தங்கம் விலை புதிய உச்சம்! சென்னையில் ரூ 58 ஆயிரத்தை நெருங்குவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 58 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. இதனால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். வெள்ளி கூட வாங்க முடியாத அளவுக்கு உயர்ந்து கொண்டே போகிறது.
சென்னையில் இன்று அக்டோபர் 18 ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ 640 உயர்ந்துள்ளது. இன்று ஒரு கிராம் விலை ரூ 7240 க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 57,920 க்கு விற்பனையாகிறது.

அது போல் வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ 2 உயர்ந்து ரூ 105 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் தங்கத்தின் விலையில் சவரனுக்கு ரூ 560 உயர்ந்து ரூ 47,880-க்கும் கிராமுக்கு ரூ 5,985 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்திற்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு விற்பனையாகி வருகிறது.
இந்த நிலையில் தங்கம் விலை இதுவரை இல்லாத அளவுக்கு தொடர்ந்து உச்சத்தை தொட்டு வருகிறது. அக்டோபர் 17 ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 57,280 -க்கு விற்பனையானது. அது போல் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ 20 உயர்ந்து ஒரு கிராம் ரூ 7,160 க்கு விற்பனை செய்யப்பட்டது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மத்திய பட்ஜெட்டின் போது தங்கம் மீதான வரி குறைக்கப்பட்டது. இதனால் தங்கத்தின் விலை அன்றாடம் குறைந்து 50 ஆயிரத்தை தொட்டது. ஆனால் அதன் பிறகு அதிகரித்த நிலையில் தற்போது 58 ஆயிரத்தை தொட்டுள்ளது.
தீபாவளி பண்டிகைக்குள் ரூ 60 ஆயிரத்தை எட்டி விடும் நிலை உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு புதிதாக திருமணமான தம்பதிக்கு மோதிரம் எடுத்துக் கொடுப்பது வழக்கமாக உள்ளது. இந்த வழக்கத்தை சாமானிய மக்கள் எப்படி செய்ய போகிறார்கள் என்பது கேள்வியாக உள்ளது.
-
கிலோவுக்கு 1000000 தள்ளுபடி! 15% இறக்குமதி வரி.. இந்தியாவில் மீண்டும் தலைதூக்கும் தங்கக் கடத்தல்? -
இந்தியாவில் வீடுகளில் தேங்கி கிடக்கும் 32,000 டன் தங்கம்.. மறுசுழற்சி செய்ய விரும்பும் மோடி! ஏன்? -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
அய்யா ட்ரம்பு நல்ல சீட்டா எடுத்து போடுங்க! சூப்பர் ஸ்ட்ராங்கான டாலர்! தாறுமாறாக தங்கம் விலை! ஷாக்! -
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications