"ரெட் அலர்ட்".. தங்கம் விலை சரமாரியாக சரிகிறது.. ஆனால் இதுதான் தங்கம் வாங்க சரியான நேரமாம்! ஏன்?
சென்னை: தங்கம் விலை கடந்த 1 வாரமாக வேகமாக சரிந்து வருகிறது. சர்வதேச அளவில் தங்கம் விலை சரியும் இந்த சூழல்தான் தங்கம் வாங்க சரியான நேரம் என்று வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா உட்பட உலகம் முழுக்க தங்கத்தின் விலை கடந்த 1 வாரமாக நாட்களாக வேகமாக குறைந்து வருகிறது. சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 காரட் தங்கம் விலை ₹12,546 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 காரட் தங்கம் விலை ₹11,500 ஆகவும், 1 கிராம் 18 காரட் தங்கம் விலை ₹9,650 ஆகவும் உள்ளது. சர்வதேச அளவில் 1.7 ட்ரில்லியன் டாலர் தங்க மார்க்கெட்டில் மட்டும் அழிந்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் தங்க இருப்பு செப்டம்பர் 26, 2025 நிலவரப்படி 880 மெட்ரிக் டன்களைத் தாண்டி, அதன் மொத்த மதிப்பு 95 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டில் உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் 3,16,000 கிலோகிராம் தங்கத்தை சேர்த்துள்ளன.
தங்கத்தின் விலை உயர்வு
சர்வதேச அளவில் தங்கத்தின் விலை சரிவு மற்றும் உயர்வுக்கு உலகப் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைகளே காரணம் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இது முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளை நாடத் தூண்டியுள்ளது. இந்த நிலை ஒரு எச்சரிக்கை மணி.. அதாவது ஒரு ரெட் அலர்ட் என 'டாக்ஸ் பட்டி' நிறுவனர் சுஜித் பங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
உலக அரசியலில், தங்க மார்க்கெட்டில், பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றத்திற்கான சிவப்பு எச்சரிக்கை இது என அவர் எச்சரிக்கிறார். அதாவது World Order மாற்றம் அடைகிறது. தங்கம் விலை இப்போது ஏறி இறங்குவது அதற்கான அறிகுறிதான் என்று 'டாக்ஸ் பட்டி' நிறுவனர் சுஜித் பங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
தங்கம் விலை சரிவு
போன வாரம் வரி புதிய உச்சத்தைத் தொட்டிருந்த தங்கத்தின் விலை திடீரென வீழ்ச்சியடைந்தது. முதலீட்டாளர்கள் லாபத்தை ஈட்டுவதில் முனைப்புக் காட்டினர். அதாவது கையில் உள்ள தங்கத்தை விற்று அதை டாலராக மாற்றும் பணிகளை செய்தனர். இதனால், சந்தையில் தங்கத்தின் விலை வெகுவாகக் குறைந்தது. இந்த திடீர் வீழ்ச்சி தங்கத்தின் தொடர்ச்சியான ஏற்றம் குறித்த நம்பிக்கையில் இருந்த பலரை வியப்படையச் செய்தது.
தங்கம் விலை சரிவு
இதன் மூலம் தங்கம் 2013ஆம் ஆண்டிற்குப் பிறகு மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்தது. ஒரே நாளில் சுமார் 6.3% சரிவு ஏற்பட்டது. . ஸ்பாட் தங்கம் ஒரு அவுன்ஸ் $4,381 என்ற உச்ச நிலையிலிருந்து $4,082 ஆகக் குறைந்துள்ளது. 2013ஆம் ஆண்டிற்குப் பிறகு ஏற்பட்ட மிக மோசமான ஒருநாள் சரிவாகும். சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 காரட் தங்கம் விலை ₹13,092 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 காரட் தங்கம் விலை ₹12,001 ஆகவும், 1 கிராம் 18 காரட் தங்கம் விலை ₹9,901 ஆகவும் உள்ளது.
இந்த கடுமையான வீழ்ச்சிக்கு பல காரணிகள் பங்களித்தன. நீண்டகால ஏற்றத்திற்குப் பிறகு பலர் லாபத்திற்காக தங்கத்தை விற்றது, அமெரிக்கா-சீனா வர்த்தக உறவுகள் போன்ற புவிசார் அரசியல் பதட்டங்கள் குறைதல், அமெரிக்க டாலர் வலுவடைதல், மற்றும் தங்கத்தின் கையிருப்பு அதிகரிப்பு , சில மத்திய வங்கிகள் தங்கத்தை விற்பது ஆகியவை காரணங்கள் ஆகும்.
தங்கத்துடன் சேர்ந்து வெள்ளியின் விலையும் அக்டோபர் 21, 2025 அன்று கடுமையாகச் சரிந்தது. ஒரு அவுன்ஸ் $47.12 ஆகக் குறைந்து, கிட்டத்தட்ட 7.5% வீழ்ச்சியைச் சந்தித்தது. இது வெள்ளியின் விலையில் சமீபத்திய ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய ஒருநாள் சரிவுகளில் ஒன்றாகும். 2013ஆம் ஆண்டிலிருந்து தங்கத்தின் மிகப்பெரிய தினசரி வீழ்ச்சிக்கு இது சமமானதாகக் கருதப்பட்டது.
தங்கம் வாங்க சரியான நேரம்
தங்கம் விலை கடந்த 1 வாரமாக வேகமாக சரிந்து வருகிறது. சர்வதேச அளவில் தங்கம் விலை சரியும் இந்த சூழல்தான் தங்கம் வாங்க சரியான நேரம் என்று வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
அதாவது விலை குறையும் நேரத்தில் தங்கம் சரிகிறது என்று அச்சப்படாமல்.. தங்கத்தை வாங்க வேண்டும். இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு தங்கம் வாங்க வேண்டும். அப்படி வாங்கும் போது வரும் காலங்களில் தங்கம் உயரும் போது அது நல்ல பலன் அளிக்கும் என்று வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications