Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தங்கத்தை விடுங்க.. வெள்ளி வெறும் 3 நாளில் 18000 உயர்வு.. 2026ல் நடக்க போகும் நம்ப முடியாத சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை ஒருபக்கம் ஏறிக்கொண்டிருக்கிறது என்று பார்த்தால், வெள்ளி விலை இப்படி ஏறியதை யாராலும் நம்பவே முடியவில்லை... இன்று ஒரே நாளில் வெள்ளி விலை ஒரு கிலோவிற்கு 10000 ரூபாய் உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை முதன்முறையாக ஒரு அவுன்ஸ் 4,500 டாலரைத் ( இந்திய மதிப்பில் சுமார் 4 லட்சம்) தாண்டியதைத் தொடர்ந்து, வெள்ளியும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

தங்கம் விலை ஒரு லட்சத்து இரண்டாயிரம் என்று ஒருபக்கம் ஏறிக்கொண்டே இருக்கிறது. மறுபக்கம் வெள்ளியை திரும்பி பார்த்தால், தங்கத்தைவிடவும் ஜெட் வேகத்தில் ஏறிக்கொண்டே இருக்கிறது. நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் உயர்ந்திருந்த நிலையில், நேற்று கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3 ஆயிரமும் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.234-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 34 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.

gold and silver price An unbelievable event that is going to happen in 2026

டிசம்பர் 24ம் தேதியான இன்று வெள்ளி விலை ஒரு கிராமிற்கு 10 ரூபாய் உயர்ந்து 244க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ஒரே நாளில் 10 ஆயிரம் உயர்ந்து 2 லட்சத்து 44 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. ஒட்டுமொத்தமாக வெறும் 3 நாளில் 18000 அளவிற்கு வெள்ளிவிலை உயர்ந்துள்ளது.

விலை உயர்வுக்கு என்ன காரணம்: வெனிசுலாவில் நிலவும் பதற்றங்கள், பலவீனமான டாலர் மதிப்பு மற்றும் அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதங்களை மேலும் குறைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ஆகியவையே இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணங்களாக பார்க்கப்படுகிறது. தங்கம், வெள்ளி மட்டுமின்றி பிளாட்டினமும் இன்று புதிய வரலாற்று உச்சதை சந்தித்துள்ளது.

நிபுணர்கள் சொல்வது என்ன

வென்ச்சுரா கமாடிட்டி பிரிவுத் தலைவர் என்.எஸ். ராமசாமி கூறுகையில், வெள்ளி ஒரு அவுன்ஸ் 100 டாலர் வரை உயர வாய்ப்புள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ஒரு கிலோ ₹3 லட்சம் வரை 2026-க்குள் உயரலாம். அடுத்த பத்தாண்டுகளில் பசுமை ஆற்றல் மற்றும் டிஜிட்டல் மாற்றங்கள் சார்ந்த துறைகளில் வெள்ளியின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இது ஒரு "அடுத்த தலைமுறை உலோகம்" என உருவெடுப்பதாலும் இந்த விலை உயர்வு சாத்தியம் என கூறினார். அதே நேரத்தில், கடந்த காலச் சந்தை வரலாற்றின்படி, பெரும் விலை உயர்வுக்குப் பின் திடீர் சரிவுகளும் ஏற்படக்கூடும் என்பதால் முதலீட்டாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளனர்..

ஆக்சிஸ் டைரக்ட் வெளியிட்ட கணிப்பு

வெள்ளி விலை 2024-ல் இருந்தே வலுவான நிலையில் இருக்கிறது. 1979-க்குப் பிறகு 2025-ல் தான் இது 100%-க்கும் மேலான வருமானத்தைத் தந்து மிகப்பெரிய ஆண்டு வளர்ச்சியைக் கண்டிருக்கிறது வௌளி. 2026-ல் ஒரு கிலோ வெள்ளி ₹2,40,000 வரை செல்லும் என ஆக்சிஸ் டைரக்ட் கணித்துள்ளJ. ஒருவேளை விலை குறைந்து ₹1,70,000 முதல் ₹1,78,000 என்ற நிலைக்கு வந்தால், முதலீட்டாளர்கள் அதை வாங்கிச் சேமிக்கப் பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆலோசனை வழங்கி உள்ளது.

தட்டுப்பாடுதான் காரணமா?

வெள்ளிச் சந்தையில் ஒரு வரலாற்று மாற்றமாக, அதன் உற்பத்தி மற்றும் தேவைக்கிடையே பெரும் இடைவெளி நிலவுவதுதான் காரணம் என்கிறார்கள். 2021 முதல் 2025 வரை சுமார் 700 மில்லியன் அவுன்ஸ் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறதாம். 2026-ல் மட்டும் இந்தத் தட்டுப்பாடு 100 மில்லியன் அவுன்ஸைத் தாண்டும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

தங்கம் குறித்த கணிப்பு

எல்கேபி செக்யூரிட்டீஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஜதீன் திரிவேதி வெளியிட்ட கணிப்பில், தங்கம் தற்போது "அதிகமாக வாங்கப்பட்ட" நிலையில் இருந்தாலும், அதன் ஒட்டுமொத்தப் போக்கு வலுவாகவே இருககிறது. தங்கத்தின் விலை ₹1,32,000 என்ற நிலைக்கு மேல் நீடிக்கும் வரை, அதன் ஏறுமுகம் தொடரும். இடையில் ஏற்படும் சிறிய விலை சரிவுகள் தற்காலிகமானவையே தவிர, அவை விலையேற்றத்தைத் தடுத்துவிடாது என்று கணித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+