டேய் ட்விட்டர்... #GobackModi எங்க எமோசன் டா! - திமுக எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா ட்விட்டரில் கருத்து
சென்னை: பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி சென்னை வந்துள்ள நிலையில் ட்விட்டரில் #Gobackmodi என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ள நிலையில் இது தமிழ்நாட்டின் உணர்வு என மன்னார்குடி திமுக எம்.எல்.ஏ. டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.
தேசிய நெடுஞ்சாலைத் துறையின் விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி இருக்கிறது.
பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி சென்னை முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளன. சுமார் 22,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர்.

பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை
சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, மத்திய அமைச்சர் எல்.முருகன், தலைமைச் செயலாளர் இறையன்பு, தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு ஆகியோர் வரவேற்றனர். விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் அடையாறு சென்றடைந்தார். அங்கு அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு அளித்தார்.

பாஜக உற்சாக வரவேற்பு
பிரதமர் மோடியை வரவேற்க சுமார் 5 ஆயிரம் பாஜக தொண்டர்கள் சாலையோரங்களில் திரண்டிருக்கின்றனர். அவர்களுடன் பிரதமர் மோடிக்கு காவி மயமான வரவேற்பு அளிக்க காவி உடைகள் அணிந்த கலைஞர்களை கொண்டு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. காவி உடை அணிந்த கலைஞர்கள் கராத்தே, பரத நாட்டியம், கதகளி, சிலம்பம் போன்ற கலைகளை செய்துகாட்டி பிரதமரை வரவேற்றனர்.

கோ பேக் மோடி
ஒவ்வொரு முறையும் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வரும்போதெல்லாம், #GobackModi என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் நெட்டிசன்கள் டிரெண்ட் செய்வது வழக்கம். இந்த நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்துள்ள நிலையில் ட்விட்டரில் நெட்டிசன்கள் #GobackModi என்ற ஹேஷ்டேக்கின் கீழ் தங்கள் எதிர்ப்புகளை நேற்று பதிவு செய்து வருகின்றனர். இதனால் இன்று ட்விட்டரில் கோ பேக் மோடி என்ற ஹேஷ்டேக் முதலிடத்தை பிடித்தது.
Recommended Video

திமுக எம்.எல்.ஏ. டிஆர்பி ராஜா
இந்த நிலையில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த கோ பேக் மோடி ஹேஷ்டேக் திடீரென ட்விட்டரிலிருந்து நீக்கப்பட்டதாக குற்றச்சாடு எழுந்தது. இந்த நிலையில், தற்போது மீண்டும் டிரெண்டாகி வருகிறது. இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள மன்னார்குடி திமுக எம்.எல்.ஏ. டிஆர்பி ராஜா, "Dei Twitter ... நீ மறைக்க முயன்றால் மீண்டும் மீண்டும் எழும்... Emotion டா இது !!! #1 #TamilNadu தான்னு சொல்றேன்... நீங்க வேற ஏதாச்சும் நெனசிக்காதீங்க." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
ஸ்டாலின் விரக்தியில் ஏதேதோ பேசுகிறார்.. உண்மை அவருக்கு தெரியாமாலேயே போயிருச்சு! அன்புமணி அட்டாக்! -
50 ஆண்டு விசுவாசம்! திருப்பூரில் கழகத்திற்குள் கலவரம்.. விலகிய மா.செ மீண்டும் திமுகவில் ஐக்கியம்! -
லேட் ஆகுது மதுரவாயல் பாலம்.. முடங்கும் கார் ஏற்றுமதி! சென்னை போர்ட்டில் நடப்பது என்ன? எக்ஸ்க்ளூசிவ் -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை! வானிலை மையம் வார்னிங்! -
அண்ணா சாலை மேம்பாலப் பணி 68% நிறைவு.. மெட்ரோ சுரங்கப்பாதைக்கு மேல் சவாலான கட்டுமானம் விறுவிறுப்பு! -
வெள்ளை மாளிகைக்கு வாங்க.. பிரதமர் மோடிக்கு அமெரிக்காவிலிருந்து வந்த அழைப்பு! உற்று நோக்கும் சீனா! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம்












Click it and Unblock the Notifications