தங்க நகைக்கடைகள் சொல்லாத லாபம் ரகசியம்.. 1 ரூபாய் நஷ்டமில்லாமல் தங்கம் வாங்க சூப்பர் சேமிப்பு பிளான்
சென்னை: இந்திய கலாச்சாரத்தில் தங்கம் என்பது வெறும் ஆபரணம் மட்டுமல்ல, அது ஒரு பாதுகாப்பான முதலீடாகவும் கருதப்படுகிறது. நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள் தங்களின் சுப நிகழ்ச்சிகளுக்காகவும், எதிர்காலத் தேவைகளுக்காகவும் சிறுகச் சிறுகச் சேமிக்க நகைக்கடைகள் வழங்கும் அருமையான திட்டம்தான் "தங்க சேமிப்புத் திட்டங்கள்" ஆகும்.. இந்த திட்டத்தின் செயல்பாடுகள், சிறப்புகள், பலன்கள் பற்றி சுருக்கமாக பார்ப்போம்..!!
தங்கம் வாங்குவது என்பது நம்மில் பலருக்கும் ஒரு பெரிய கனவு ஆகும்.. ஆனால் இன்று விற்கின்ற அதிக விலையில்.. மொத்தமாகப் பணம் கொடுத்து நகை வாங்குவது என்பது சாதாரண மக்களுக்கு மிகவும் கடினமான ஒன்று.. இதற்காகவே நகைக்கடைகள் ஒரு எளிய சேமிப்புத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளன..

தங்க நகை சேமிப்புத் திட்டம்
அதன்பெயர் தங்க சேமிப்புத் திட்டங்கள்.. இது நாம் வீட்டில் உண்டியலில் காசு சேமிப்பது போன்ற ஒரு முறைதான்.. ஆனால் இதில் பணத்திற்குப் பதிலாகத் தங்கம் நம் கணக்கில் சேரும்..
இந்தத் திட்டம் எப்படி செயல்படுகிறது என்றால்.. நீங்கள் ஒரு நகைக்கடையைத் தேர்வு செய்து, மாதம் இவ்வளவு பணம் என்று முடிவு செய்ய வேண்டும்..உதாரணமாக, மாதம் ஆயிரம் ரூபாய் அல்லது உங்கள் வசதிக்கு ஏற்ப ஒரு தொகையைத் தொடர்ந்து 11 மாதங்கள் வரை கட்ட வேண்டும்.. நீங்கள் ஒவ்வொரு மாதம் கட்டும் பணத்திற்கும் அன்றைய விலையில் எவ்வளவு தங்கம் வருமோ, அந்த அளவு உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.. திட்டத்தின் இறுதியில் நீங்கள் சேமித்த மொத்த தங்கத்தை நகையாக வாங்கி கொள்ளலாம்..
செய்கூலி சேதாரம்
இந்தத் திட்டத்தில் சேருவதால் நமக்கு என்ன லாபம் என்று பார்த்தால், இதில் வட்டிப் பணம் வராது.. ஆனால் அதைவிடப் பெரிய லாபமாகச் "சேதாரம்' மற்றும் "செய்கூலி" தள்ளுபடி செய்யப்படும்.. பொதுவாக நாம் ஒரு கடைக்கு சென்று நேரடியாக நகை வாங்கினால், நகையின் விலையோடு சேர்த்து சேதாரம் என ஒரு பெரிய தொகையை கூடுதலாகக் கொடுக்க வேண்டும்..
ஆனால் இந்தச் சேமிப்புத் திட்டத்தில் சேர்ந்தால்.. அந்தச் சேதாரப் பணத்தைச் செலுத்தத் தேவையில்லை.. இது நமக்கு ஒரு பெரிய மிச்சமாகும்..
மேலும் இதில் இன்னொரு நன்மை என்னவென்றால், தங்கம் விலை ஏறிக்கொண்டே இருக்கும் காலங்களில்.. நீங்கள் ஒவ்வொரு மாதமும் கட்டும் பணத்திற்கு அந்த அன்றைய விலையிலேயே தங்கம் கணக்கிடப்படும்.. இதனால் எதிர்காலத்தில் தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தாலும், நீங்கள் ஏற்கனவே சேமித்த தங்கத்திற்கு நீங்கள் கூடுதல் பணம் கொடுக்கத் தேவையில்லை..
நகைக்கடைகள் லாபம் கணக்கு
இது விலை உயர்விலிருந்து உங்களை பாதுகாக்கும் ஒரு சிறந்த வழியாகும்.. சில கடைகளில் ஒரு மாதத் தவணையை அவர்களே இலவசமாகப் போடுவார்கள்.. ஆனால், ஒவ்வொரு கடைக்கும் விதிமுறைகள் மாறுபடும்… எழுத்துப்பூர்வ விதிமுறைகளை சரிபார்க்க வேண்டும்
இருந்தாலும் சில முக்கியமான விஷயங்களை கவனிக்க வேண்டும்.. இந்தத் திட்டத்தில் கட்டும் பணத்தைத் திரும்ப பணமாக வாங்க முடியாது.. மாறாக, கண்டிப்பாக நகையாகத்தான் வாங்க வேண்டும்.. அதேபோல்.. பாதியிலேயே திட்டத்தை நிறுத்தினால், கடைகள் வழங்கும் சேதாரத் தள்ளுபடி போன்ற சலுகைகள் கிடைக்காமல் போகலாம்.. எனவே இடையில் நிறுத்தாமல் தொடர்ந்து கட்டுவதுதான் நல்ல லாபத்தைத் தரும்..
சுருக்கமாகச் சொன்னால்.. மாத வருமானம் வாங்குபவர்கள் மற்றும் இல்லத்தரசிகள் கையிலுள்ள சிறு தொகையை சேமித்து சுமையே இல்லாமல் தங்கம் வாங்குவதற்கு இது ஒரு மிகச் சிறந்த வாய்ப்பு ஆகும்.. பெரிய கடைகளில் அல்லது நம்பிக்கையான கடைகளில் இத்திட்டத்தைத் தொடங்கினால் உங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும்.. எதிர்கால சுப நிகழ்ச்சிகளுக்குத் தங்கம் சேர்க்க இதுவே மிக எளிய வழி என்கிறார்கள் நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications