்கிறது.

21 வகையான பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. பொங்கல் பரிசுத்தொகுப்பில் மீண்டும் ரொக்கப்பணம் சேர்த்து இருந்தது மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது.

 கிஃப்ட் தொகுப்பு

கிஃப்ட் தொகுப்பு

நேற்றுமுன்தினம், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நியாயவிலைக் கடையில் அமைச்சர்கள் பெரிய கருப்பன் ஆய்வு மேற்கொண்ட நிலையில் செய்தியாளர்களிடம் பேசினார்.. அப்போது, "பொங்கல் தொகுப்பை முறையாக வழங்க வேண்டும் கடைகளில் பணியாற்றுபவர்களுக்கு எந்த விதமான சிக்கல்களும் இருக்கக் கூடாது என்பதற்காக தற்போது அனைத்து கடைகளிலும் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.. 8ம் தேதி வரை இந்த டோக்கன் விநியோகம் நடைபெற உள்ளது.. 9ம் தேதி, முதல்வர் சென்னையில் ஏதாவது ஒரு இடத்தில் இந்தத் திட்டத்தை தொடங்க உள்ளார்..

"பவர்" எங்கே

பொங்கலுக்கு வழங்கப்படும் ரொக்கம் ரூபாய் ஆயிரம், பொருட்கள் வழங்கும்பொழுது நியாய விலை கடைகளில் வழங்கப்படும்.. வங்கிகளில் இப்போது கொடுக்கின்ற உத்தேசம் இல்லை, ஆனால், குறைபாடு இல்லாமல் பொங்கல் தொகுப்பு விநியோகிக்கப்படும்.. முதியோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட வர இயலாதவர்கள் "பவர்" கொடுத்து வாங்கிக் கொள்ளலாம். மற்றவர்களுக்கு பயோ மெட்ரிக் முறை கட்டாயம்.. அதில் சுட்டிக்காட்டும் அளவிற்கு ஏதாவது தவறு நடந்திருந்தால் ஆதாரத்துடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியிருந்தார்.

 ஹோப் தகவல்

ஹோப் தகவல்

இந்நிலையில், எந்த ரேஷன் கடையிலும் உணவு பொருட்களை வாங்கும் வசதி உள்ளநிலையில், பொங்கல் பரிசு தொகுப்பையும் கார்டில் வாங்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.. காரணம், 2 வருடங்களுக்கு முன்பு, மாநிலத்தின் எந்த பகுதியிலும் உள்ள நியாயவிலைக் கடையிலும் பொருட்கள் வாங்கும் வகையில் "ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு" புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதாவது, வேலை நிமித்தமாக வேறு ஊர்களுக்கு இடம்பெயர்ந்தவர்களுக்கு இந்த திட்டம் உதவியாக அமையும் என்பதாலேயே இந்த சலுகை திட்டம் கொண்டு வரப்பட்டது..

 அட்ரஸ் சேஞ்ச்

அட்ரஸ் சேஞ்ச்

யாராவது அட்ரஸ் மாறி வேறு இடத்துக்கு சென்றாலும்கூட, ரேஷன் கார்டில் அட்ரஸ் மாற்றம் செய்யாமலேயே, புதிய இடத்திலுள்ள ரேஷன் கடையில் பொருட்களை வாங்கி கொள்ளலாம்.. இதன்மூலம், மின்னணு குடும்ப அட்டை இல்லாதவர்கள் தங்களது ஆதார் நம்பர், பதிவு செய்த செல்போன் நம்பருக்கு வரும் ஒருமுறை பயன்படுத்தும் பாஸ்வேர்டு ஆகியவற்றை பயன்படுத்தி, எந்த ரேஷன் கடையிலும் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்பதே அந்த சலுகையாகும்.. எனவே, இந்த சலுகையை வைத்து, பொங்கல் பரிசு தொகுப்பையும் எந்த ரேஷன் கடையிலும் வாங்கி கொள்ளலாமா? என்ற குழப்பம் சிலருக்கு ஏற்பட்டு வருகிறது.

 கிளியராகிடுச்சு

கிளியராகிடுச்சு

இந்த பொங்கல் தொகுப்பை, ரேஷன் கார்டில் உள்ள முகவரிக்கு ஒதுக்கிய கடையில் மட்டுமே வாங்க முடியுமாம்.. உணவு துறை அதிகாரி ஒருவர் இதை பற்றி சொல்லும்போது, பொங்கல் பரிசில் 1,000 ரூபாய் ரொக்கம் இடம்பெற்றுள்ளது.. அதை எந்த ரேஷன் கடையிலும் வாங்க அனுமதி அளித்தால், முறைகேடு குழப்பங்கள் ஏற்படும்.. பரிசு தொகுப்பு வாங்குவதற்காகவே, கார்டுதாரர்களின் வீடுகளில் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது... கார்டுதாரர்கள், கார்டில் உள்ள முகவரிக்கு ஒதுக்கிய ரேஷன் கடையில் மட்டுமே, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்" என்று தெளிவுபடுத்தி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+