சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகத்தை விட இந்தியாவில் தங்கம் விலை குறைவுதானாம்.. என்ன காரணம் தெரியுமா?
சென்னை: ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், கத்தார் போன்ற மத்திய கிழக்கு நாடுகளை விட இந்தியாவில் தற்போது தங்கம் விலை குறைவாக உள்ளது. வழக்கமாக இந்த நாடுகளில் எல்லாம் தங்கம் விலை குறைவாகவே இருக்கும். ஆனால் தற்போது இந்தியாவை விட விலை அதிகரித்து இருப்பது ஏன்? என்பதற்கான காரணங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.
தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டு கடந்த சில தினங்களாக குறைந்து வருகிறது. இது நகை பிரியர்களுக்கு கொஞ்சம் ஆறுதல் கொடுத்துள்ளது. ஆனாலும் விலை குறைவு என்பது தற்காலிகமானது எனவும் மீண்டும் விலை உயர வாய்ப்பு உள்ளதாக அத்துறை நிபுணர்கள் சொல்லும் கருத்தாக உள்ளது. எது எப்படியோ.. கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவது கொஞ்சம் ஆறுதல் கொடுப்பதாக அமைந்துள்ளது.

சரி அதெல்லாம் இருக்கட்டும். பொதுவாக தங்கம் விலை இந்தியாவில் அதிகமாக இருப்பதால் வெளிநாடுகளுக்கு சென்றால் குறைந்த விலையில் தங்கம் வாங்கிக் கொள்ளலாம் என பலரும் நினைப்பார்கள். குறிப்பாக வரிகள் இல்லாத மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்று தங்கம் வாங்கினால் பர்சில் இருக்கும் பணம் மிச்சப்படும் என்று பலரும் முன்பு நினைப்பதுண்டு. ஆனால் மத்திய கிழக்கு நாடுகளை விட தற்போது இந்தியாவில் தங்கம் விலை குறைவாக உள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், ஓமன் மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளை விட இந்தியாவில் தங்கம் விலை தற்போது குறைவாகத்தான் உள்ளதாம். நவம்பர் 16 ஆம் தேதி நிலவரப்படி இந்தியாவில் 24 கேரட் தங்கம் 10 கிராம் ரூ.75,650 ஆக விற்பனையானது. 22 கேரட் தங்கம் ரூ.69,350 ஆக விற்பனையானது. 18 கேரட் தங்கம் ரூ.56,740 ஆக இருந்தது.
அதே நாளில் ஓமனில் 24 கேரட் தங்கம் 10 கிராம் விலை ரூ.75,763 ஆகவும், கத்தாரில் ரூ.76,293 ஆகவும் இருந்துள்ளது. கத்தாரிலும் தங்கம் விலை கணிசமான அளவு உயர்ந்தது. 24 கேரட் தங்கம் 100 கிராமின் விலை ரூ.7 லட்சத்து 62 ஆயிரத்து 934 ஆக உயர்ந்தது. ஒரே நாளில் ரூ.25,470 உயர்ந்தது. 24 கேரட் தங்கத்தின் 10 கிராம் விலை ரூ.76,293 ஆக உள்ளது.
சிங்கப்பூரிலும் தங்கத்தின் விலை இந்தியாவை விட அதிகமாகவே உள்ளது. சிங்கப்பூரில் 24 கேரட் தங்கத்தின் 10 கிராமின் விலை ரூ.76,805 ஆக உள்ளது.ஐக்கிய அரபு அமீரகத்தில் இதுவரை இல்லாத அளவாக 100 கிராம் தங்கத்தின் விலை ரூ.7 லட்சத்து 62,039 ஆகவும், 10 கிராம் சில்லறை விற்பனையில் ரூ.76,204 ஆகவும் உள்ளது.
வரிகள் இல்லாத காரணத்தால் தங்கம் விலை இந்தியாவை விட குறைவாக இருக்கும் என்பதால், இந்த பகுதிகளுக்கு சென்றால் நகை வாங்க நகை பிரியர்கள் விருப்பம் காட்டுவார்கள். ஆனால், தற்போது தலைகீழாக இந்தியாவை விட தங்கம் விலை ஏன் உயர்ந்து இருக்கிறது என்று பார்த்தால்.. புவிசார் அரசியல் பதற்றமே காரணம் என பொருளாதார நிபுணர்கள் சொல்லும் கருத்தாக உள்ளது. இஸ்ரேல் போர் காரணமாக தங்கம் மீதான முதலீடு மத்திய கிழக்கு நாடுகளில் அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே தங்கம் மற்றும் வெள்ளி விலை பிராந்திய சந்தைகளில் உயர்ந்துள்ளன.
-
ராணிப்பேட்டை வீட்டில் 21 சவரன் தங்கம்.. 2 ஏக்கர் நிலப்பத்திரம்.. பீரோவை உடைக்காமலேயே ட்விஸ்ட் -
நான் வந்துட்டேன்.. மீண்டும் கெத்தாக திரும்பிய தங்கம்! டாலரால் தலைகீழான மார்க்கெட்! அடுத்து என்ன? -
2026 தங்கம் வெள்ளி விலை சரியப்போகுது.. இந்த ஜூனில் வெடிக்க போகும் பலூன்? வல்லுநர்கள் கணிப்பு -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம்












Click it and Unblock the Notifications