தங்கம் விலையில் புதிய உச்சம்! இப்படியே போனால் டிசம்பரில் சவரன் ரூ. 1 லட்சத்திற்கு எகிறும் வாய்ப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 80 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ 57 ஆயிரத்தை தொட்டு புதிய உச்சம் பெற்றுள்ளதால் நகை பிரியர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். தங்கத்தை போல் வெள்ளியின் விலையும் புதிய உச்சம் பெற்றுள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அக்டோபர் 4 ஆம் தேதியான இன்று சவரனுக்கு ரூ 80 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ 7120 க்கு விற்பனையாகிறது. அது போல் ஒரு சவரன் தங்கம் ரூ 56,960 க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாளை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 57 ஆயிரத்திற்கு விற்பனையாக வாய்ப்புள்ளது. இப்படியே போனால் டிசம்பர் மாதம் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 1 லட்சத்திற்கு விற்பனையாகும் என நகைக் கடைக்காரர்களே தெரிவிக்கிறார்கள். தங்கத்தை போல் வெள்ளியின் விலையும் புதிய உச்சவெள்ளியின் விலையில் கிராமுக்கு ரூ 2 உயர்ந்து ஒரு கிராம் ரூ 103-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

gold rate gold chennai

இந்த ஆண்டு மார்ச் மாதம் முதலே தங்கத்தின் விலை ரூ 60 ஆயிரத்தை எட்டியது. இதனால் நடுத்தர ஏழை மக்களால் ஒரு குண்டுமணி பவுன் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த ஜூலை 23 ஆம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது தங்கம், வெள்ளி மீதான சுங்க வரியை குறைப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் தங்கம் விலை கூடுவதும் குறைவதுமாக இருந்தது.

தங்கத்தின் விலை செப்டம்பர் 30ஆம் தேதி சவரனுக்கு ரூ 120 குறைந்தது. இதனால் ஒரு கிராம் ரூ 7080-க்கும் ஒரு சவரன் தங்கம் ரூ 56,640-க்கும் விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அக்டோபர் 1 ஆம் தேதி சவரனுக்கு ரூ 240 குறைந்தது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ 7050 க்கு விற்பனையானது. அது போல் ஒரு சவரன் தங்கம் ரூ 56,400 க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் ரூ 101-க்கு விற்பனை செய்யப்பட்டது.

அது போல் கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 400 உயர்ந்தது. ஒரு கிராம் 7100 க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் ரூ 56,800 க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் செப்டம்பர் 3ஆம் தேதி தங்கத்தின் விலை ரூ 80 உயர்ந்து ஒரு கிராம் ரூ 7,110க்கு விற்பனையானது. அது போல் ஒரு சவரன் தங்கம் விலை ரூ 56,880 - க்கு விற்பனை செய்யப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+