சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குழந்தைகளுக்கு கொரோனா பரவல்.. டாஸ்க் போர்ஸ் அமைத்த சென்னை க்ளெனீகல்ஸ் மருத்துவமனை

Google Oneindia Tamil News

சென்னை: க்ளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியின் குழந்தை மருத்துவ பணிக் குழு கோவிட்-19 அதிகரிப்பை எதிர்த்துப் போரிடத் தயாரிப்புப் பணியை தீவிரமாக்குகிறது.

ஜனவரி 5, 2022 க்ளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியில் உள்ள குழந்தை மருத்துவ பணிக்குழு (GGHC) ஓமிக்ரோன் மாறுபாட்டின் அதிகரித்த நிகழ்வுகளுக்குப் பிறகு, குறிப்பாக குழந்தைகளிடையே, கோவிட் -19 நோய்வாய்ப்பட்டவர்களைக் கையாளத் தயாராகிறது. இந்தக் குழு உலகின் பிற பகுதிகள் மற்றும் பிற இந்திய நகரங்களில் உள்ள போக்குகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது, மேலும் இதுவரை தடுப்பூசி போடப்படாத, மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள நோயாளிகளைக் கையாள ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களது தயாரிப்புகளைத் தீவிரப்படுத்துகிறது.

Gleneagles Hospital gears up to handle Covid 19 cases

சென்னையில், ஒரு முழுநேர குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை மருத்துவர் மற்றும் குழந்தை தொற்று நோய் நிபுணர் மற்றும் ஒரு பொது குழந்தை மருத்துவரைக் கொண்ட குழந்தை மருத்துவர்களின் பல்துறை சிறப்புக் குழுவைக் கொண்டிருக்கும் ஒரே மருத்துவ மனை என்பதால் , இங்கே நிலைமையை எதிர்த்துப் போராடுவதற்கான தயார்நிலை மற்றும் நிபுணத்துவத்தின் அளவு அதிகமாகும்.
GGHC இல் இந்தப் பணிக்குழு, டாக்டர் பெருமாள் கர்ணன், அவர்களின் தலைமையிலும் அத்துடன் மூத்த ஆலோசகர் & கிளினிகல் லீட்- குழந்தை மருத்துவத் துறை, மற்றும் டாக்டர் ஸ்ரீலா ஷெரின் பாலையா, மூத்த ஆலோசகர் - நியோனாட்டாலஜி துறை, டாக்டர் மோகன் பாபு கசாலா, ஆலோசகர் - குழந்தைகள் தீவிர மருத்துவர், டாக்டர் பொன்னி சிவப்பிரகாசம், மூத்த ஆலோசகர் குழந்தை மருத்துவ இரத்தவியல் மற்றும் டாக்டர் ஜே ராஜ்குமார், ஆலோசகர் - குழந்தை மருத்துவம் -தொற்று நோயியல் ஆகியோரைக் கொண்டுள்ளது.

குழந்தைககளிடையே கோவிட் நோய்களைக் கையாள்வதற்கான ஒரு பிரத்யேக பகுதியையும் நாங்கள் கண்டறிந்துள்ளோம். பணிக்குழுவை வழிநடத்தும் , டாக்டர் பெருமாள் கர்ணன், மூத்த ஆலோசகர் & கிளினிகல் லீ,ட்- குழந்தை மருத்துவத் துறை, க்ளீனிகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி, சென்னை கூறுகையில், "உலகம் முழுவதும் கோவிட்-19 க்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகள் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரிப்பதை நாங்கள் அவதானித்துள்ளோம். இது மூன்றாவது அலையானது நம்மை நாமே தயார்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பை அளித்துள்ளது. நகரத்தில் கோவிட்-19 நோய்களின் தற்போதைய அதிகரிப்பு, தடுப்பூசி போடப்படாத குழந்தைகளுக்கு ஒரு இடையூறாகி தாக்கும் சாத்தியம் உள்ளது." என்று தெரிவித்தார். அதிக ஆபத்துள்ள குழுவுக்கு நிவாரணம் அளிக்க, GGHC இல் உள்ள குழந்தை மருத்துவ பணிக்குழு பின்வரும் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.

