ஞானசேகரனின் காக்கா வலிப்பும், காட்டி தந்த கால் ஹிஸ்டரியும்.. அரசு மருத்துவமனையில் டிராமா நினைவிருக்கா?
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரன் வழக்கில் சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கூறி அவர் குற்றவாளி என நீதிபதி அறிவித்துள்ளார்.. தன்மீதான குற்றச்சாட்டிலிருந்து தப்பித்து கொள்ள ஞானசேகரன் எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டும், அது கை கொடுக்காத நிலையில், இன்று குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கோட்டூர்புரம் மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்... இதில், கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் கைது செய்யப்பட்டு புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

பெண்கள் வீடியோக்கள்
அவரிடம் விசாரணையும் நடந்தது.. அப்போது, ஞானசேகரன் பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததும், பல பெண்களின் வீடியோக்கள் அவரது செல்போனில் இருந்ததும் கண்டறியப்பட்டது.. அதேபோல, 6 போலீசார் தொடர்ச்சியாக தொடர்பில் இருந்து வந்ததும் ஞானசேகரனின் 6 மாத செல்போனின் கால் ஹிஸ்டரிகளில் தெரியவந்தது.. இவர்கள் 6 பேருமே அடையாறு போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வருபவர்கள், காசு கொடுக்காமல் 6 பேரும் ஞானசேகரனின் பிரியாணி கடையில் ஓசி பிரியாணி சாப்பிட்டுவிட்டு போவார்களாம்.
முதல்நாளில் இத்தனை விவரங்களையும் சேகரித்துவிட்டு, 2வது நாளாக ஞானசேகரனிடம் விசாரணை ஆரம்பமானது. அப்போது அதிகாலை 3 மணியளவில், ஞானசேகரன் வலிப்பு நோயால் துடித்தார்..
அசைத்தபடி வலிப்பு
கண்களை மேல் நோக்கி பார்த்த நிலையில், கை மற்றும் கால்களை அசைத்தப்படி வலிப்பு ஏற்பட்டது.. இதைப்பார்த்த சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனே ஞானசேகரனை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் கைதிகளுக்கான சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டுள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு வலிப்பு நோய் தொடர்பாக டாக்டர்கள் ஞானசேகரனுக்கு தலையில் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்து பார்த்தனர்.
டாக்டர்களுக்கே குழப்பம்
அப்போது, வலிப்பு ஏற்பட்டதற்கான எந்த அறிகுறிகளும் ஏற்படவில்லை என்று அந்த எம்ஆர்ஐ ஸ்கேன் ரிப்போட்டு அம்பலப்படுத்தியது.. இதனால் டாக்டர்களே குழப்பமடைந்துவிட்டார்கள்..
உடனே ஸ்கேன் ரிப்போர்ட்டை எடுத்துக் கொண்டு, மூத்த டாக்டர்களிடம் காண்பித்து ஆலோசனை நடத்தினார்கள்.. ஞானசேகரன் உடல் நிலை நன்றாகவே இருப்பதும், இந்த விசாரணையை திசை திருப்புவதற்காக வேண்டுமென்றே வலிப்பு வந்தது போல் நடிப்பதும் உறுதி செய்யப்பட்டது. தெரியவந்தது.
இதற்குபிறகு அதிகாரிகள் மீண்டும் தங்கள் விசாரணையை ஞானசேகரனிடம் தொடர்ந்தனர்.. பிறகு ஜனவரி 27ம் தேதி நீதிமன்ற காவல் முடிந்து கோர்ட்டில் ஆஜர்படுத்த அதிகாரிகள் தயாராகினர்.. ஆனால், அன்றைய தினத்தன்று, ஞானசேகரனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டு மறுபடியும் ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.. வாந்தி, மயக்கம் காரணமாக ஞானசேகரனுக்கு மருத்துவர்கள் சிகிக்சை அளித்தனர்..
நீதிமன்றம், காவல்துறை
ஞானசேகரன் கைதானபோதே, போலீசாரிடம் இருந்து தப்பமுயன்ற போது அவரது கை, கால்களில் முறிவு ஏற்பட்டது. அப்போதே ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை தந்து, கை, கால்களில் கட்டு போடப்பட்டது. இந்த கட்டு போட்ட கால்களுடன்தான் விசாரணை முழுவதும் அவரிடம் நடத்தப்பட்டது.
பிறகுதான் வலிப்பு வந்துவிட்டதாக கூறவும், விசாரணை நடத்தப்பட்ட இடத்திலேயே முதலுதவி, பிறகு ஐசியூவில் அட்மிட், பிறகு எம்ஆர்ஐ ஸ்கேன் உட்பட அனைத்துமே எடுக்கப்பட்டு, சிகிச்சையும் துவங்கியபோதுதான், குட்டு வெளிப்பட்டது. தன்னை வழக்கிலிருந்து விடுவித்து கொள்ள பலவிதமான முயற்சிகளை ஞானசேகரன் மேற்கொண்டும்கூட, நீதிமன்றமும், காவல்துறையும் தங்களுடைய கடமையை சரியாக செய்து முடித்துள்ளன..!!!
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications