Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்டார் ஹோட்டலில்.. கவர்ச்சி உடையில் ஆபாச நடனம்.. பெண்ணுடன் டான்ஸ் ஆடுவது யார் பாருங்க.. சென்னை பரபர

Subscribe to Oneindia Tamil

சென்னை: இணையத்தில் டான்ஸ் வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது.. நெட்டிசன் ஒருவர் ஷேர் செய்திருக்கும் இந்த வீடியோவை கண்ட, பொதுமக்கள் கொந்தளித்து போயிருக்கிறார்கள். அத்துடன் தாறுமாறான கமெண்ட்களையும் பதிவிட்டு, விமர்சித்து வருகிறார்கள்.. என்ன நடந்தது?

பெருங்குடல் மற்றும் மலக்குடல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் சார்பில், வருடா வருடம் மாநாடு நடத்தப்படுவது வாடிக்கையாகும்.. அந்தவகையில், இந்த வருடத்துக்கான மாநாடும், கடந்த செப்டம்பர் 19 முதல் 21 வரை சென்னையில் நடைபெற்றது..

medical conference vulgar dance


மருத்துவர்கள் மாநாடு:
சென்னையில் உள்ள தாஜ் கோரமண்டலில் இந்த மாநாடு நடந்து முடிந்தது. இதில், அகில இந்திய அளவிலிருந்து ஏராளமான மருத்துவர்கள் பங்கேற்றிருந்தனர்.

வழக்கமாக மாநாடுகளை நடத்தும்போது, சிலர் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்வார்கள்.. அந்தவகையில், மருத்துவர்கள் பங்கேற்கும் மாநாடு என்பதால், இதில் கலை நிகழ்ச்சி நடத்தப்பட வாய்ப்பிருக்காது என்றே பலரும் நினைத்தனர். ஆனாலும், இந்த கணிப்புகள் தகர்ந்து, நடன நிகழ்ச்சியும் நடத்தப்பட்டுள்ளது.

கவர்ச்சி டான்ஸ்: அதுவும், மிகவும் மோசமான உடையணிந்து, ஆபாசமாக பெண் நடனமாடியிருப்பது , அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது. இதில் ஒருபெண், குட்டியாக ஷார்ட்ஸ் மற்றும் மெல்லிய டாப்ஸ் அணிந்து கொண்டு, "ரா ரா ராக்கம்மா, அட்ரா சக்க" என்ற கன்னட பாடலுக்கு டான்ஸ் ஆடுகிறார். இதனை ஏராளமானோர் கையில் மதுக்கோப்பையுடன் உட்கார்ந்து ரசிக்கிறார்கள்.

ஆபாச நடனஅசைவுகளுடன் ஆடிக்கொண்டிருந்த அந்த பெண், தன்னுடன் ஜோடி சேர்ந்து ஆடுவதற்கு, அங்கிருந்த ஆண்களையும் அழைக்கிறார்.. உடனே, பார்வையாளர்களில் சிலர், கையில் மதுபானத்துடனேயே எழுந்து சென்று, அந்த பெண்ணுடன் சேர்ந்து டான்ஸ் ஆடுகிறார்கள்.. அதிலும் 50, 60 வயதுடைய மருத்துவர்களும் எழுந்து சென்று அந்த பெண்ணை கட்டிப்பிடித்து நடனமாடுகிறார்கள்..

ஆபாச நடனம்: அந்த பெண்ணை பார்த்து, பார்வையாளர்கள் சிலர் விசில் அடிக்கிறார்கள்.. ACRSICON 2024 என்ற பெயரில், ஒரு பேனரும் அங்கே வைக்கப்பட்டிருப்பதை வீடியோவில் காண முடிகிறது. இந்த வீடியோதான் இணையத்தில் வெளியாகி உள்ளது.. சர்ச்சைக்குரிய நடன நிகழ்ச்சி எப்போது, ​​யாரால் ஏற்பாடு செய்யப்பட்டது என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால், பெண்கள் யாருமே இந்த மாநாட்டில் பங்கேற்காதது ஆச்சரியத்தை தந்து வருகிறது.

இதைப்பார்த்த நெட்டிசன்கள், இதென்ன வித்தியாசமான மருத்துவ பயிற்சியா? வயதான டாக்டர்கள் ஒரு பெண்ணை இப்படி கட்டிப்பிடித்து பொதுவெளியில் ஆடுவது சரியா? என்றெல்லாம் இந்திய மருத்துவ சங்கத்திடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இணையவாசிகள்: எனினும், சிலர் வீடியோவுக்கு தங்கள் ஆதரவையும் தந்து வருகிறார்கள்.. "டாக்டர்கள் என்றால், டான்ஸ் ஆடக்கூடாதா? அவர்களும் மனிதர்கள்தானே? எப்பவுமே, வாழ்நாள் முழுவதும் கடின உழைப்பையும் போராட்டத்தையும் மட்டுமே செய்து கொண்டிருக்க வேண்டுமா? சில சமயங்களில் அவர்களுக்கும் மகிழ்ச்சி ஏற்படத்தானே செய்யும்?" என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

இதற்கு சிலர் பதிலளிக்கும்போது, "நடனமாடுவதும், ஜாலியாக இருப்பதும் தவறில்லை. அதுக்காக இப்படியொரு கருத்தரங்கில்தான் டான்ஸ் ஆட வேண்டுமா? இது என்ன மாதிரியான மாநாடு? இது பலவீனமான பாலின சுரண்டல் இல்லையா? மிகவும் வெட்கக்கேடானது" என்று பதிவிட்டு வருகிறார்கள்.

காரசார விவாதம்: கடவுளுக்கு இணையாக போற்றப்படும் மருத்துவர்கள் மாநாட்டில் இப்படியொரு ஆபாச நடனமா? என்று ஒருசாராரும், மருத்துவர்கள் என்றாலும் அவர்களும் மனிதர்கள்தானே என்று மற்றொரு சாராரும், விவாதத்தை முன்வைத்து வரும்நிலையில், இந்த பெண்ணின் கவர்ச்சி நடனம் இணையத்தை கலக்கி கொண்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+