தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..!
சென்னை: ஈரான் போர் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்ட கடும் எச்சரிக்கை இந்திய கமாடிட்டி சந்தைகளிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக நேற்று டிரம்ப் அமெரிக்க மக்கள் மத்தியில் பேசிய போது அடுத்த 2-3 வாரத்தில் ஈரான் மீது பெரும் தாக்குதல் நடத்தப்படும் என்றும், மீண்டும் ஈரான் நாட்டு மக்களை கற்காலத்திற்கு கொண்டு செல்லும் அளவுக்கு இத்தாக்குதல் இருக்கும் எனவும் பேசியிருந்தார். இது எதிரொலியாக நேற்றைய வர்த்தகத்தில் பதிவான உயர்வு இன்று மொத்தம் பல்டி அடித்து பழைய நிலைக்கே சென்றுள்ளது.
இதன் எதிரொலியாக எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் வியாழக்கிழமை பெரும் சரிவை பதிவு செய்துள்ளது.

எம்சிஎக்ஸ் சந்தையில் மே 2026 முடியும் பியூச்சர்ஸ் ஒப்பந்தத்திற்கான வெள்ளி விலை கிட்டத்தட்ட 13,613 ரூபாய் குறைந்து ஒரு கிலோவுக்கு ரூ.2,29,888 என்ற நிலைக்கு சரிந்தது. இதன் மூலம் ஒரே நாளில் வெள்ளி விலை எம்சிஎக்ஸ் சந்தையில் 5.5% வீழ்ச்சி அடைந்துள்ளது, இது சில்வர் ஈடிஎப் முதலீட்டிலும் எதிரொலிக்கும்.
இதேபோல், ஜூன் 2026 முடியும் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் ஃப்யூச்சர்ஸ் விலை 2,700 ரூபாய் வரையில் குறைந்து 1,50,936 ரூபாய் வரையில் குறைந்துள்ளது. இதன் மூலம் ஒரு நாளில் தங்கம் விலை 1.80 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
இந்த திடீர் வீழ்ச்சி, உலக சந்தைகளில் ஏற்பட்ட மாற்றங்களின் பிரதிபலிப்பாக பார்க்கப்படுகிறது.
MCX சந்தையில் தற்போது தங்கத்திற்கு ரூ.1,52,200 முதல் ரூ.1,50,800 வரை ஆதரவு நிலையும், ரூ.1,54,800 முதல் ரூ.1,56,000 வரையில் எதிர்ப்பு நிலைகள் உள்ளன.
வெள்ளிக்கு ரூ.2,40,000 முதல் ரூ.2,34,400 வரை ஆதரவு நிலையும், ரூ.2,47,700 முதல் ரூ.2,51,200 வரையிலான எதிர்ப்பு நிலைகளும் உள்ளது.
எண்ணெய் உயர்வு, டாலர் வலிமை - தங்கத்திற்கு பாதுப்பு
டிரம்ப் பேச்சால் உலக சந்தைகளில் பதற்றம் அதிகரித்ததால், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 4% க்கும் மேல் உயர்ந்தது. அதேசமயம், அமெரிக்க 10 ஆண்டு அரசு பத்திரத்தின் வருமானம் மற்றும் டாலர் மதிப்பு ஆகியவை உயர்ந்தன.
இதனால் தங்க விலையில் கடும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளன. பொதுவாக, டாலர் வலுப்பெறும் போது தங்கம் மீது முதலீடு குறையும், இது தான் தற்போதும் நடந்துள்ளது.
சென்னை ரீடைல் விலை - தங்கம், வெள்ளி சரிவு
சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகளும் சரிவை பதிவு செய்துள்ளன. 24 காரட் தங்கம் கிராமுக்கு 109 ரூபாய் குறைந்து 15,218 ரூபாயாகவும், 22 காரட் தங்கம் கிராமுக்கு 13,950 ஆகவும், 18 காரட் தங்கம் 11,635 ஆகவும் குறைந்துள்ளது. நேற்று 22 கேரட் தங்கம் கிராமுக்கு 380 ரூபாய் வரையில் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 255 ரூபாயாகவும், கிலோவுக்கு 10000 ரூபாய் குறைந்து ரூ.2,55,000 ஆகவும் குறைந்துள்ளது. மேலும், பிளாட்டினம் விலையும் சரிவை சந்தித்து ஒரு கிராமுக்கு 124 ரூபாய் குறைந்து ரூ.5,750 ஆக குறைந்துள்ளது.












Click it and Unblock the Notifications