சரிவை நோக்கிச் செல்லும் தங்கம் விலை! இதுதான் சரியான நேரமா? இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா?
சென்னை: கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது. நேற்று தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்த நிலையில் இன்று கிராமிற்கு ரூ.15ம், சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது சென்னையில். 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 7355 ஆகவும், ஒரு சவரன் 58,840க்கும் விற்பனையாகிறது.
சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் நாள்தோறும் இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில் அதற்கு முன்னதாக ஏற்ற இறக்கத்துடன் இருந்தது.

கடந்த ஜூலை மாதத்தில் மத்திய பாஜக அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின் சுங்கவரி குறைக்கப்பட்டது. அப்போது லேசாக தங்கத்தின் விலை சரிந்த நிலையில், அதற்குப் பிறகு தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சத்தை தொட்டு வருகிறது.
நாளுக்கு நாள் தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மேலும் சுப நிகழ்ச்சி உள்ளிட்டவற்றுக்கு தங்கம் வாங்குவது, பாதுகாப்பான முதலீட்டுக்கு தங்கத்தை தேர்ந்தெடுப்பது என வர்த்தகம் தங்கத்தை நோக்கியே இருந்ததால் தங்கத்தின் விலை விண்ணை தொட்டு வருகிறது. இதனால் சுப நிகழ்ச்சி மற்றும் முதலீடு, சேமிப்புக்காக தங்கம் வாங்கும் நகை பிரியர்களும் இல்லத்தரசிகளும் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் வழக்கம் போல கடந்த வாரத்தில் தங்கத்தின் விலை அதிகரித்தது. கடந்த வாரம் வரை தங்கத்தின் விற்பனை விலையில் பெரிய அளவில் மாற்றம் இருந்தது. மத்திய கிழக்கு நாடுகளில் போர் காரணமாக பதற்றத்தில் எண்ணெய்க்கு பதிலாக தங்கத்தில் முதலீடு செய்வது, அமெரிக்க அதிபர் தேர்தல், தங்க பத்திரத்தில் முதலீடு, பண்டிகைக் கால விற்பனை உள்ளிட்டவை காரணமாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது.
மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் அதிக அளவில் தங்கத்தை வாங்க ஆர்வம் காட்டுவார்கள் என்பதால் வரும் காலங்களில் விலை மேலும் அதிகரிக்கும் என்றே கூறப்பட்டது. இதனால் தங்கம் வாங்க நினைப்பவர்கள் தற்போதே தங்கத்தை வாங்குவது நல்லது.. இல்லையேல் வரும் நாட்களில் மேலும் விலை அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் கூறியிருந்தனர்.
இந்த நிலையில் வாரத்தின் தொடக்கத்தின் இரண்டாவது நாளான இன்று தங்கத்தின் விற்பனை விலை அதிரடியாக குறைந்துள்ளது. நவம்பர் ஒன்றாம் தேதி சென்னையில் ஆபரண தங்கம் பவுனுக்கு ரூ.560 குறைந்து ரூ.59,080க்கும், ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.7,385க்கு விற்பனையானது. நேற்று முன் தினம் விலை சரிந்த நிலையில், நேற்று விலை மாற்றமின்றி விற்பனையானது.
இந்த நிலையில் இன்று கிராமிற்கு ரூ.15ம், சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது சென்னையில். 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 7355 ஆகவும், ஒரு சவரன் 58,840க்கும் விற்பனையாகிறது.
தீபாவளி பண்டிகை முடிவடைந்ததில் இருந்து தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. வெள்ளியின் விலையில் பெரிய அளவில் மாற்றமில்லை. இதன் காரணமாக தற்போது தங்கம் வாங்க நினைப்பவர்கள் வாங்கலாம் என்கின்றனர் நிபுணர்கள். அதே நேரத்தில் போர் உள்ளிட்டவை காரணமாக தங்கம் விலை திடீரென உயரவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே தற்போதைய சூழலில் இன்னும் விலை குறையும் என எதிர்பார்ப்பதை விட தங்கத்தை வாங்குவது நல்லது என்றும் கூறுகின்றனர்.
-
அய்யா ட்ரம்பு நல்ல சீட்டா எடுத்து போடுங்க! சூப்பர் ஸ்ட்ராங்கான டாலர்! தாறுமாறாக தங்கம் விலை! ஷாக்! -
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications