கோபியில் 8 முறை எம்எல்ஏவான செங்கோட்டையன்! 9-ஆவது முறை விசில் சின்னத்தில் ஜெயிப்பாரா?
ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் செங்கோட்டையன் வெல்வாரா என்பது குறித்து தந்தி டிவி நடத்திய கருத்துக் கணிப்புகளில் காணலாம். அந்த தொகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த செங்கோட்டையன் இந்த முறை எத்தனை வாக்குகளை பெறுவார் என்பதை பார்க்கலாம்.
தந்தி டிவி சார்பில் மார் 29ஆம் தேதி முதல் ஏப்ரல் 17ஆம் தேதி வரை தமிழகத்தில் கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டன. இதன் முடிவுகள் நேற்று வெளியானது.

இதில் திமுக கூட்டணி 98 இடங்களிலும் அதிமுக கூட்டணி 91 இடங்களிலும் வெல்லுமாம். 47 தொகுதிகளில் கடும் போட்டி நிலவும் என்றும் இந்த 47 தொகுதிகளின் வெற்றியை பொறுத்தே யார் ஆட்சி அமைப்பார்கள் என தெரிய வரும்.
தற்போது விஐபி தொகுதி நிலவரம் என்ற அடிப்படையில் கோபிசெட்டிப்பாளையம் குறித்து பார்க்கலாம். இங்கு திமுக சார்பில் நல்லசிவம், அதிமுக சார்பில் வி.பி.பிரபு, நாதக சார்பில் சீதாலட்சுமி, தவெக சார்பில் செங்கோட்டையன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
கோபியில் திமுகவுக்கு 29 முதல் 35 சதவீதம் பேரும் அதிமுகவுக்கு 29 சதவீதம் முதல் 35 சதவீதம் பேரும் தவெகவுக்கு அதாவது செங்கோட்டையனுக்கு 28 சதவீதம் முதல் 34 சதவீதமும் நாதகவுக்கு 1 முதல் 6 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.
இந்த தொகுதியில் திமுக, அதிமுக, தவெக ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த தொகுதியில் திமுகவால் எப்படி வெல்ல முடியும் என்றால், அதிமுகவின் வாக்குகளை செங்கோட்டையன் தனக்கு சாதகமாக பிரிக்கும் போது நடக்கலாம்.
அது போல் அதிமுக எப்படி ஜெயிக்கும் என்றால் செங்கோட்டையன் ஜெயிக்கவே கூடாது என திமுகவின் வாக்குகளையும் இழுத்து செங்கோட்டையனுக்கு ஓட்டு போடவிடாமல் செய்தால் நடக்கும். செங்கோட்டையன் ஜெயிக்க வேண்டும் என்றால் விஜய், விசில் சின்னம் ஆகியவற்றுடன் செங்கோட்டையனின் wave கொண்டு வர வேண்டும். எனவே இந்த தொகுதியில் கடும் போட்டி நிலவும்.
செங்கோட்டையனின் கோட்டை:
இத்தொகுதியின் வரலாற்றில் கே.ஏ. செங்கோட்டையன் அவர்கள் இதுவரை 8 முறை வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். 1980 முதல் 2021 வரை (1996 தவிர) அவர் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்று இத்தொகுதியை அ.தி.மு.க-வின் அசைக்க முடியாத கோட்டையாக மாற்றியுள்ளார்.
கடந்த கால தேர்தல் முடிவுகள்:
2021 தேர்தல்: அ.தி.மு.க-வின் கே.ஏ. செங்கோட்டையன் 1,08,608 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் ஜி.வி. மணிமாறன் 80,045 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார்.
2016 தேர்தல்: மீண்டும் கே.ஏ. செங்கோட்டையன் வெற்றி பெற்றார். இம்முறை காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.வி. சரவணனை சுமார் 11,223 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
2011 தேர்தல்: அ.தி.மு.க அலை வீசிய இந்தத் தேர்தலில், செங்கோட்டையன் அவர்கள் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
2006 தேர்தல்: தி.மு.க ஆட்சியைப் பிடித்தபோதும், கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையன் தனது வெற்றியைத் தக்கவைத்துக் கொண்டார்.
1996 தேர்தல்: மாநிலம் முழுவதும் நிலவிய தி.மு.க அலையில், இத்தொகுதியில் மட்டும் தி.மு.க-வின் ஜி.பி. வெங்கீது வெற்றி பெற்றார். செங்கோட்டையன் தோல்வியுற்ற ஒரே தேர்தல் இதுவாகும்.












Click it and Unblock the Notifications