சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாளை தமிழ்நாடு வரும் மோடி.. இன்றே ட்விட்டரில் டிரெண்டாகும் #GobackModi

Google Oneindia Tamil News

சென்னை: பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி நாளை சென்னை வரவுள்ள நிலையில் ட்விட்டரில் ரசிகர்கள் #Gobackmodi என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்யத் தொடங்கி இருக்கின்றனர்.

Recommended Video

    Modi Chennai Visit Reasons | PM Modi Tamilnadu Visit | #TamilNadu

    தேசிய நெடுஞ்சாலைத் துறையின் விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நாளை நடைபெற உள்ளது.

    இதில் பங்கேற்பதற்காக நாளை பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வருகிறார்.

    நாளை சென்னை வரும் பிரதமர் மோடி.. மக்கள் “இதை” செய்தால் அவ்ளோதான் - எச்சரித்த காவல்துறை நாளை சென்னை வரும் பிரதமர் மோடி.. மக்கள் “இதை” செய்தால் அவ்ளோதான் - எச்சரித்த காவல்துறை

    பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை

    பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை

    பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருக்கும் பிரதமர் மோடி ரூ.12,413 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமரை சந்தித்து இலங்கை தமிழர் விவகாரம், நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

     மருத்துவக் கல்லூரிகள் திறப்பு விழா

    மருத்துவக் கல்லூரிகள் திறப்பு விழா

    திருவள்ளூர், நாகை, அரியலூர், கள்ளக்குறிச்சி, விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளுக்கு கடந்த ஜனவரி 12ம் தேதி திறப்பு விழா நடைபெற இருந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு கல்லூரிகளைத் திறந்துவைக்க திட்டமிடப்பட்டது.

    விரைவுச் சாலை திட்டம்

    விரைவுச் சாலை திட்டம்

    ஆனால், அப்போது கொரோனா பரவல் அதிகரித்த காரணத்தால் பிரதமர் நரேந்திர மோடியின் பயண திட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் 26 ஆம் தேதி சென்னை வரும் மோடி, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறையின் விழாவில் கலந்துகொள்ள உள்ளார். அதில், சென்னை - பெங்களூரு இடையேயான 4 வழி விரைவுச் சாலையின் 3 ஆம் கட்ட பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்ட உள்ளார்.

    சாலை, ரயில் திட்டங்கள்

    சாலை, ரயில் திட்டங்கள்

    அத்துடன் இந்த விழாவில் சென்னை மதுரவாயல் மற்றும் துறைமுகம் பறக்கும் சாலை திட்டம், மாமல்லபுரத்திலிருந்து புதுச்சேரி வரையிலான கிழக்கு கடற்கரைச் சாலையை அகலப்படுத்தும் திட்டம், தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் முதல் மதுரை வரையிலான ரயில் சேவை திட்டம் உள்ளிட்டவற்றையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

    கோ பேக் மோடி

    கோ பேக் மோடி

    ஒவ்வொரு முறையும் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வரும்போதெல்லாம், #GobackModi என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் நெட்டிசன்கள் டிரெண்ட் செய்வது வழக்கம். இந்த நிலையில் நாளை பிரதமர் நரேந்திர மோடி சென்னை வர உள்ள நிலையில் ட்விட்டரில் நெட்டிசன்கள் #GobackModi என்ற ஹேஷ்டேக்கின் கீழ் தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.

    English summary
    #GobackModi hashtag starts trending amid PMs travel to Tamilnadu tommorrow: பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி நாளை சென்னை வரவுள்ள நிலையில் ட்விட்டரில் ரசிகர்கள் #Gobackmodi என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்யத் தொடங்கி இருக்கின்றனர்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X