மார்ச் 27 இல் தமிழ் பெண்ணை மணக்கிறார் கிளென் மேக்ஸ்வெல்.. டிரென்டாகும் திருமண பத்திரிகை!
மெல்போர்ன்: ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் தமிழ் பெண்ணான வினி ராமனை வரும் மார்ச் மாதம் 27ஆம் தேதி மணக்கிறார்.
Recommended Video
ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல். அதிரடி பேட்டிங்கிற்கு சொந்தக்காரர், சிறப்பான ஸ்பின் பவுலரான இவர் கடந்த முறை ஐபிஎல்லில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் சிறப்பாக விளையாடினார். இதையடுத்து இந்த முறை ஐபிஎல் ஏல போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சரஸ் அணி இவரை 11 கோடிக்கு ஏலம் எடுத்து தக்க வைத்து கொண்டது.

ஆஸ்திரேலியாவில் வளர்ந்த தமிழ் பெண்
இந்த நிலையில் கிளென் மேக்ஸ்வெல்லும் ஆஸ்திரேலியாவில் வளர்ந்த தமிழ் பெண்ணான வினிராமனும் நீண்டகாலமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவர் வீட்டிலும் இதற்கு சம்மதம் தெரிவித்ததால் கடந்த 2020 ஆம் ஆண்டு இந்திய முறைப்படி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

ஊரடங்கு உத்தரவு
இதையடுத்து கொரோனா பரவல், ஊரடங்கு உத்தரவு உள்ளிட்டவைகளால் இவர்களுடைய திருமணம் தள்ளி போனது. இந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து இருவருக்கும் மார்ச் 27ஆம் தேதி திருமணம் காலை 11.35 மணிக்கு மேல் 12.35 மணிக்குள்ளாக (ஆஸ்திரேலிய நேரப்படி) ரிஷப லக்கினத்தில் திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாம்பலம்
இந்த திருமணத்திற்காக மஞ்சள் பத்திரிகை அடிக்கப்பட்டுள்ளது. அதில் சிரஞ்சீவி கிளென் மேக்ஸ்வெல் என போடப்பட்டுள்ளது. வினிராமன் சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் ஆஸ்திரேலியாவில் பார்மஸி படித்து வந்தார். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்து தற்போது கல்யாணம் வரை வந்துவிட்டது. இவர்களது திருமணத்தை காட்டிலும் தமிழில் அச்சடிக்கப்பட்ட இவர்களது திருமண பத்திரிகை வைரலாகி வருகிறது.

வினிராமன்
இவர்களுக்கு மெல்போர்னில் திருமணம் நடத்தப்படுகிறது. வினிராமனின் பெற்றோர் வெங்கட்ராம ராமானுஜ தாஸன், ஸ்ரீமதி விஜயலட்சுமி ராமன் என்றும் அது போல் மேக்ஸ்வெல்லின் பெற்றோர் நீல் மேக்ஸ்வெல்- ஜாய் என்றும் அந்த பத்திரிகையில் போடப்பட்டுள்ளது. இவர்களது திருமணம் கன்னிகாதானம் செய்து கொடுக்கப்படுகிறது. அதாவது முழுக்க முழுக்க பெண் வீட்டார் ஏற்பாட்டில் இந்த திருமணம் நடைபெறும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications