நேற்று எகிறிய தங்கம் விலை இன்று அப்படியே சரிவு.. சென்னையில் இன்று தங்கம், வெள்ளி விலை நிலவரம்
சென்னை: தங்கத்தின் விலை இன்று சரிவைச் சந்தித்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ. 400 அதிகரித்த நிலையில் இன்று தங்கம் ஒரு சவரனுக்கு ரூ. 320 குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.6,680க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை நாள்தோறும் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருவது அனைவரும் அறிந்ததே. சர்வதேச சந்தை வர்த்தகம் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. குறிப்பாக ஏப்ரல் மாதத்தில் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது.

ஆனால், அடுத்தடுத்த மாதங்களில் ஏற்ற இறக்கத்துடன் தங்கம் விலை இருந்தது. கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இறக்குமதி சுங்க வரி குறைப்பால் தங்கம் விலை சரிந்து வந்தது. அடுத்த ஒரே வாரத்தில் விலை சரிவு நின்று, அதன்பிறகு ஏற்ற இறக்கத்தில் உள்ளது.
இந்நிலையில், தங்கம் விலை நேற்று கிராம் ஒன்றுக்கு ரூ.50 அதிகரித்து ரூ.6,720-க்கும், சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.53,760-க்கும் விற்பனையானது. இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை ரூ.57,400-க்கு விற்பனையானது.
ஆவணி மாதத்தில் ஏராளமான சுப நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. தங்கம் விலை உயர்வால் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் வைத்திருப்பவர்கள் மற்றும் பண்டிகைக்கு நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. சனிக்கிழமையான இன்று தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 40 ரூபாய் குறைந்து ரூ.6,680 என்று விற்பனையாகிறது. ஒரு சவரன் ரூ.53,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் சுத்த தங்கம் இன்று கிராமுக்கு ரூ.44 குறைந்துள்ளது. ஒரு கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 7,287 ஆகவும், சவரனுக்கு ரூ.58,296-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல ஒரு கிராம் வெள்ளி நேற்று ரூ.92-க்கு விற்பனையானது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 2.50 குறைந்து ரூபாய் 89.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி விலை ரூ.89,500 ஆக உள்ளது.
-
கிலோவுக்கு 1000000 தள்ளுபடி! 15% இறக்குமதி வரி.. இந்தியாவில் மீண்டும் தலைதூக்கும் தங்கக் கடத்தல்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
2026 தங்கம் வெள்ளி விலை சரியப்போகுது.. இந்த ஜூனில் வெடிக்க போகும் பலூன்? வல்லுநர்கள் கணிப்பு -
தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது! -
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
நான் வந்துட்டேன்.. மீண்டும் கெத்தாக திரும்பிய தங்கம்! டாலரால் தலைகீழான மார்க்கெட்! அடுத்து என்ன? -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications