Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தங்க சீட்டு.. பெரிய "ஆப்பு" மறைஞ்சு இருக்கு.. உடைத்து பேசிய ஆனந்த் சீனிவாசன்.. இது ரொம்ப ரிஸ்க்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தக் காலத்தில் தங்கம் விற்கும் விலைக்கு யாராலும் ஒரேயடியாக கணிசமான அளவுக்கு அதை வாங்க முடிவதில்லை. இதனால் பலரும் சீட்டுப் போட்டே தங்கத்தை வாங்கி வருகிறார்கள். இதற்கிடையே தங்கச் சீட்டில் இருக்கும் ஆபத்து தொடர்பாகப் பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார்.

தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வந்த நிலையில், இப்போது தான் கொஞ்சம் கேப் விட்டுள்ளது. ஒரு நாள் ஏறினால் மறுநாள் சரிவது என்றே மாறி மாறி இருந்து வருகிறது.. அப்படித் தான் கடந்த 4 நாட்களாகச் சரிந்த தங்கம் விலை, இன்று உயர்ந்தது. இருப்பினும், ஒப்பீட்டளவில் விலை பெரியளவில் உயராமல் இருப்பதால் பொதுமக்கள் இந்தச் சமயத்தில் ஆர்வமாகத் தங்கத்தை வாங்கி வருகிறார்கள்.

Anand Srinivasan gold personal finance

தங்க சீட்டு

தங்கம் விற்கும் விலைக்குப் பலரும் ஒரே நேரத்தில் பெரிய தொகையைப் புரட்ட முடியாது என்பதால் தங்கச் சீட்டு மூலமாகவும் நகையை வாங்குகிறார்கள். மேலும், தங்கச் சீட்டு மூலம் வாங்கினால் செய்கூலி, சேதாரத்தில் சலுகை கிடைப்பதாலும் மக்கள் பலரும் அதில் வாங்குகிறார்கள். நமது ஊரில் பல காலமாகவே இதுபோல தங்கச் சீட்டில் முதலீடு செய்யும் முறை இருந்தே வருகிறது.

இதற்கிடையே தங்க சீட்டில் இருக்கும் சிக்கல்கள் தொடர்பாகப் பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார். மேலும், டிஜிட்டல் கோல்ட் வகைத் தங்கம் வாங்குவதை ஏன் ஒருவர் தவிர்க்க வேண்டும் என்பதை விளக்கிய அவர், அதில் இருக்கும் ரிஸ்க்குகளையும் எளிமையாக விளக்கினார். அப்போது தான் தங்க சீட்டு தொடர்பாகவும் சில கருத்துகளை அவர் கூறினார்.

ஆனந்த் சீனிவாசன்

இது தொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில், "நான் பல காலமாகவே இதைத் தான் சொல்லி வருகிறேன். ஒரு நிறுவனத்திடம் நீங்கள் முதலீடு எனக் காசை கொடுத்தால் அது 3 விஷயங்களில் தான் இருக்க வேண்டும். ஒன்று ஐஆர்டிஏ சர்டிபிகேட் .. இன்சூரன்ஸ் தொடர்பானது என்றால் இந்த ஐஆர்டிஏ சான்றிதழ் இருக்க வேண்டும்.. டெபாசிட், வட்டி, கடன் போல எதாவது இருந்தால் ஆர்பிஐ சர்டிபிகேட் இருக்க வேண்டும்.

முதலீடு, பங்குச்சந்தை, பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட், ஈல்டுன்னு ஏதாவது இருந்தால் செபி சான்றிதழ் இருக்க வேண்டும். இந்த மூன்றில் எதுவும் இல்லை என்றால் உங்கள் பணத்தை வைத்து நீங்களே ரிஸ்க் எடுக்கிறீர்கள் என அர்த்தம். நீங்கத் தவறு செய்துவிட்டு.. என்ன செய்யலாம் எனப் புலம்புவதால் எந்தவொரு பயனும் இல்லை.

தங்க சீட்டு ஆபத்து

ரொம்ப சிம்பிளாக சொல்கிறேன். செபியின் கீழ் கோல்ட் இடிஎஃப் இருக்கிறது. அது 6, 7 வகை இருக்கிறது. அதில் எதாவது வாங்கலாம். அல்லது காயினாக வாங்கலாம். அப்படி இல்லை என்றால் நகையாக வாங்கி வைக்கலாம். இன்னொரு விஷயத்தையும் நான் இங்குச் சொல்ல விரும்புகிறேன்.. இந்த நகைச்சீட்டு போடுவதும் உங்க ரிஸ்கில் தான் போடுகிறீர்கள். நகைச்சீட்டும் யாருடைய கண்ட்ரோலிலும் இல்லை. சம்பந்தப்பட்ட நிறுவனம் காலியாகிவிட்டாலும் நகை சீட்டு அவ்வளவு தான்" என்றார்.

இப்போது வாங்கலாமா

அதேபோல தங்கத்தில் இப்போது முதலீடு செய்யலாமா வேண்டாமா என்ற கேள்விக்கு அவர், "இப்போது அவசரமாக தங்கம் வேண்டும் என்றால் வாங்குங்கள்.. இல்லையென்றால் ஒரேயடியாக வாங்க வேண்டாம்.. மெல்ல மெல்லத் தங்கத்தை வாங்குங்கள். தங்கத்தைப் பொறுத்தவரை எப்போது வேண்டுமானாலும் அதை வாங்கலாம். உலக நாடுகள் நோட்டுகளை அடித்துக் கொண்டே இருக்கிறார்கள். தங்கத்தை அவ்வளவு சீக்கிரம் உற்பத்தி செய்ய முடியவில்லை. தங்கம் விலை ஏற அதுவே காரணம்" என்றார்.

டிஜிட்டல் தங்கம்

இந்தக் காலத்தில் டிஜிட்டல் தங்கத்தில் பலரும் முதலீடு செய்கிறார்கள். ரூ.100ல் இருந்தே டிஜிட்டல் தங்கத்தை வாங்க முடியும் என்பதாலேயே பலரும் அதில் முதலீடு செய்தனர். இந்தச் சூழலில் தான் தங்களுக்கும் இந்த டிஜிட்டல் கோல்ட் முதலீட்டிற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்று செபி ஒரு விளக்க அறிக்கையை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து பலரும் தங்கள் டிஜிட்டல் கோல்ட்டை விற்கவும் ஆரம்பித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+