மீண்டும் சர்ர்ருனு ஏறிய தங்கம் விலை.. இன்று ஒரு கிராம் விலை என்ன தெரியுமா? நகை பிரியர்கள் ஷாக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை மீண்டும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த 2 நாட்களாக லேசாக சரிந்து வந்த நிலையில் இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது தங்கம் விலை. சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை ரூபாய் 57 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணம் செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை இந்த ஆண்டின் ஏப்ரல் மாதவாக்கில் புதிய உச்சத்தை தொட்ட நிலையில் அதன்பிறகு ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வந்தது. செப்டம்பரில் மீண்டும் விலை அதிகரித்து மீண்டும் உச்சம் தொட்டது.

gold rate gold chennai

கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இறக்குமதி சுங்க வரி குறைப்பால் தங்கம் விலை சரிந்தது. அமெரிக்க ஃபெடரல் வங்கி வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை குறைத்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, விலை சரிவு நின்று, அதன்பிறகு வேகமாக தங்கம் விலை உச்சம் தொட்டு வருகிறது.

கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி சனிக்கிழமை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56,760-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.7,095-க்கு விற்பனையானது. சென்னையில் செப்டம்பர் 30 ஆம் தேதி ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 15 குறைந்தது. அதன்படி, ஒரு சவரன் ரூ.56,640க்கு விற்பனை செய்யப்பட்டது.

அக்டோபர் மாதத்தின் முதல் நாளான நேற்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்தது. ஒரு சவரன் ரூபாய் 56,400க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை தொடர் உயர்வை கண்டு வந்த நிலையில், 2 நாட்களாக சற்று குறைந்ததால் இல்லத்தரசிகளுக்கும், பொதுமக்களுக்கும் ஆறுதல் அளித்தது. ஆனால், இன்று மீண்டும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

இன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூபாய் 50 அதிகரித்து 7,100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 8 கிராம் (ஒரு சவரன்) ஆபரணத் தங்கம் ரூபாய் 400 அதிகரித்து, ரூபாய் 56,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் தொடர் விலையேற்றம், தங்க நகை வாங்க எண்ணிய மக்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

தங்கம் விலை மீண்டும் ஏற்றத்தைச் சந்திக்குமா என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். அதேசமயம், வெள்ளி விலையைப் பொறுத்தவரை, விலை மாற்றமின்றி கிராம் ரூ.101க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒரு கிலோ ரூ.1,01,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+