தங்கம் விலையில் மேலும் சரிவு! 1ஆம் தேதி பொறந்ததும் மக்கள் குஷி! சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 240 குறைந்துள்ளது. நேற்றைய தினமும் (செப்டம்பர் 30-ஆம் தேதி ) சவரனுக்கு ரூ 120 குறைந்த நிலையில் கடந்த இரு நாட்களில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 360 குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அக்டோபர் 1 ஆம் தேதி சவரனுக்கு ரூ 240 குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ 7050 க்கு விற்பனையாகிறது. அது போல் ஒரு சவரன் தங்கம் ரூ 56,400 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் ரூ 101-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த ஆண்டு மார்ச் மாதம் முதலே தங்கத்தின் விலை ரூ 60 ஆயிரத்தை எட்டியது. இதனால் நடுத்தர ஏழை மக்களால் ஒரு குண்டுமணி பவுன் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த ஜூலை 23 ஆம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது தங்கம், வெள்ளி மீதான சுங்க வரியை குறைப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் தங்கம் விலை கூடுவதும் குறைவதுமாக இருந்தது.
சென்னையில் செப்டம்பர் 24 ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 160 உயர்ந்தது. கிராமுக்கு ரூ 20 உயர்ந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ 7000 க்கு விற்பனையானது. அது போல் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ 56 ஆயிரத்தை தொட்டது. வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல், ஒரு கிராம் ரூ 98 க்கு விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில் செப்டம்பர் 27ஆம் தேதி தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டது. சவரனுக்கு ரூ 320 உயர்ந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ 7100க்கு விற்பனையானது. அது போல் ஒரு சவரன் தங்கம் ரூ 56,800க்கு விற்கப்பட்டது. கிட்டதட்ட 57 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. வெள்ளியின் விலையும் உயர்ந்துவிட்டது, ஒரு கிராம் ரூ 102 க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கத்தின் விலை செப்டம்பர் 30ஆம் தேதி சவரனுக்கு ரூ 120 குறைந்தது. இதனால் ஒரு கிராம் ரூ 7080-க்கும் ஒரு சவரன் தங்கம் ரூ 56,640-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
-
இந்தியாவில் வீடுகளில் தேங்கி கிடக்கும் 32,000 டன் தங்கம்.. மறுசுழற்சி செய்ய விரும்பும் மோடி! ஏன்? -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
2026 தங்கம் வெள்ளி விலை சரியப்போகுது.. இந்த ஜூனில் வெடிக்க போகும் பலூன்? வல்லுநர்கள் கணிப்பு -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications