கோபேக் மோடி... நாங்களும் போடுவோம் கோபேக் ராகுல்.. படு சூடான டிவிட்டர்.. ஆனால் ஃபோர்ஸ் பத்தலையே!
சென்னை: பதிலுக்கு ஆரம்பிச்சிட்டாங்கப்பா.. இன்று தமிழகம் வரவுள்ள ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோபேக் ராகுல், கோபேக் பப்பு போன்ற ஹேஷ்டேக்குகள் டிரண்டாகி வருகின்றன.
இதுவரைக்கும், பிரதமர் மோடி தமிழகம் நிறைய முறை வந்து போயிருக்கிறார். அப்போதெல்லாம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் ஃபேமஸ் ஆனதோ இல்லையோ, கோபேக் மோடி என்ற வாசகமும் கருப்பு கொடி போராட்டமும்தான் ஹைலைட் ஆனது.
இவ்வளவு நாள் இல்லாமல் ராகுல்காந்தி இன்று தமிழகம் வர உள்ளதால், உடனே கோபேக் ராகுல் என்ற பதிலடி வாசகத்தை எதிர்க்கட்சியினர் ஆரம்பித்துவிட்டனர். இது எதற்காக என்றால், ராகுலுக்கும் தமிழ்நாட்டில் எதிர்ப்பு இருக்கிறதாம்.. அதை சொல்வதற்காகத்தான் இப்படி ஒரு தோரணைகள்.. ஏற்பாடுகள்... இந்த ஹேஷ்டேக்கில் பெரும்பாலும் ஈழத்தமிழர் விவகாரத்தைதான் பெரிதுபடுத்தி இருக்கிறார்கள்.
|
மிஸ்டர் ராகுல்
மிஸ்டர் ராகுல் காந்தி, நாங்கள் ஒருபோதும் இதனை மறக்க மாட்டோம்.. மன்னிக்கவும் மாட்டோம்" என்று பதிவிட்டு அதன் கீழே ஈழ தமிழர்கள் சித்ரவதைகளை அனுபவிக்கும் போட்டோக்களை பகிர்ந்துள்ளனர்.
|
கட்-அவுட்கள்
மற்றொரு ட்வீட்டில், "இது தமிழ்நாடு. டிவிட்டரில் மட்டுமில்லை ராகுல் காந்திஜி, நிஜத்திலும் கூட மக்கள் கட் அவுட்களை அகற்றுகின்றனர்" என்று பதிவிட்டு, ராகுலின் கட்அவுட் கீழே தள்ளிவிடுவதுபோல ஒரு வீடியோ பதிவிட்டுள்ளனர்.
|
பாலச்சந்திரன்
இதைவிடக் கொடுமை, பிரபாகரனின் மகன் 12 வயது பாலச்சந்திரன் உட்கார்ந்திருக்கும் படத்தை பதிவிட்டு, "இதற்கு கேப்ஷன் தேவையில்லை" என்று தெரிவித்துள்ளனர்.
|
நேரடி குற்றச்சாட்டு
இது போன்று பல ட்வீட்கள் இலங்கை தமிழர்களை வைத்துதான் உலா வருகிறது. இதெல்லாம் கடந்த கால வரலாறுகளாக இருப்பினும், ராகுல் காந்தி மீது நேரிடையாக இன்றைய தினத்தில் குற்றச்சாட்டு சொல்ல ஒன்றையுமே காணோம் என்றுதான் தெரிகிறது.

தமிழ்நாடு ட்வீட்
இப்படி அரைச்ச மாவையே அரைக்கறதுக்கு காரணம், மோடிக்கு போட்டியாக கோ பேக் ராகுல் என்ற ஹேஷ்டேக் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த வேலையை பாஜக பார்த்திருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டும் இல்லை.. இதில் பெரும்பாலான ட்வீட்கள் எல்லாமே வட இந்திய ட்வீட்கள்தான்... தமிழ்நாட்டு ட்வீட் கண்ணிலேயே படல!
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
டெல்லியில் முதல்வர் விஜய் - சோனியா, ராகுல் சந்திப்பு திடீர் ரத்து.. என்ன நடந்தது? -
முதல்வர் பதவிக்கு ‘குட்பை'.. ராஜினாமாவிற்கு பின் சோனியா - ராகுலுக்கு நன்றி கூறி கலங்கிய சித்தராமையா












Click it and Unblock the Notifications