தங்கம் விலை! ரைட்ல கையை போட்டு, லெப்ட்டில் இன்டிகேட்டர் போட்டு ஸ்ட்ரைட்டா போறது போல் இருக்கே!
சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 240 குறைந்து இன்றைய தினம் தங்கத்தின் விலை சவரன் ரூ 53,440 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அது போல் வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ 92 க்கு விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை 50 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் குறையும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது 50 ஆயிரத்திற்கு கீழும் போகாமல் 53 ஆயிரத்தையும் தாண்டாமல் இரண்டுக்கும் நடுவில் ஓடி கொண்டிருக்கிறது. இது சாமானிய மக்களுக்கு கலக்கத்தை கொடுக்கிறது. ஆவணி பிறந்துவிட்டதால் கல்யாணத்திற்கு நகை வாங்குவோர் அவதியடைந்து வருகிறார்கள்.

சென்னையில் ஆகஸ்ட் 22-ஆம் தேதியான இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 240 குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ 53,440 க்கு விற்பனையாகிறது. அதாவது கிராமுக்கு ரூ 60 வீதம் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ 6,680 க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை எந்தவித மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் ரூ 92- க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 92000-க்கும் விற்பனையாகிறது.
இந்த ஆண்டு மார்ச் மாதம் முதலே தங்கத்தின் விலை ரூ 60 ஆயிரத்தை எட்டியது. இதனால் நடுத்தர ஏழை மக்களால் ஒரு குண்டுமணி பவுன் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த ஜூலை 23 ஆம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது தங்கம், வெள்ளி மீதான சுங்க வரியை குறைப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.
இதனால் அன்றே தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ 2,200 ஆக குறைந்தது. அதைத் தொடர்ந்து 4 நாட்களுக்கு சரிந்து கொண்டே வந்த தங்கம் திடீரென 160 ரூபாய் உயர்ந்தது. அதைத் தொடர்ந்து அடுத்த நாளே ரூ 160 குறைந்தது. இப்படியாக சீசா விளையாடிக் கொண்டிருந்த தங்கம் விலை கடந்த மாதம் இறுதி வரை முழம் ஏறுவது, ஜான் சறுக்குவதுமாக இருந்தது.
இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ 240 உயர்ந்து ரூ 51,680க்கு விற்பனையானது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 30 உயர்ந்து ஒரு கிராம் ரூ 6460-க்கு விற்பனையானது. அது போல் வெள்ளியின் விலை கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ 91 க்கு விற்பனையானது.
இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி தங்கத்தின் விலை ரூ 80 குறைந்து ஒரு சவரன் ரூ 51,600க்கு விற்பனையானது. அது போல் கிராமுக்கு ரூ 10 குறைந்து கிராம் ஒன்று ரூ. 6450 - க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலை ரூ 1 குறைந்து இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ 90க்கும் ஒரு கிலோ ரூ 90 ஆயிரத்திற்கும் விற்பனையானது.
ஆகஸ்ட் 4 ஆம் தேதி மார்கெட் விடுமுறை என்பதால் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் ஆகஸ்ட் 5ஆம் தேதி தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 20 உயர்ந்து கிராம் ரூ 6470க்கு விற்பனையானது. அது போல் ஒரு சவரன் தங்கம் 51,760 ரூபாய்க்கு விற்பனையானது.
இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி அதிரடியாக சவரனுக்கு ரூ 560 குறைந்து ஒரு சவரன் தங்கம் 51, 200 க்கு விற்பனையானது. அது போல் ஒரு கிராம் ரூ 6400 க்கு விற்பனையானது. வெள்ளியின் விலை ரூ 4 குறைந்து ஒரு கிராம் ரூ 87 க்கும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 87 ஆயிரத்திற்கும் விற்பனையானது.
கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி கிராமுக்கு ரூ 70 குறைந்து பவுனுக்கு ரூ 560 மேலும் சரிந்து ஒரு கிராம் ரூ 6,330 க்கும் ஒரு சவரன் ரூ 50,640-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் ரூ 87 க்கு விற்பனையானது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் ரூ 6350 க்கு விற்பனையானது. ஒரு சவரனுக்கு ரூ 160 உயர்ந்து ஒரு பவுன் ரூ 50,800க்கு விற்பனையானது.
