மேலவளவு வழக்கு டூ கோகுல்ராஜ் கொலை வழக்கு: யார் இந்த வழக்கறிஞர் ப.பா. மோகன்?
சென்னை: கோகுல்ராஜ் ஆணவப்படுகொலை வழக்கில் நீண்ட சட்டப்போராட்டத்திற்கு பிறகு குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க காரணமாக இருந்தவர் வழக்கறிஞர் பவானி. பா.மோகன். வழக்கறிஞராக மோகனின் பங்களிப்பு என்ன என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.
2015ம் ஆண்டு தமிழகத்தையே உலுக்கிய கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு சாகும் வரை சிறை தண்டனையை விதித்து மதுரை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், குற்றவாளிகள் 10 பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனை என்ற மதுரை சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லும் என்று உத்தரவிட்டுள்ளது.

இந்த தீர்ப்பை பலரும் வரவேற்று வரும சூழலில், இந்த தீர்ப்பு வர மிக முக்கிய காரணம், வழக்கறிஞர் பவானி பா மோகன் என்ற ப.பா. மோகன் தான். இவருக்கு இது புதிதல்ல. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக மேலவளவு கொலை வழக்கு உள்பட பல வழக்குகளில் தொடர்ந்து வாதாடி அவர்களுக்கு நியாயம் கிடைக்க செய்தவர் தான் பா மோகன்.
ஈரோடு மாவட்டம் பவானி பகுதியைச் சேர்ந்தவர் என்பதால், தந்தை பெயரான பாலுவையும், பவானியையும் இனிசியலாக சேர்த்து ப.பா. மோகனாக இவர் அழைக்கப்படுகிறார். இவரது தந்தை பாலு கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் தனது அடிப்படையே கம்யூனிஸ்ட் கட்சி தான் என்று கூறினார் ப.பா. மோகன்.
மாணவ பருவத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அழைத்ததன் பேரில், கட்சி அலுவகத்தில் தங்கி பணியை பார்த்துக் கொண்டவாறு வழக்கறிஞர் படிப்பை படித்து முடித்தார் மோகன். ஈரோட்டில் பல தொழிற்சங்க போராட்டங்களில் பங்கேற்றுள்ளார் மேலும் சாக்கடையில் விழுந்து இறந்த தொழிலாளர்களுக்காக நஷ்ட ஈடு கேட்டு போராடி உள்ளார். ஜமுக்காள தொழிலாளர்களுக்காக சங்கம் வைத்தும் போராடி உள்ளார் பா மோகன்.
வழக்கறிஞராக இவரது முதல் வழக்கு, பவானி அருகே பர்கூர் சோளகர் பகுதி மக்கள் புளியங்காய் விற்பனை செய்ய அதில் பங்கு கேட்டு பொய் வழக்கு போட்ட போலீஸாருக்கு எதிராக எதிர்த்து வாதாடி வெற்றி பெற்றதுதான் என வழக்கறிஞர் மோகன் பெருமிதம் தெரிவித்தார்.
இதற்கு பிறகு வீரப்பன் வழக்கில், வீரப்பனை பிடிக்க பழங்குடி மக்களுக்கு போலீஸ் தொந்தரவு கொடுத்த வழக்கில் வாதாடினார். அதன்பிறகு 1997ம் ஆண்டு மேலவளவு படுகாலை வழக்கில் 17 பேருக்கு வாழ்நாள் சிறை தண்டனை கிடைக்க சட்டப்போராட்டம் நடத்தியது வழக்கறிஞர் ப.பா.மோகன் தான்.
உடுமலைப்பேட்டை கவுசல்யா சங்கர் மற்றும் தருமபுரி இளவரசன் திவ்யா ஆகியோரது வழக்குகளிலும் ஆஜராகி உள்ளாராம்.இது போன்ற ஆணவ கொலைகள் வழக்கில் பல தொந்தரவுகளையும் சந்தித்தாராம். வழக்கறிஞர் குழுவையே சமூக நீதிக்ககாக போராடுவதற்கு உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இதுபோன்ற வழக்குகளை எடுத்து நடத்துகிறேன் என்று முன்பு ஒருமுறை ஊடகம் ஒன்றுக்கு பேட்டியில் பா மோகன் கூறியுள்ளார்.
இப்படி நீண்ட நெடிய சட்டப்போராட்டங்களுக்கு சொந்தக்காரரான பா மோகனின் வரலாற்றில், கோகுல்ராஜ் கொலை வழக்கு தீர்ப்பும் புதிய வரவாக இணைந்துள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications