"தொடர்ந்து இறங்கு முகம்".. இன்று 2வது நாளாக மளமளவென சரிந்த தங்கத்தின் விலை! அலைமோதும் கூட்டம்
சென்னை: நேற்று தாக்கலான மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதனால் நேற்று தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்த நிலையில் இன்று 2வது நாளாகவும் சென்னையில் தங்கத்தின் விலை சரிந்துள்ளது. இதனால் பொதுமக்கள் நகை வாங்க ஆர்வமாக கடைகளில் கூடி வருகின்றனர்.
நம் நாட்டில் அனைத்து மக்களுக்கும் தங்கத்தின் மீதான மோகம் என்பது உள்ளது. இதனால் எப்போதும் தங்கத்துக்கு தனி மவுசு உள்ளது. மேலும் தொடர்ந்து மக்கள் தங்கம் வாங்க ஆர்வம் காட்டி வரும் சூழலில் சர்வதேச சந்தை நிலவரத்தை பொறுத்து தங்கத்தின் விலை நம் நாட்டில் தொடர்ந்து உயர்ந்து வந்தது.

ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.50 ஆயிரத்தை கடந்து சென்ற நிலையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.7 ஆயிரத்தை நெருங்கியது. இதனால் ஏழைகளுக்கு எட்டாக்கனியாக தங்கம் மாறும் சூழல் ஏற்பட்டது. இத்தகைய சூழலில் தற்போது தங்கத்தின் விலை கிடுகிடுவென சரிய தொடங்கி உள்ளது.
இதற்கு நேற்று தாக்கலான மத்திய பட்ஜெட் தான் காரணம். நேற்றைய பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தங்கம், வெள்ளி நகைகளுக்காக இறக்குமதி வரி (சுங்கவரி) என்பது 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதம் வரையும், பிளாட்டினம் நகைகள் மீதான இறக்குமதி 6.4 சதவீதமாகவும் குறைப்பதாக அறிவித்தார். இதையடுத்து நேற்றைய தினமே தங்க நகை விலை அதிரடியாக குறைந்தது.
அதன்படி சென்னையில் நேற்று காலையில் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.6,810க்கு விற்பனையான நிலையில் பிற்பகலில் ரூ.260 குறைந்து ரூ.6,550க்கு விற்பனையாகிறது. மேலும் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,080 குறைந்து ரூ.52,400க்கு விற்பனையானது. இதையடுத்து கடைகளில் பொதுமக்கள் தங்கம் வாங்க குவிந்தனர்.
இந்நிலையில் தான் இன்று 2வது நாளாக தங்கத்தின் விலையும் சரிந்துள்ளது. அதன்படி இன்று சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு மேலும் 480 ரூபாய் சரிந்துள்ளது. இதனால் சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.51,920க்கு விற்பனையாகிறது. மேலும்
22 காரட் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.60 சரிந்து 6,490 ஆக விற்பனையாகிறது.
தங்கம் மீதான இறக்குமதி வரி நேற்று குறைக்கப்பட்ட நிலையில் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று, இன்று என 2 நாட்களில் மட்டும் ஒரு கிராமிற்கு ரூ.320ம், ஒரு சவரனுக்கு ரூ.2,560 வரை தங்கம் சரிந்துள்ளது. சமீபத்தில் 2 நாட்களாக இந்த அளவுக்கு தங்கம் விலை என்பது குறையவில்லை. இதனால் நகை கடைகளில் தங்கம் வாங்க மக்கள் குவிந்து வருகின்றனர். மேலும் தற்போதைய இறக்குமதி வரி குறைப்பால் தொடர்ந்து தங்கத்தின் விலை சரியலாம் என்று நகை விற்பனையாளர்கள் கூறியுள்ளனர். இதனால் பொதுமக்கள் ஹேப்பியாகி உள்ளனர்.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
Gold rate today: காலையிலேயே வந்த குட்நியூஸ்.. அதிரடியாக சரிந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.400 குறைவு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி











Click it and Unblock the Notifications