புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை! தீபாவளிக்கு 2 நாட்களே உள்ள நிலையில் சென்னையில் எகிறிய ரேட்!
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 480 உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதாவது சவரன் ரூ 59 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளிக்கு ரூ 60 ஆயிரத்தை தாண்டும் என அஞ்சப்படுகிறது.
சென்னையில் அக்டோபர் 29 ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 480 உயர்ந்துள்ளது. சென்னையில் தங்கத்தின் விலை சவரன் ரூ 59 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ 7375 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்திற்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு விற்பனை விற்பனையாகி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மத்திய பட்ஜெட்டின் போது தங்கம் மீதான வரி குறைக்கப்பட்டது. இதனால் தங்கத்தின் விலை அன்றாடம் குறைந்து 50 ஆயிரத்தை தொட்டது. ஆனால் அதன் பிறகு அதிகரித்த நிலையில் தற்போது 59 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
சென்னையில் அக்டோபர் 18 ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ 640 உயர்ந்தது. ஒரு கிராம் விலை ரூ 7240 க்கு விற்பனையானது. தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 57,920 க்கு விற்பனையானது.
சென்னையில் அக்டோபர் 19ஆம் தேதி ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 320 உயர்ந்தது. இதன் மூலம் கிராம் ஒன்றுக்கு 40 ரூபாயும், ஒரு கிராம் ரூ 7280க்கும் விற்பனை செய்யப்பட்டது. சவரன் ரூ 58 ஆயிரத்தை தாண்டியது. அதாவது ஒரு சவரன் ரூ 58,240-க்கு விற்பனை செய்யப்பட்டதுது. அது போல் வெள்ளியின் விலையும் ரூ 2 உயர்ந்து கிராம் ஒன்று ரூ 107-க்கும் ஒரு கிலோ 1,07,000 க்கும் விற்பனையானது.
அக்டோபர் 20ஆம் தேதி தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் ரூ 7280-க்கு விற்பனையானது. அது போல் 21 ஆம் தேதி ரூ 20உயர்ந்து ஒரு கிராம் ரூ 7300 க்கு விற்பனையானது. அக்டோபர் 22 ஆம் தேதியும் எந்த மாற்றமும் இல்லை, 23 ஆம் தேதி ரூ 40 உயர்ந்து ஒரு கிராம் ரூ 7340 க்கு விற்பனையானது.
அது போல் 24 ஆம் தேதி ரூ 55 குறைந்து சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ 7285 க்கு விற்பனை செய்யப்பட்டது. அக்டோபர் 25ஆம் தேதி கிராமுக்கு ரூ 10 உயர்ந்து ஒரு கிராம் ரூ 7292 க்கு விற்பனையானது.
சென்னையில் அக்டோபர் 26 ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 520 உயர்ந்துள்ளது. சென்னையில் தங்கத்தின் விலை சவரன் ரூ 59 ஆயிரத்தை எட்டியது. அதாவது சென்னையில் ஒரு சவரன் ரூ 58,880-க்கு விற்பனை செய்யப்பட்டது. அது போல் சென்னையில் ஒரு கிராம் ரூ 7,360-க்கு விற்கப்பட்டது.
சென்னையில் 28 ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.7,315க்கு விற்பனை செய்யப்பட்டது. அதாவது சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.58,520க்கு விற்பனையாகிறது.
தீபாவளி பண்டிகைக்குள் ரூ 60 ஆயிரத்தை எட்டி விடும் நிலை உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு புதிதாக திருமணமான தம்பதிக்கு மோதிரம் எடுத்துக் கொடுப்பது வழக்கமாக உள்ளது. இந்த வழக்கத்தை சாமானிய மக்கள் எப்படி செய்ய போகிறார்கள் என்பது கேள்வியாக உள்ளது.
-
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ராணிப்பேட்டை வீட்டில் 21 சவரன் தங்கம்.. 2 ஏக்கர் நிலப்பத்திரம்.. பீரோவை உடைக்காமலேயே ட்விஸ்ட் -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
2026 தங்கம் வெள்ளி விலை சரியப்போகுது.. இந்த ஜூனில் வெடிக்க போகும் பலூன்? வல்லுநர்கள் கணிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications