என்னங்க சொல்றீங்க.. தங்கத்துக்கும் பூமிக்கும் சம்பந்தமில்லையா? பிறகு எப்படி வந்தது? பிரபஞ்ச ரகசியம்!
சென்னை: இன்று உலகம் முழுவதும் பேசுபொருளாக இருப்பது தங்கம் தான். ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையைப் பொறுத்து உலக அரசியலும், உலக பொருளாதாரமும் தீர்மானிக்கப்படுகிறது. பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக தங்கம் தோண்டி எடுக்கப்பட்டு இன்று நகைகளாகவும், தங்க காசுகளாகவும், தங்க கட்டிகளாகவும் உலகத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் உண்மையில் பூமியிலிருந்து தங்கம் தோன்றவில்லை என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கின்றனர். வான்வெளி மண்டலத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய வெடிப்புகள் தான் தங்கத்தை பூமிக்கு கொண்டு வந்திருக்கிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.
தங்கம் என்றாலே உலகம் முழுவதும் மிகவும் மதிப்பு பெற்ற உலோகம். தங்கம் எங்கு இருந்தாலும் பெருமையின் சின்னமாகக் கருதப்படுகிறது. ஏன் உலகத்தின் பொருளாதாரத்தையே தீர்மானிப்பது தங்கம் தான். உலக அரசியலும் முழுக்க முழுக்க தங்கத்தைச் சார்ந்து தான் இருக்கிறது.
ஆனால் இந்த தங்கம் முதலில் எங்கே உருவானது தெரியுமா? பூமியிலா? எரிமலைகளிலா? இல்லையென்றால் கடலுக்குக் கீழே உள்ள ஏதாவது தாது படிவங்களிலா? என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். உண்மையைச் சொன்னால், தங்கத்தின் பிறப்பு பூமியில் இல்லை.

தங்கம் உருவாக்கம்
மனிதர்களின் கற்பனையைத் தாண்டும் அளவிற்கு தொலைவில் உள்ள விண்வெளியில் எற்பட்ட மிகப் பெரிய அளவிலான வெடிப்புகள்தான் தங்கத்தை உருவாக்கியவை என்பது விஞ்ஞான ரகசியம். பூமியிலுள்ள ஒவ்வொரு தங்கத் துகளுக்கும் வானில் நடந்த பிரமாண்ட பேரழிவுகள்தான் காரணம். அறிவியலாளர்கள் கண்டுபிடித்த முக்கியமான தகவல் என்னவெனில், தங்கத்தின் உருவாக்கம் நியூட்ரான் நட்சத்திர மோதல் எனப்படும் அரிதான வானியல் நிகழ்வில் தான் நடைபெறுகிறது.
நியூட்ரான் நட்சத்திர மோதல்
நியூட்ரான் நட்சத்திரங்கள் என்பது ஒரு நட்சத்திரம் இறந்தபின் அதன் அடர்த்தியான எச்சம். இரண்டு நியூட்ரான் நட்சத்திரங்கள் ஒரே சுற்றுப் பாதையில் சிக்கிக் கொண்டு மெதுவாக ஒன்றை ஒன்று நோக்கி சேரும்போது, இறுதியில் அவை மிகப் பெரிய வெடிப்பில் மோதிக்கொள்கின்றன. இதனால் உருவாகும் அதிர்ச்சி அலைகள், ஈர்ப்பு அலைகள் மற்றும் பிரபஞ்ச வெப்ப வெடிப்புகள் வானில் எண்ணற்ற நியூட்ரான்களை பரப்புகின்றன. இந்த சூழலில் நிகழும் r-process எனப்படும் அணுக்கரு இணைவு மாற்றமே தங்கம் போன்ற கனரக தனிமங்களை உருவாக்குகிறது.
மக்னட்டார் ஃபிளேர்
2017 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்ட GW170817 என்ற ஈர்ப்பு அலை தங்கம் உருவான மர்மத்தைத் தீர்த்தது. அந்த மோதலில் தங்கத்திற்கான அடையாளங்கள் தெளிவாகப் பதிவானது. ஆனால் இதுவே ஒரே மூலமா என்ற கேள்வியும் எழுந்தது. காரணம், பிரபஞ்ச வரலாற்றின் ஆரம்பத்திலேயே உருவான நட்சத்திரங்களில் கூட தங்கத்தின் அடையாளங்கள் இருந்தன. இது எப்படி சாத்தியமானது என்ற புதிரைத் தீர்க்கும் வகையில் 2025 ஆம் ஆண்டில் கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் அனிருத் படேல் தலைமையிலான குழு மற்றொரு மூலத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. அதுதான் மக்னட்டார் ஃபிளேர்.
விண்கல் தாக்குதல்
மக்னட்டார் என்பது மிக அதிக காந்த சக்தி கொண்ட நியூட்ரான் நட்சத்திரம். இதன் காந்தப்புலம் திடீரென முறிந்தால் "ஸ்டார்க்வேக்" ஏற்பட்டு, ஒளியின் வேகத்தை நெருங்கும் வேகத்தில் நியூட்ரான்களை வெளியே தள்ளும். 2004-ல் ஏற்பட்ட மக்னட்டார் வெடிப்பின் தரவுகள் மீளாய்வு செய்யப்படும்போது, தங்கம் போன்ற கனரக தனிமங்களின் உருவாக்கத்தை காட்டும் r-process அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனால் தங்கம் உருவாகும் இன்னொரு வானியல் வழி இருப்பது உறுதியாகியது.
தங்க பிறப்பு ரகசியம்
அப்படிஎன்றால், வானுலகத்தில் உருவான தங்கம் பூமிக்கு எப்படி வந்தது? எனவும் கேள்வி எழுமே? பூமி 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானபோது அதன் முதல் நிலையில் இருந்த தங்கம் அதன் மிகுந்த அடர்த்தி காரணமாக நேராக பூமியின் உருகிய லாவாவுக்குள் மூழ்கியது. நாம் இன்று எளிதில் எடுத்துக்கொள்ளும் தங்கம் பெரும்பாலும் பின்னர் நிகழ்ந்த Late Heavy Bombardment எனப்படும் விண்கல் தாக்குதல்களின் வழியாக பூமிக்கு வந்தது என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
தங்க விஞ்ஞான கண்டுபிடிப்பு
கோடி கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் தொடர்ந்து விழுந்த விண்கற்களில் தங்கம், பிளாட்டினம் போன்ற கன உலோகங்கள் இருந்தன. அந்த தாக்குதல்களின் காரணமாக அவை பூமியின் மேலடுக்கு பகுதியில் சேர்ந்து இன்று நாம் காணும் தங்கச் சுரங்கங்களாக மாறின. பின்னர் பூமியின் உட்பகுதியில் உள்ள சூடான திரவங்கள் பாறைகளின் பிளவுகளில் வழிந்து சென்று குளிரும் போது தங்கம் துகள்களாக பதிய, தங்க படிமங்கள் உருவானது. எரிமலை மாக்மா குளிரும் போது கூட தங்கம் படிகமாகி பாறைகளில் சேர்கிறது. இவ்வாறு வானுலக வெடிப்புகளிலிருந்து பூமி வரை வந்த இந்த பயணம்தான் நம்முடைய தங்கத்தின் உண்மையான பிறப்பு கதை என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
-
படக்குனு 10 கிராம் வாங்கிப் போடுங்க மக்களே! சட்டுனு சரிந்த தங்கத்தின் விலை.. இன்னும் சரியப் போகுதாம் -
Gold Rate Today: திடீர் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. குறைந்த வேகத்தில் மீண்டும் உயர்வு! மாலையில் அதிர்ச்சி! -
20% வரை சரிந்த தங்கம் விலை! ஆனாலும் இந்தியாவுக்கு முழு பலன் கிடைக்காது! நிபுணர்கள் சொல்லும் விளக்கம் -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
தயவு செஞ்சு குறைஞ்சுடாத தங்கமே.. மீண்டும் திருப்பி வைக்க முடியாது.. தங்கம் விலை சரிவால் ட்விஸ்ட் -
கன்னியாகுமரியில் 45 சவரன் தங்கம்.. கப்பல் என்ஜினியர் வீட்டில் திருடன் கொடுத்த ஒற்றை க்ளூ -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்!












Click it and Unblock the Notifications