Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
சென்னை: ஈரான் - அமெரிக்கா போருக்கு நடுவிலும் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. நினைத்து பார்க்காத அளவிற்கு தங்கம் விலை சட்டென வீழ்ந்த நிலையில், தங்கம் வாங்க இது சரியான நேரமா? விலை வீழ்ச்சி நிலையானதா? முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி நிபுணர்கள் அளித்த விவரங்களை பார்க்கலாம்.
தங்கம் விலை கடந்த 2 வாரங்களாக மளமளவென குறைந்து வருகிறது. இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ.5,360 குறைந்தது. ஒரு சவரன் தங்கம் விலை 1,03,600 ஆக விற்பனையானது. தங்கம் விலை ஒரே நாளில் 5 ஆயிரம் சரிந்தது இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியை அளித்தது.

ஒரே அடியாக சரிந்த தங்கம் விலை
இந்த மகிழ்ச்சியில் இருந்து மீள்வதற்கு முன்பே அடுத்த இன்ப அதிர்ச்சி இல்லத்தரசிகளுக்கும் நகை பிரியர்களுக்கும் காத்திருந்தது. தங்கம் விலை ஒரே நாளில் இரண்டாவது முறையாக குறைந்தது. அதன்படி கிராமுக்கு 280 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.12,670-க்கும் சவரனுக்கு 2,240 ரூபாய் குறைந்ததது. தங்கம் விலை இன்று ஒருநாளில் மட்டும் 7600 ரூபாய் குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சர்வதேச அளவில் போர் பதற்றம் நிலவும் நிலையில், இது சற்றே அசாதாரணமாக தோன்றலாம். உலகளாவிய நிச்சயமின்மை அதிகரிக்கும் போது பொதுவாக தங்கம் உயர்வு காணும். ஆனால் தற்போது, புவியியல் அரசியல் பதற்றம் நீடித்தாலும், தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் குறைந்து வருகின்றன.
விலை மேலும் குறையுமா
தற்போதைய நேரப்படி MCX தங்கம் ₹1,34,293 ஆக இருந்தது. இது ₹10,153 அல்லது 7.03% குறைவாகும். அதேபோல், MCX வெள்ளி ₹2,09,168 ஆக இருந்து, ₹17,472 அல்லது 7.70% வீழ்ச்சியை பதிவு செய்தது. தங்கம் விலை இப்படி வீழ்ச்சியை சந்தித்துள்ள இந்த நேரத்தில் அதனை வாங்கலமா என்ற கேள்வி பொதுவாகவே மக்கள் மனதில் எழும். ஏனெனில் விலை இன்னும் குறையுமா? ஒருவேளை குறையும் என்றால் இப்போதே வாங்கி நஷ்டப்பட்டு விடக்கூடாது என்று நினைக்கலாம். இது தொடர்பாக நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்.
நிபுணர்கள் சொல்வது என்ன?
தற்போது ஏற்பட்டு இருப்பது இது சரிவு அல்ல; வலுவான உயர்வுக்குப் பிறகு ஏற்பட்ட ஒரு திருத்தம் மட்டுமே என்கிறார்கள் நிபுணர்கள். நிட்ஸ்டோன் ஃபின்செர்வ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான செந்தில் ஆர். குமார் கூறியதாவது: -
"சமீபத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் ஏற்பட்ட சரிவு என்பது சந்தையின் ஆரோக்கியமான ஏற்ற இறக்கமாகும்.. அமெரிக்க டாலர் மற்றும் பாண்ட் ஈட்டளவில் ஏற்பட்ட வலுவான மாற்றங்கள் குறுகிய கால மறுசீரமைப்பை ஏற்படுத்தியுள்ளன. மேலும், புவியியல் அரசியல் அபாயத்தின் ஒரு பகுதி ஏற்கனவே முந்தைய உயர்வில் விலைகளில் பிரதிபலித்துவிட்டது" என்றார்.
முதலீட்டு முறையை பின்பற்ற வேண்டும்
இந்த நேரத்தில் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் முக்கிய அறிவுரை- கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது. இது தொடர்பாக மேலும் கூறியதாவது:- நீண்டகால நோக்கில் கட்டுக்கோப்பான முதலீட்டு முறையை பின்பற்ற வேண்டும். ஆனால் குறுகிய காலத்தில் விலைகள் அதிக ஊசலாட்டத்தில் இருப்பதால் கவனம் அவசியம்.
முதலீட்டாளர்கள் பதட்டத்தில் விற்பனை செய்வதைத் தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக சொத்து ஒதுக்கீட்டில் ஒழுங்கை பின்பற்ற வேண்டும். பொதுவாக, ஒரு முதலீட்டு தொகுப்பில் 5-10% வரை மதிப்புள்ள தங்கத்தை பாதுகாப்பு நோக்கில் ஒதுக்கலாம்."
மீண்டும் விலை ஏறும்
தங்கம் மற்றும் வெள்ளியை வைத்திருக்க வேண்டிய அடிப்படை காரணங்களில் எந்த மாற்றமும் இல்லை. பணவீக்கம் அபாயம், நாணய மாற்றங்கள் மற்றும் உலகளாவிய நிச்சயமின்மை ஆகியவை இன்னும் தொடர்கின்றன.தற்போது, குறுகியகால நிதி சூழ்நிலைகளே சந்தையை அதிகமாக பாதிக்கின்றன.
ஆனால் நீண்டகால பார்வையில், பாதுகாப்பு முதலீடாக இவற்றின் முக்கியத்துவம் மாற்றமின்றி நீடிக்கிறது" என்று தெரிவித்தனர். இவற்றின் சாராம்சம் என்னவென்றால் தங்கம் விலையானது தற்போது சரிந்தாலும் சந்தை நிலவரம் பழைய முறைக்கு திரும்பும் போது மீண்டும் விலையேறும் என்பதே ஆகும்.
-
Gold Price Today: 3 நாள் உயர்வுக்கு பிரேக்.. இன்று குறைந்த தங்கம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு? -
தங்கம் விலை 3 நாளில் 300 டாலர் உயர்வு.. அய்யய்யோ..! ஷாக் கொடுத்த Gold Price.. இனி தினமும் அதிரடி தான்! -
Gold Price Today: தங்கம் விலை இன்றும் அதிரடி உயர்வு.. தொடர்ந்து 3 நாட்களாக அதிகரிப்பு! சென்னையில் ஒரு சவரன் என்ன ரேட்? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது?












Click it and Unblock the Notifications