1) குழந்தை மருத்துவ சிகிச்சை நெறிமுறைகளை உருவாக்குதல்
2) குழந்தை நோயாளிகளைக் கையாள்வதற்கு பணியாளர்களுக்கான பயிற்சியை மீண்டும் அளித்தல்
3) குழந்தை மருத்துவத்துக்கான வயதுடையவர்களுக்கான சோதனையிடல் நெறிமுறைகளை கூட்டிணைவு செய்தல்
4) சிறிய குழந்தைகள் அவர்களது பெற்றோர்களுடன் இருக்க வேண்டும் என்பதால் வயதுக் குழுவின் அடிப்படையில் திட்டங்களை உருவாக்குவது
5) குழந்தைகள் குடும்பத்தில் அனைவருடனும் நெருக்கமாக இருப்பதால், முழு குடும்பத்துக்கும் நோய்த்தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் கூடுதலாக, 15-18 வயதினருக்கு தடுப்பூசி இயக்கத்தை விரைவில் தொடங்க GGHC தயாராகி வருகிறது. நோய் வாய்ப் படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாலும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படுவதாலும் , மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவது என்பது காலத்தின் தேவையாகும்.

நகரம் முழுவதும் அதிகரித்து வரும் கோவிட்-19 நோயை எதிர்த்துப் போராடுவதற்கான தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இந்திய அரசாங்கத்தால் வரையறுக்கப்பட்டுள்ளபடி, சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இணை நோய் கொண்ட 60 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கான முன்னெச்சரிக்கை டோஸ்களைப் போடும் பணியை GGHC தொடங்கும்.

இந்நிகழ்வின்போது உரையாற்றிய, டாக்டர். அலோக் குல்லர், தலைமை நிர்வாக அதிகாரி (CEO), க்ளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி, சென்னை, கூறுகையில் "2 வது அலை கோவிட்-19 நம்மைக் கடுமையாக தாக்கியது மேலும் வரவிருக்கும் மாறுபட்ட வகைகளுக்கு தயாராக இருக்க நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது. இந்த இக்கட்டான காலங்களில், 100% தடுப்பூசியை போடும் இலக்கை அடைவதற்கான அரசாங்கத்தின் முயற்சியை ஆதரிப்பதற்கான பொறுப்பையும் அர்ப்பணிப்பையும் நாங்கள் உணர்கிறோம்.

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா.. 3 மண்டலங்கள் ஹாட்ஸ்பாட்டாகிறதா?.. டேட்டா சொல்வது என்ன? சென்னையில் அதிகரிக்கும் கொரோனா.. 3 மண்டலங்கள் ஹாட்ஸ்பாட்டாகிறதா?.. டேட்டா சொல்வது என்ன?

Recommended Video

    Tamil Nadu announces Sunday lockdown, Night Curfew | OneIndia Tamil

    2 வது அலையின் நிலவரத்தைப் பார்க்கும்போது குழந்தைகளில் நோய்வாய்ப் படுபவர்களை சமாளிக்க குழந்தை மருத்துவ பணிக்குழுவை நாங்கள் தொடங்கினோம். இந்தப் பணிக்குழுவானது பரந்த அளவிலான குழந்தை மருத்துவத்தில் சிறப்பு சிகிச்சை மருத்துவர்களைக் கொண்டுள்ளது. மற்றும் இது குழந்தைகளுக்கான கோவிட் பராமரிப்பில் மட்டுமே கவனம் செலுத்தும் எங்கள் அனைத்து நோயாளிகளும் உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை மற்றும் சிறந்த மருத்துவப் பலன்களை அனுபவிப்பதை உறுதிசெய்ய சிறந்த சான்றுகள் அடிப்படையிலான நெறிமுறைகள் எங்களிடம் உள்ளன." என்று தெரிவித்தார்.

    English summary
    Paediatric Task Force at Gleneagles Global Health City is gearing up to handle Covid cases among Children.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X