சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எள்ளுவய பூக்கலையே.. ஏறெடுத்தும் பாக்கலையே.. டிரம்ப் மரண பங்கம்.. தொண்டையை அடைக்கும் துக்கம்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இளைஞரக்ள் போடும் ஒவ்வொரு மீம்ஸும் அரசியல் ரீதியாக பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் எள்ளுவய பூக்கலையே.. ஏறெடுத்தும் பாக்கலையே என்ற பாட்டுடன் டிரம்புக்கு போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாக பரவி வருகிறது.

Recommended Video

    'எள்ளுவய பூக்கலயே' பாடலுடன் முன்னாள் US அதிபர் டிரம்ப்பை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ் - வீடியோ

    அமெரிக்காவின் 45வது அதிபராக குடியரசுக் கட்சியின் டொனால்டு டிரம்ப் கடந்த 2016ல் பதவியேற்ற போது பெரும் ஆச்சர்யம் ஏற்பட்டது. தீவிர வலதுசாரி ஆதரவளரான டிரம்பின் வெற்றியை மண்ணின் மைந்தர் கொள்கை கொண்ட பலர் கொண்டாடி மகிழ்ந்தனர்.

    டிரம்ப் அதிபராக கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவுடன் நல்ல நட்புறவு கொண்டிருந்தார். குறிப்பாக பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பராக திகழ்ந்தார். பிரதமர் மோடியுடன் அமெரிக்காவில் நடந்த பிரம்மாண்ட கூட்டத்தில் பங்கேற்று ஆச்சர்யப்பட வைத்தார்.

    இந்தியாவுக்கு நெருக்கம்

    சீனாவை நேரடியாக கடுமையாக எதிர்த்து எப்போதும் இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வருபவர் டிரம்ப். அதேநேரம் இந்தியர்களின் அமெரிக்க வேலை கனவையும் நொறுக்கி தள்ளினார். ஹெச்1பி விசாவை ரத்து செய்தார். மிக அதிக ஊதியம் வாங்கும் உயர் தொழிலநுட்ப பணியாளர்களுக்கு மட்டுமே ஹெச்1பி விசா வழங்கப்படும் என்று உத்தரவுபோட்டு பல இளைஞர்களின் கனவை காலி செய்தார்.

    அமெரிக்காவில் தொழில்

    அமெரிக்காவில் தொழில்

    அதேநேரம் அமெரிக்காவில் வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் செய்ய வேண்டும். அமெரிக்கர்களுக்கு வேலை கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதாவது வெளிநாட்டில் குறைந்த விலையில் பொருட்களை உற்பத்தி செய்து அதை அமெரிக்காவில் விற்கும் சீனா உள்ளிட்ட பல நாடுகளின் கனவில் மண்ணை அள்ளிப்போட்டார். சுருக்கமாக சொல்வது என்றால் மண்ணின் மைந்தர் கொள்கையில் தீவிரமாக இருந்தார்.

    டிரம்பின் கனவு காலி

    டிரம்பின் கனவு காலி

    இந்நிலையில் கொரோனா தொற்று அவர் மீண்டும் அதிபராகும் கனவை காலி செய்துவிட்டது. ஒரு அதிபர் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்படாமல் வெளியேற்றப்படுவது டிரம்புக்கு மட்டுமே நடந்துள்ளது.ஆம் ஜோ பிடன் பெரும் வெற்றி பெற்று அமெரிக்காவின் 46வது அதிபராக வரும் 20ம் தேதி பொறுப்பேற்க உள்ளார்.

    டிரம்ப் வீடியோ

    டிரம்ப் வீடியோ

    டிரம்ப் இனி அதிபர் இல்லை என்பது முடிவாகிவிட்ட நிலையில் அவர் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறப்போகிறார். அவருக்கு விடை கொடுக்கும் வகையில் நம்மூர் இளைஞர்கள் வெளியிட்ட ஒரு மீம் வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரல் ஆகி உள்ளது. அந்த வீடியாவை பார்த்தால் , அது டிரம்புக்கு புரிந்தால் நிச்சயம் கண்ணீர் விட்டுஅழுவார். அந்த அளவிற்கு மரண பங்கம் செய்திருக்கிறார் அந்த மீம் கிரியேட்டர்.

    மோடியுடன் டிரம்ப்

    மோடியுடன் டிரம்ப்

    எள்ளுவய பூக்கலையே ஏறெடுத்தும் பாக்கலையே என்று தொடங்கும் அசுரன் பட பாடல் டிரம்பின் மீம் வீடியோ பேக்ரவுண்டில் ஓடுகிறது. டிரம்பின் சிரிப்பு, டிரம்பின் சோகம், டிரம்பின் ஆவேச பேச்சுக்கள், டிரம்ப் உலக நாட்டு தலைவர்களுடன் இருக்கும் வீடியோ, பிரதமர் மோடியை கட்டிபிடிக்கும் காட்சி என காட்சிகளை கோர்த்துள்ளார்கள். செம்ம வைரலான மீம் போட்டு விடை கொடுப்பதில் நம்மூர்காரர்கள் மிகச்சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள். இதை பாருங்கள் உங்களுக்கே புரியும்.

    English summary
    Spread the Trump memes video on social media. tamil movie asuran song elleuvay pookalaye play on Go GO TRUMP video. trump loss in us president election. thats why memes released.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X