அது போல் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 50 பைசா குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ 86.50 க்கும் ஒரு கிலோ ரூ 86,500-க்கும் விற்பனையானது. சென்னையில் ஆகஸ்ட் 9ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 600 உயர்ந்தது. சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ 51,400 க்கு விற்பனையானது. அதாவது கிராமுக்கு ரூ 75 வீதம் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ 6,425 க்கு விற்பனையானது. அது போல் வெள்ளியின் விலை ரூ 1.50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ 88 க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 88 ஆயிரத்திற்கும் விற்பனையானது.
சென்னையில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 160 உயர்ந்தது. சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ 51,560 க்கு விற்பனையானது. அதாவது கிராமுக்கு ரூ 20 வீதம் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ 6,445 க்கு விற்பனையானது. அது போல் வெள்ளியின் விலை எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் ரூ 88 க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 88 ஆயிரத்திற்கும் விற்பனையானது. சென்னையில் ஆகஸ்ட் 12-ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 200 உயர்ந்தது.
சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ 51,760-க்கு விற்பனையானது. அதாவது கிராமுக்கு ரூ 20 வீதம் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ 6,465 க்கு விற்பனையானது. அது போல் வெள்ளியின் விலை 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ 87.50 க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 87500-க்கும் விற்பனையானது. சென்னையில் ஆகஸ்ட் 13-ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 760 உயர்ந்தது. சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ 52,520 க்கு விற்பனையானது. அதாவது கிராமுக்கு ரூ 95 வீதம் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ 6,565 க்கு விற்பனையானது. அது போல் வெள்ளியின் விலை ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ 88.50 க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 88500-க்கும் விற்பனையானது.
சென்னையில் ஆகஸ்ட் 14-ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 80 குறைந்தது. சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ 52,440 க்கு விற்பனையானது. அதாவது கிராமுக்கு ரூ 10 வீதம் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ 6,555 க்கு விற்பனையானது. அது போல் வெள்ளியின் விலை 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ 88- க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 88000-க்கும் விற்பனையானது.
ஆகஸ்ட் 15 ஆம் தேதி சந்தைகளுக்கு விடுமுறை என்பதால் அன்றைய தினம் தங்கத்தின் மீது எந்த மாற்றமும் இல்லை. இந்த நிலையில் ஆகஸ்ட் 16ஆம் தேதி தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 10 வீதம் உயர்ந்து ரூ 6565க்கு விற்பனையானது. ஒரு சவரனுக்கு ரூ 80 உயர்ந்து சவரன் ரூ 52,520 க்கு விற்பனையானது. அது போல் வெள்ளி விலை ஒரு கிராம் 89 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு கிலோ வெள்ளி ரூ 89 ஆயிரத்திற்கு விற்பனையானது.
சென்னையில் ஆகஸ்ட் 17-ஆம் தேதி அன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 840 உயர்ந்தது. சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ 53,360 க்கு விற்பனையானது. அதாவது கிராமுக்கு ரூ 105 வீதம் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ 6,670 க்கு விற்பனையானது. அது போல் வெள்ளியின் விலை ரூ 2 உயர்ந்து உயர்ந்து ஒரு கிராம் ரூ 91- க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 91000-க்கும் விற்பனையானது.
இதையடுத்து ஆகஸ்ட் 18ஆம் தேதி மார்க்கெட் விடுமுறை என்பதால் அன்று எந்த மாற்றமும் இல்லாமல் தங்கம் விலை இருந்தது. ஆகஸ்ட் 19 ஆம் தேதியும் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு சவரன் 53,360 க்கு விற்பனையானது.
இந்த நிலையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 80 குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ 53,280 க்கு விற்பனையானது. அதாவது கிராமுக்கு ரூ 10 வீதம் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ 6,660 க்கு விற்பனையானது. அது போல் வெள்ளியின் விலை ரூ 1 உயர்ந்து ஒரு கிராம் ரூ 92- க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 92000-க்கும் விற்பனையானது.
சென்னையில் ஆகஸ்ட் 21-ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 400 உயர்ந்தது. சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ 53,680 க்கு விற்பனையானது. அதாவது கிராமுக்கு ரூ 50 வீதம் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ 6,710 க்கு விற்பனையானது. வெள்ளியின் விலை எந்தவித மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் ரூ 92- க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 92000-க்கும் விற்பனையானது.
-
இந்தியாவில் வீடுகளில் தேங்கி கிடக்கும் 32,000 டன் தங்கம்.. மறுசுழற்சி செய்ய விரும்பும் மோடி! ஏன்? -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
2026 தங்கம் வெள்ளி விலை சரியப்போகுது.. இந்த ஜூனில் வெடிக்க போகும் பலூன்? வல்லுநர்கள் கணிப்பு -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications