4 வருடங்களில் டபுள் மடங்கு.. அட்சய திருதியை அன்று.. கடந்த ஆண்டுகளில் தங்கம் விலை எவ்ளோன்னு பாருங்க!
சென்னை: அட்சய திருதியை நாளான இன்று ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூபாய் 71,840க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.8,980க்கு விற்பனை ஆகிறது. கடந்த ஆண்டுகளில் அட்சய திருதியை அன்று தங்கம் விலை எவ்வளவு இருந்தது எனப் பார்க்கலாம்..
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பே ஏப்ரல் மாதத்தில் அட்சய திருதியை நாளில் ஒரு சவரன் தங்கம் விலை 38 ஆயிரம் என்ற அளவில் இருந்தது. 4 ஆண்டுகளில் இது கிட்டத்தட்ட டபுள் மடங்கு என்ற அளவுக்கு தங்கம் விலை அதிகரித்துள்ளது.

அட்சய திருதியை
அட்சய திருதியை தினமான இன்று தங்க நகைகள் வாங்குவதற்காகப் பொதுமக்கள் ஆர்வத்துடன் நகைக் கடைகளில் குவிந்து வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் இன்று அதிகாலை 5 மணிக்கே பெரும்பாலான நகைக் கடைகள் திறக்கப்பட்டன. அட்சய திருதியை நாளையொட்டி மதியத்திற்குள் நகை வாங்க ஏராளமானோர் விரும்பியதால் நகைக் கடைகளில் கூட்டம் நிறைந்தது.
இன்று அட்சய திருதியை என்பதால் தங்கம் விலை அதிகரிக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், நேற்றைய விலையிலேயே இன்று தங்கம் விற்பனை ஆனது. இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து கடும் உயர்வைச் சந்தித்த தங்கம் விலை, அட்சய திருதியை நாளான இன்று எவ்வித மாற்றமும் இன்றி சவரன் 71,840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது நகை வாங்குவோருக்கு சிறு ஆறுதலாக அமைந்துள்ளது.
நகைக்கடைகளில் கூட்டம்
மேலும், அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு, வாடிக்கையாளர்களைக் கவருவதற்காக நகைக் கடைகள் போட்டி போட்டுக் கொண்டு, சலுகைகளை அறிவித்துள்ளன. சில கடைகளில் சவரனுக்கு ரூ.1,000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் பல கடைகளில் தங்கம், வெள்ளி நகைகளுக்கு செய்கூலி, சேதாரத்தில் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. நகைகளுக்கு லட்சுமி குபேர பூஜை செய்து தரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு அட்சய திருதியை அன்று
கடந்த ஆண்டு அட்சய திருதியை தினத்தன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கம் 7,240 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 57,920 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கடந்த 2023 ஆம் ஆண்டு அட்சய திருதியை தினத்தன்று ஒரு கிராம் தங்கம் 6,059 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 48,472 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
2022 அட்சய திருதியை நாளில்
கடந்த 2022 ஆம் ஆண்டு அட்சய திருதியை தினத்தன்று ஒரு கிராம் தங்கம் 5,195 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 41,560 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கடந்த 2021 ஆம் ஆண்டு அட்சய திருதியை தினத்தன்று ஒரு கிராம் தங்கம் 4,866 ரூபாய்க்கும், ஒரு சவரன் 38,928 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கடந்த 2020ஆம் ஆண்டு அட்சய திருதியை தினத்தன்று ஒரு கிராம் தங்கம் 4,717 ரூபாய்க்கும் ஒரு சவரன் 37,736 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பே ஏப்ரல் மாதத்தில் அட்சய திருதியை நாளில் ஒரு சவரன் தங்கம் விலை 38 ஆயிரம் என்ற அளவில் இருந்தது. 4 ஆண்டுகளில் இது கிட்டத்தட்ட டபுள் மடங்கு என்ற அளவுக்கு தங்கம் விலை அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications