Gold Price: 10 கிராம் தங்கம் ரூ.2.25 லட்சத்தை தொடப்போகுது.. 5 ஆண்டில் நடக்கும் மாற்றம்.. எக்ஸ்பர்ட் வார்னிங்
சென்னை: தங்கம் விலை (Gold Price)தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.2.25 லட்சத்தை தொடும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். மேலும் இந்த விலையேற்றத்தை தங்கம் எட்டுவதற்கான சாத்தியக்கூறை நிரூபிக்கும் வகையில் அவர்கள் முக்கிய டேட்டாவை சுட்டிக்காண்பித்துள்ளனர்.
தற்போது தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. சென்னையில் இன்று தங்கத்தின் விலை சரிந்தது. தங்கம் கிராமிற்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.9,290க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் சவரனுக்கு ரூ.40 குறைந்து, ரூ.ரூ.74,320க்கு விற்பனையாகி வருகிறது. இருப்பினும் தங்கத்தின் விலை என்பது தற்போது வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.
இந்நிலையில் தான் அடுத்த 5 ஆண்டுகளில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.2.25 லட்சத்தை தொட்டு விடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அதாவது தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. டெல்லியில் 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 640 ஆக உள்ளது. 10 கிராம் எடை கொண்ட 22 காரட் தங்கத்தின் விலையும் ஒரு லட்சத்தை நெருங்கி உள்ளது.
நாட்டின் அனைத்து இடங்களிலும் இந்த விலை லேசான வித்தியாசத்தில் தான் உள்ளது. ஒரு காலத்தில் 10 கிராம் தங்கம் ரூ.30 ஆயிரமாக இருந்தது. இ்போது ரூ.1 லட்சத்தை கடந்து விட்டது. கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 200 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் போர் பதற்றம் தான்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர், ஈரான் - இஸ்ரேல் மோதல், காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் உள்ளிட்டவை இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகும். இது மட்டுமில்லாமல் கொரோனா உலகத்தை முடக்கிப்போட்டதும் முக்கிய காரணம். தங்கம் எப்போதுமே பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது.
இதனால் தான் தற்போது உலகளாவிய பதற்றத்துக்கு மத்தியில் தங்கத்தை பலரும் வாங்கி குவிக்கின்றன. இதனால் தங்கம் விலை உச்சமடைந்துள்ளது. கடந்த 2019 மற்றும் 2025ம் ஆண்டு இடைவெளியில் தங்கத்தின் விலை ஆண்டுக்கு சராசரியாக 18% என்ற அளவில் அதிகரித்துள்ளது. இது தொடரும் பட்சத்தில் அடுத்த 5 ஆண்டுகள் அதிகரிக்கும் பட்சத்தில் 10 கிராம் தங்கம் ரூ.2.25 லட்சத்தை எட்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications