வங்கியில் தங்கக் கடன் வாங்கி அடகு வைத்த நகை திருடுபோனால்.. பணம் யார் கொடுப்பார்கள்? 

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கியில் தங்க நகை வாங்கும்போது தங்க நகைகளை அடகு வைப்பது வழக்கம்... கடன் கிடைத்துவிட்டால் நகை பாதுகாப்பாக வங்கியிடமே இருக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள்.. ஆனால், வங்கியின் பாதுகாப்பில் உள்ள அந்த நகை திருடப்பட்டால் என்ன ஆகும்? யார் பொறுப்பு ஏற்பார்கள்? முழு பணமும் திரும்பக் கிடைக்குமா? இதற்கான முக்கிய விதிமுறைகளை தெரிந்துகொள்வது அவசியம்..!!

தங்க நகைக்கு அடகு வைக்கப்பட்ட நகை, கடன் வாங்கியதால் வங்கிக்கு சொந்தமாகிவிடாது. அது கடனுக்கான பாதுகாப்பாக மட்டுமே வங்கியின் பாதுகாப்பில் இருக்கும். அதனால் அந்த நகையை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான பொறுப்பு நிறுவனத்துக்கும் உண்டு..

Bank vault containing gold jewelry for safe custody
வங்கியில் தங்கம் நகைஅடகு வைத்த நகையை பாதுகாப்பாக வைத்திருப்பது வங்கியின் பொறுப்பு.. அதனால்தான், வங்கி உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி விதிமுறைகள் கூறுகின்றன. மேலும், அடகு வைத்த நகைகளுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால், அதற்கான காப்பீடும் இருக்க வேண்டும்.

நீங்கள் நகையை அடகு வைக்கும்போது, அந்த நகை பற்றிய விவரங்களை வங்கி பதிவு செய்ய வேண்டும். நகையின் வகை, எடை, தங்கத்தின் தரம் உள்ளிட்ட விவரங்கள் அதில் இருக்கும். இதனால், எதிர்பாராதவிதமாக நகை காணாமல் போனால், வங்கியிடம் எந்த நகை இருந்தது என்பதை எளிதாக நிரூபிக்க முடியும்.

அடமானம் நகை திருடுபோனால் பணம் கிடைக்குமா?

ஒருவேளை வங்கியில் அடகு வைத்த நகை திருடுபோனால், நகையின் இன்றைய முழு விலையையும் வங்கி அப்படியே கொடுத்துவிடும் என்று நினைக்கக் கூடாது. எவ்வளவு பணம் கிடைக்கும் என்பது திருட்டு எப்படி நடந்தது, வங்கியின் தவறு இருக்கிறதா, காப்பீடு உள்ளதா உள்ளிட்ட விஷயங்களைப் பொறுத்தே முடிவு செய்யப்படும்.

தங்கக் கடனுக்காக நகை அடகு

இதில் இன்னொரு முக்கியமான விஷயம் இருக்கிறது. வங்கியின் லாக்கரில் நகை வைப்பதும், தங்கக் கடனுக்காக நகையை அடகு வைப்பதும் ஒன்றல்ல.லாக்கரில் நகை வைத்தால், அதற்குள் நீங்கள் என்ன வைத்திருக்கிறீர்கள் என்பது வங்கிக்குத் தெரியாது. அப்படி லாக்கரில் உள்ள பொருட்கள் வங்கியின் தவறு காரணமாக திருடுபோனால், சில சூழ்நிலைகளில் வங்கி இழப்பீடு கொடுக்க வேண்டும். அந்த இழப்பீட்டுக்கும் வரம்பு உள்ளது. நீங்கள் லாக்கருக்கு செலுத்தும் ஆண்டு வாடகையின் 100 மடங்கு வரை இழப்பீடு கிடைக்கும்.

ரசீது, நகை மதிப்பீட்டு விவரம் பத்திரம்

உதாரணமாக, ஆண்டுக்கு ரூ.4,000 வாடகை என்றால், ரூ.4 லட்சம் வரை இழப்பீடு கிடைக்கலாம். ஆனால், இந்த 100 மடங்கு விதி தங்கக் கடனுக்காக அடகு வைத்த நகைக்கு பொருந்தாது. அந்த நகைக்கு வேறு விதிமுறைகள் உள்ளன.

அதனால், தங்க நகையை அடகு வைக்கும்போது வங்கி கொடுக்கும் ரசீது, நகையின் மதிப்பீட்டு விவரம் ஆகியவற்றை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். நகையின் போட்டோ வாங்கிய ரசீது போன்றவற்றையும் பாதுகாப்பாக வைத்திருப்பது நல்லது. எதிர்பாராதவிதமாக நகை காணாமல் போனால், இந்த ஆவணங்கள்தான் உங்கள் நகை எது, அதன் எடை மற்றும் மதிப்பு எவ்வளவு என்பதை நிரூபிக்க உதவும்.

நகை திருடுபோனால் என்ன செய்ய வேண்டும்

நகை காணாமல் போனால், உடனடியாக வங்கிக்கு தகவல் தெரிவித்து, எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்க வேண்டும். திருட்டு தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்து, புகார் தொடர்பான ஆவணங்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.

வங்கியிடம் கொடுத்த புகார், வங்கியின் பதில், நகை அடகு ரசீது, மதிப்பீட்டு ஆவணம், நகை வாங்கிய ரசீது, புகைப்படங்கள் உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களையும் பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.

வங்கியிடம் புகார் அளித்தும் உரிய தீர்வு கிடைக்கவில்லை என்றால், முதலில் வங்கியின் குறைதீர் அமைப்பில் புகார் அளிக்கலாம். அங்கும் தீர்வு கிடைக்காத நிலையில், விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்திய ரிசர்வ் வங்கியின் குறைதீர் அமைப்பை அணுகலாம்...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+