அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கு! 4 மனைவிகளுடனும் உல்லாசமாக இருந்ததை செல்போனில் வீடியோ எடுத்த ஞானசேகரன்
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன், தனது மனைவிகளுடன் உல்லாசமாக இருந்ததையும் வீடியோவாக எடுத்து ரசித்ததாக போலீஸார் அவருடைய செல்போனில் இருந்து பறிமுதல் செய்த வீடியோக்கள் மூலம் அம்பலமாகியுள்ளது.
ஞானசேகரனை போலீஸார் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 23 ஆம் தேதி மாணவி ஒருவர் தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது அங்கு திருட்டுத்தனமாக வந்த நபர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து அந்த மாணவி போலீஸில் புகார் அளித்தார். அதன் பேரில் ஞானசேகரன் என்பவர் மீது 8 பிரிவின் கீழ் வழக்குகளை பதிவு செய்த கோட்டூர்புரம் போலீஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் கைதான ஞானசேகரனின் செல்போனை போலீஸார் பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். அந்த போனில் எந்த வீடியோக்களும் இல்லை. இதனால் சைபர் கிரைம் போலீஸார் உதவியுடன் அந்த செல்போன் ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. அதில் பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை கண்டு போலீஸார் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இந்த விவகாரம் குறித்து போலீஸார் விசாரணையில் சில தகவல்கள் கிடைத்துள்ளன. அதில் ஞானசேகரன் டிப்ளமோ படித்துள்ளாராம். அவர் படிக்கும் போதே பல பெண்களை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி உல்லாசமாக இருந்தாராம்.
அப்படி இருக்கும் போது தனது செல்போனிலேயே வீடியோ எடுத்துக் கொள்வாராம். பிறகு அதை தனியாக இருக்கும் நேரத்தில் பார்த்து ரசிப்பாராம். செல்போனில் ரகசியமாக ஒரு ஃபோல்டரில் பாஸ்வேர்டு போட்டு வீடியோ வைத்துள்ளாராம்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் போலீஸார் தன்னை கைது செய்துவிடுவார்கள் என்பதை அறிந்த ஞானசேகரன், அந்த வீடியோவையும் எடுத்து அந்த ஃபோல்டரில் போட்டுள்ளார்.
இதனால்தான் அவரை கைது செய்த போது அவருடைய செல்போனில் எந்த வீடியோவும் இல்லாமல் இருந்தது. தனக்கு 4 திருமணங்கள் ஆனாலும் வாரத்திற்கு 4 நாட்களுக்கு பாலியல் தொழிலாளிகளிடம் சென்று உல்லாசமாக இருந்துவிடுவாராம். மேலும் தனது மனைவிகளுடன் உல்லாசமாக இருக்கும் காட்சிகளையும் கூட செல்போனில் வீடியோவாக எடுத்து தனியாக இருக்கும் போது அதை பார்த்து ரசித்து வந்தாராம்.
வேறு வழிகளிலான உடலுறவிலும் ஞானசேகரனுக்கு நாட்டம் அதிகமாக இருந்ததாம். திருநங்கைகளுடனும் ஞானசேகரனுக்கு பழக்கம் ஏற்பட்டதாம் இந்த நிலையில் அவருடைய செல்போனில் இளம்பெண்கள், திருநங்கைகள், பாலியல் தொழிலாளிகள், புகார் அளித்த மாணவியின் வீடியோவும் இருந்ததாம்.
ஞானசேகரனின் போனில் இருந்து கைப்பற்றப்பட்ட வீடியோவில் யாரேனும் மாணவிகள் இருக்கிறார்கள் என விசாரணை நடத்தப்படுகிறதாம். இதற்காக 5 நாட்கள் அவரை போலீஸ் காவலில் எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.












Click it and Unblock the Notifications