"பச்சை கொடி"யோடு வந்த ஜவாஹிருல்லா.. நாங்க எதுக்காக திமுகவுக்கு வேலை செய்யணும்? இதான் பேராசிரியர்
சென்னை: இன்றுடன் பிரச்சாரம் முடிவடையும் நிலையில், திமுக கூட்டணி வெற்றிக்காக, தோழமை கட்சிகள் நடத்திவரும் பிரச்சாரங்கள் கவனம் பெற்று வருகின்றன.
வரப்போகும் தேர்தலில் எப்படியாவது, திமுக கூட்டணியில் இடம் பிடித்துவிடுவது என்பதில் மனித நேய மக்கள் கட்சி நிறையவே ஆர்வம் காட்டியது.. பல்வேறு வகையில் முயற்சி செய்தது..

சாய்ஸ்: போட்டியிடுவதற்காக ஒரு தொகுதியை திமுகவிடம் கேட்டது. 40 தொகுதிகளில் எந்த தொகுதியை கொடுத்தாலும் போட்டியிடுவோம் என்று, திமுகவுக்கு சாய்ஸையும் தந்தது.
ஆனால், 1 சீட் கூட தராமல், கோரிக்கை நிராகரிக்கப்பட்டுவிட்டது. இதனால், கடும் அதிருப்திக்கு ஆளாகிவிட்டதாம் மனித நேய மக்கள் கட்சி.. "இதுநாள்வரை திமுகவை விமர்சித்துவிட்டு, இப்போது வந்த கமலுக்கு கூட சீட் தந்து ஒப்பந்தம் போட்டிருக்காங்க. இத்தனை வருஷமாக, திமுகவின் வெற்றிக்காக உழைத்தும் பலனில்லையே" என்று ஆதங்க குரல்கள் மமநீ நிர்வாகிகளிடம் வெடித்ததாக செய்திகள் கசிந்திருந்தன.
இதனால், திமுக கூட்டணியில் இருப்பதா? விலகுவதா? யாருக்கு ஆதரவு தருவது? என்றெல்லாம் குழம்பிப்போனதாம்.. ஆனால், இறுதியில், திமுகவுக்கே தன்னுடைய ஆதரவை தருவதாக அறிவித்தது மனித நேய மக்கள் கட்சி.
அபாயம்: ஜவாஹிருல்லா இதுகுறித்து அப்போது செய்தியாளர்களிடம் பேசியிருந்தார்.. இதற்கான காரணத்தையும் விளக்கியிருந்தார்.. "நாட்டை பாசிச அபாயத்திலிருந்து மீட்பதற்காக, திமுக தலைமையிலான அணியை ஆதரிப்பது என்று எங்கள் நிர்வாகிகளிடம் கூடி செயற்குழுவில் முடிவு செய்துள்ளோம். வருகிற 2025ம் ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து நிரப்பப்படும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில், ஒரு தொகுதி மமகவுக்கு கட்டாயமாக ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்" என்றார்.
அந்தவகையில், திமுக கூட்டணிக்கான முழு ஆதரவை மனிதநேய மக்கள் கட்சி தந்துள்ளதுடன், தேர்தல் பணிகளிலும் தோழமை கட்சிகளின் வெற்றிக்காக, அதிரடியாக களமிறங்கியது.. இதோ கடைசி நாளான இன்றுவரை, தீவிர பிரச்சாரத்தையும் முன்னெடுத்து வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில்தான், ஒரு பிரபல சேனலுக்கு ஜவாஹிருல்லா பேட்டி தந்திருக்கிறார்.. ஒரு இடம் கூட கொடுக்காதபோதும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வது ஏன்? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
ஜவாஹிருல்லா: இதற்கு ஜவாஹிருல்லா பதிலளிக்கும்போது, "இந்த தேர்தல் சர்வாதிகாரத்துக்கும், ஜனநாயகத்துக்கும் இடையே நடைபெறும் அறப்போர். எங்களுக்கு ஒரு சீட் கூட ஒதுக்காதது வருத்தம் தான்... அதில் மாற்றுக்கருத்து எதுவுமில்லை.. ஆனால் அதைவிட மிகப்பெரிய வலி என்னவென்றால், 10 வருடகாலம் பாஜக ஆட்சியில் ஜனநாயகத்தின் விழுமியங்கள், அரசியல் சாசனத்தின் அடிப்படைகள் மீறப்பட்டு பல்வேறு தரப்பட்ட மக்களின் வாழ்வுரிமைகள் பாழ்படுத்தப்பட்டுள்ளன.
தனிப்பட்ட பாதிப்பை விட நாட்டை காப்பாற்ற வேண்டும் என்ற பொது நோக்கத்துக்காக இந்த தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம்.. நான் செல்லக் கூடிய இடங்களில் எல்லாம் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு அமோக ஆதரவு இருக்கிறது" என்றார்.
பொது எதிரி: கிட்டத்தட்ட இதே காரணத்தைதான், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனும் தெரிவித்துள்ளார்.. "பொது எதிரியை வீழ்த்த ஜனநாயக சக்திகள் அமைத்திருக்கும் கூட்டணி இது. அப்படித்தான் இதை கொள்ள வேண்டும். இது அரசியல் கூட்டணி அல்ல. அதையும் தாண்டிய கூட்டணி. மதத்தையும் அரசியலும் ஒன்றாக பிணைத்து அரசியல் செய்யும் எந்த அரசும் நிலைத்ததாகச் சரித்திரம் கிடையாது. மதத்தை வைத்து நாட்டை பிரிக்க பாஜக அரசு முயற்சி செய்கிறது" பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டியிருந்தார்.
மொத்தத்தில் சீட் தராவிட்டாலும்கூட, கூட்டணியில் இல்லாவிட்டாலும்கூட, திமுகவுக்காக, தோழமைகள் இணைந்துள்ளதும், தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்து வருவதும், தமிழக மக்களின் கவனத்தை பெற்று வருகின்றன.
-
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
காங்கிரஸை நாயுடன் ஒப்பிட்ட நடிகர் போஸ் வெங்கட்! கைநழுவும் அறந்தாங்கி தொகுதி சீட்? டென்ஷன் -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி












Click it and Unblock the Notifications