தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம்
சென்னை: மத்திய அரசு தங்க நகைகள் வாங்கும் பொதுமக்களை ஏமாற்றத்திலிருந்து பாதுகாக்க, முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. கடந்த சில ஆண்டுகளில் நடைமுறையில் வந்த கட்டாய ஹால்மார்க் திட்டம் இப்போது 6வது கட்டத்திற்கு வந்துள்ளது.. இதன் மூலம், 7 மாவட்டங்களில் மாற்றம் வந்துள்ளது.. அதென்ன 6வது கட்டத்தில் 7 மாவட்டங்கள்? இந்த 6வது கட்டத்தை விரிவுபடுத்துவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.
தற்போதைய புதிய உத்தரவின்படி, பஞ்சாப் மாநிலம் ரூப்நகர், உத்தரபிரதேசம் பண்டா, மகாராஷ்டிரா பீட், திரிபுரா கோமதி, பீகார் கதிஹார், ராஜஸ்தான் பியாவர் மற்றும் மத்திய பிரதேசம் நீமுச் மாவட்டங்களில் தங்கம் மற்றும் தங்க கலைப்பொருட்களுக்கு ஹால்மார்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.. இதன் மூலம், கட்டாய ஹால்மார்க் நடைமுறை அமலில் இருக்கும் மாவட்டங்களின் மொத்த எண்ணிக்கை 380 ஆக உயர்ந்துள்ளது..

7 மாவட்டங்கள்
இந்த திட்டம் 2021ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டு படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.. இப்போது 14, 18, 20, 22, 23 மற்றும் 24 கேரட் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது..
9 காரட் தங்கத்திற்கும் ஹால்மார்க் செய்யும் வசதி உள்ளது, ஆனால் அது விருப்பவிதமாக மட்டுமே உள்ளது.. ஒவ்வொரு நகையிலும் தனித்துவ அடையாள எண் (HUID) வழங்கப்படும், இதை BIS CARE செயலி மூலம் எளிதாக சரிபார்க்க முடியும்.. கடந்த சில ஆண்டுகளில் சுமார் 60 கோடிக்கும் மேற்பட்ட நகைகள் HUID உடன் ஹால்மார்க் செய்யப்பட்டுள்ளன..
தங்க நகை - 6வது கட்டம்
இந்த 6வது கட்டத்தின் முக்கிய நன்மைகள் ஏராளம்.. குறிப்பாக, பொதுமக்கள் நகை வாங்கும் போது தரமான, தூய்மையான தங்கத்தைப் பெறுவர், ஏமாற்றம் குறையும்.. HUID மூலம் வாங்கிய நகையின் உண்மை தரத்தை எளிதில் சரிபார்க்கலாம்.. ஹால்மார்க் விதிகளை மீறுவோருக்கு அதிரடி சோதனைகள் நடைபெறுவதால் வியாபாரிகள் ஒழுங்காக இருக்கும்.
நாடு முழுவதும் 14-24 காரட் தங்க நகைகளில் ஒரே தரநிலை உருவாகும்.. HUID மூலம் திருட்டு அல்லது மறுசுழற்சி சம்பவங்களையும் தடுக்கும் வசதி உள்ளது.. இது நம்பகமான, பாதுகாப்பான நகை சந்தையை உருவாக்கி வியாபாரிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் நன்மை தரும்..
கடந்த ஓராண்டில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.. மக்கள் தங்கள் நகைகளில் தர குறைவு அல்லது ஹால்மார்க் சந்தேகம் இருந்தால் BIS இணையதளம், BIS CARE செயலி அல்லது மின்னஞ்சல் மூலம் நேரடியாக புகார் அளிக்கலாம்.
பாதுகாப்பான தங்க நகை திட்டம்
ஹால்மார்க் முத்திரையை சரிபார்ப்பது, உங்கள் பணத்திற்கும் பாதுகாப்பை தருவதோடு, தங்கத்தின் மதிப்பையும் உறுதி செய்யும்.. இந்த நடவடிக்கை, பொதுமக்களுக்கு நம்பகமான, பாதுகாப்பான, தரமான நகை சந்தையை உருவாக்கும் பெரும் முயற்சியாகும்..
தங்க நகைகளுக்கான இந்த 6வது கட்ட கட்டாய ஹால்மார்க் நடைமுறை அமலுக்கு வந்திருப்பதன் மூலம், நகை வாங்கும் சாமானிய மக்களின் நம்பிக்கையும் பாதுகாப்பும் பலமடங்கு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள 7 மாவட்டங்களில் உள்ள மக்கள் இனி தங்கம் வாங்கும் போது அதன் தூய்மை குறித்து அச்சப்படத் தேவையில்லை என்கிறார்கள் நிபுணர்கள்.
BIS CARE நன்மைகள் - பயன்கள்
காரணம், ஒவ்வொரு நகையிலும் உள்ள தனித்துவமான HUID எண், அந்த நகையின் தரம் மற்றும் காரட் அளவை அரசு அங்கீகரித்த மையங்கள் மூலம் உறுதி செய்கிறது. இதனால் நகைக் கடைக்காரர்கள் வாடிக்கையாளர்களை ஏமாற்றுவது தடுக்கப்படுவதோடு, பழைய நகைகளை விற்கும் போதோ அல்லது அடகு வைக்கும் போதோ அந்தத் தங்கத்திற்கு சர்வதேச தரத்திலான சரியான மதிப்பும் விலையும் பொதுமக்களுக்குக் கிடைக்கிறது.
அதுமட்டுமல்லாமல், BIS CARE என்ற ஆப் மூலம் மக்கள் தாங்களாகவே தரத்தைச் சரிபார்த்துக் கொள்ளும் வசதி இருப்பதால், தங்கம் வாங்குவதில் வெளிப்படைத்தன்மை உருவாகி, ஏழை மற்றும் நடுத்தர மக்களின் உழைப்புப் பணம் வீணாகாமல் பாதுகாக்கப்படுகிறது...!!
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications