ஆடுகள் வளர்க்க உங்களுக்கு ஆசையா? கோழி, பன்றி பண்ணை அமைக்க 50 சதவீதம் மானியம் தரும் சூப்பர் திட்டம்
சென்னை: நம்முடைய நாட்டில் கால்நடை விவசாயிகளின் வாழ்வாதாரம் சிறக்கவும், அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் பல உதவிகளை செய்து வருகிறது. அந்தவகையில், தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி மற்றும் பிற உள்ளூர் வங்கிகளோடு இணைந்து சிறப்பு திட்டம் ஒன்றை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், தற்போது இந்த திட்டம் குறித்து கால்நடை பராமரிப்புத்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
கால்நடை பராமரிப்பு உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதி (AHIDF) என்று அழைக்கப்படும் இந்தத் திட்டம் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.. மத்திய அரசின், தேசியக் கால்நடை ஆணையத்தின் கீழ், கால்நடை வளர்ப்புக்காக சிறப்பு மானியமும் வழங்கப்படுகிறது. இதன் நோக்கம், கோழி, வெள்ளாடு, செம்மறியாடு, பன்றி வளர்ப்பு, தீவனம் மற்றும் தீவன பயிர் சேமிப்பு மற்றும் மேம்படுத்துதல், செம்மறி, வெள்ளாடு இனங்களை மேம்படுத்துதல் மற்றும் தீவன உற்பத்தி ஆகிய பணிகளை மேற்கொள்ள தொழில் முனைவோரை உருவாக்குதலே ஆகும்.

வெள்ளாடுகள், பன்றி பண்ணை
அந்தவகையில், கோழி, வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள், பன்றி பண்ணை அமைக்கவும் தீவனம், தீவனப்பயிர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பிற்காகவும் மொத்த திட்ட செலவில் 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.. இந்த திட்டத்தின் கீழ் தனிநபர், சுயஉதவிக் குழுக்கள் (SHG), விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்பு (FPO), விவசாயக் கூட்டுறவுகள், கூட்டுப் பொறுப்பு சங்கங்கள் (JLG), பிரிவு 8 நிறுவனங்கள் ஆகியவை தகுதியானவர்கள் ஆவார்கள்.. பயனாளிகள் சொந்தமாக அல்லது குத்தகைக்கு நிலம் வைத்திருக்க வேண்டும். பயனாளிகள் தொழில் முனைவோர் அல்லது தகுதியுள்ள நிறுவனங்கள் திட்டத்திற்கான வங்கி கடன் அனுமதி அல்லது வங்கி உத்தரவாதத்தை பெற வேண்டும். பயனாளிகள் திட்ட மதிப்பீட்டிற்கான அங்கீகாரத்தினையும் பெற வேண்டும். பணிகள் நிறைவு பெறுவதன் அடிப்படையில் மானியம் 2 தவணைகளாக வழங்கப்படும்.
கால்நடை துறை அதிரடி அறிவிப்பு
இதுகுறித்துதான், கால்நடைத்துறை தற்போது மீண்டும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அரசு மானியத்தில், கால்நடை பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம் என்றும் கால்நடை பராமரிப்புத்துறை அறிவித்துள்ளது. அந்த அறிக்கை இதுதான்: "தமிழகத்தில், புதிய கால்நடை பண்ணைகள் அமைக்க, அரசு நிதி உதவி வழங்கி வருகிறது. அதன்படி, நாட்டுக்கோழி பண்ணையுடன் கூடிய குஞ்சு பொரிப்பகம் அமைக்க, 25 லட்சம் ரூபாய் வரையும், செம்மறி ஆடு, வெள்ளாடு பண்ணை அமைக்க, 10 லட்சம் முதல் 50 லட்சம் ரூபாய் வரையும் மானியம் வழங்கப்படுகிறது.
தீவன சேமிப்பு பண்ணை வசதிகள்
பன்றி வளர்ப்பு பண்ணை அமைக்க 15 லட்சம் முதல் 30 லட்சம் ரூபாய் வரை, வைக்கோல், ஊறுகாய்புல், மொத்த கலப்பு உணவு, தீவன தொகுதி மற்றும் தீவன சேமிப்பு வசதிகள் பண்ணை அமைக்கவும், தொழில் முனைவோருக்கு மானியம் வழங்கப்படுகிறது.இந்த திட்டத்தில், தனிநபர், சுயஉதவி குழுக்கள், விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்பு, விவசாய கூட்டுறவுகள், கூட்டு பொறுப்பு சங்கங்கள், https://nlm.udyamitra.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களை, http://www.tnlda.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பெறலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications