ஆடி ஆஃபர்.. விகடன் டெலிவிஸ்டாஸின் ரஞ்சிதமே.. சீரியல் பார்க்கும் இல்லத்தரசிகளுக்கு தங்கம் ஜாக்பாட்
சென்னை: சின்னத்திரையில் தனக்கென தனி பாதையில் கொடிகட்டிப் பறக்கும் கலைஞர் தொலைக்காட்சியும், சின்னத்திரை தொடர்களில் தனி முத்திரை பதித்திருக்கும் விகடன் டெலிவிஸ்டாஸ் நிறுவனமும் "ரஞ்சிதமே" என்கிற புத்தம் புதிய மெகாத்தொடருக்காக இணைந்திருக்கிறது. ஆடி ஸ்பெஷல் சர்ப்ரைஸாக இந்த சீரியலை தவறாமல் பார்ப்பவர்களுக்கு தினம் ஒரு நபருக்கு ஒரு பவுன் தங்கம் பரிசுக்காக வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆடி மாதம் வந்தாலே ஜவுளிக்கடை முதல் நகைக்கடை வரை தள்ளுபடி விளம்பரங்கள் கொடி கட்டி பறக்க ஆரம்பித்து விடும். இப்போது டிவி சீரியலை பார்க்க வைக்க ஆடி மாத ஆஃபராக தங்கம் ஜாக்பாட் ஆக இல்லத்தரசிகளுக்கு கிடைக்கப்போகிறது.

ஜூலை 17ஆம் தேதி ஆடி முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கும் இந்த "ரஞ்சிதமே" மெகாத் தொடரை இனியன் தினேஷ் இயக்கியிருக்கிறார். இந்தத் தொடரை அழகி' தொடரை இயக்கிய இயக்குநர் இனியன் தினேஷ் இயக்குகிறார். காதலனைக் கரம்பிடிக்கப் போராடும் பெண் தனது போராட்டத்தில் வெற்றி பெற்றாளா என்பதுதான் இதன் ஒன்லைன்.
இந்த நெடுந்தொடரில், நாயகி ரஞ்சிதாவாக மனிஷாஜித்தும், மாமியாராக ரூபாஸ்ரீயும், நாயகனாக சதீஷூம், முக்கிய கதாபாத்திரங்களில் ஹரிநந்தன், ராம்ஸ் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். பாஸ்கர் ஒளிப்பதிவு செய்கிறார். மனிஷாஜித் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான உயிரே' தொடரின் மூலம் நாயகியாக சின்னத்திரைக்குள் அறிமுகமானவர். கிட்டத்தட்ட 21 வருடங்களுக்கும் மேலாக மீடியா துறையில் பயணித்துக்கொண்டிருக்கிறார். 'கம்பீரம்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக இவரது முகம் பலருக்கும் அறிமுகமானவர்தான். அருண் கதாபாத்திரத்தில் நடிக்கும் சதீஷும் சின்னத்திரையில் நடித்தவர்தான். மின்னலே, சித்திரம் பேசுதடி போன்ற தொடர்களில் நடித்தவர். இவர்தான் இந்தத் தொடரில் கதாநாயகனாக நடிக்கிறார்.
யதார்த்த கதைக்களத்தில் குடும்ப பின்னணியில் உருவாகி வரும் இந்த நெடுந்தொடரில், மகன் மீது அதீத பாசம் கொண்ட அம்மா, மகனுக்கு திருமணமாகிவிட்டால் தன்னை விட்டு பிரிந்து விடுவானோ என்று பயப்படுகிறார். மற்றொரு புறம் தன் அக்காவின் கணவரால் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் நாயகி சென்னை வந்து நாயகனின் வீட்டில் குடியிருக்கிறார். இவர்களுக்குள் நடக்கும் காதல், மோதல், குடும்பச் சிக்கல்களை சுற்றி குடும்பங்கள் விரும்பும் விதமாக விறுவிறுப்பான மெகாத்தொடராக "ரஞ்சிதமே" உருவாகியிருக்கிறது.
சின்னத்திரை ரசிகர்களை நாள் முழுவதும் கட்டி போடுவதில் பெரும் பங்கு வகிப்பது சீரியல்கள். வெவ்வேறு தொலைக்காட்சிகளில் வகைவகையாக சீரியல்கள் ஒளிபரப்பானாலும் அவை அனைத்திற்கும் ரசிகர் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகின்றன. திரைப்படங்களுக்கு செய்யப்படும் புரொமோஷன் போலவே சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கும் டிவி சீரியல்களுக்கும் புரமோசன் செய்யப்படுகிறது.

ரசிகர்களை தங்களின் நிகழ்ச்சிகளை பார்க்க வைப்பதற்காக போட்டி போட்டு கொண்டு புரொமோஷன் செய்து தொலைக்காட்சி சேனல்கள் புதிய யுக்தியாக ஆடி மாதத்தையும் சேர்த்துவிட்டனர். ஆடி மாதம் அம்மனுக்கு மட்டும் உகந்தது அல்ல தள்ளுபடிக்கும்தான் என்பது காலம் காலமாக இருந்து வரும் வழக்கம். அதை லாவகமாக பயன்படுத்தி ஆடி ஆஃபர் ஒன்றை சின்னத்திரை ரசிகர்களுக்கு குறிப்பாக இல்லத்தரசிகளுக்கு வழங்குகிறது கலைஞர் டிவி.
'ரஞ்சிதமே' டிவி சீரியல் ஆடி முதல்நாளில் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ளது. ஆடி ஸ்பெஷல் ஆஃபராக ஜூலை 17ம் தேதி முதல் ஆகஸ்ட் 17ம் தேதி வரை இந்த சீரியலை தவறாமல் பார்ப்பவர்களுக்கு தினம் ஒரு நபருக்கு ஒரு பவும் தங்கம் பரிசுக்காக வழங்கப்படும் என்ற விளம்பரத்துடன் புரொமோஷன் செய்யப்படுகிறது. இடையில் கேள்விகள் ஏதேனும் கேட்கப்பட்டு அதற்கு பதில் அளிப்பவர்களில் ஒருவர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு பரிசளிக்க படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆஃபர் கலைஞர் டிவி ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த சின்னத்திரை ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. தங்கம் விற்கும் விலையில் ஜாக்பாட் கிடைத்தால் விடுவார்களா? கலைஞர் டிவியில் 'ரஞ்சிதமே' தொடரை தவறாமல் பார்த்து தங்க மழையில் நனைய தயாராகி விட்டனர் இல்லத்தரசிகள். டிவி சீரியல் பார்க்க வைக்க இன்னும் என்னென்ன பரிசு அறிவிக்கப்போகிறார்களோ?
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications