Gold Rate: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. பொங்கல் பண்டிகை நேரத்தில் நகை பிரியர்களுக்கு ஷாக்!
சென்னை: சென்னையில் புத்தாண்டு தொடங்கியதில் இருந்தே தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. நேற்று சவரனுக்கு ரூபாய் 80 குறைந்த நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி இன்று சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 58,720க்கும் ஒரு கிராம் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.7340க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று வெள்ளியின் விலையும் கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து, 101 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலையானது கடந்த ஆண்டு இறுதியில் இருந்ததை விட தற்போது அதிகரித்துள்ளது. குறிப்பாக புத்தாண்டின் முதல் நாளிலேயே தங்கத்தில் விலை அதிகரித்தது. தொடர்ந்து தங்கத்தின் விலை குறையும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. ஏனென்றால், ஜனவரி மாதம் தொடங்கியதில் இருந்து தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது.

நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 80 குறைந்து ஒரு சவரன் தங்கம் 58,640க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கத்தின் விலையானது நேற்று ரூ.7,310க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.80 இன்று உயர்ந்துள்ளது.
இதன்படி சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கத்தின் விலையானது, ரூபாய் 58720க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலையானது ரூபாய் 10 உயர்ந்து ரூ.7320க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 100க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 101க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை நிலவரம் (கடந்த 8 நாட்கள்):
* ஜனவரி 7 - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 57,720
* ஜனவரி 8 - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 57,800
* ஜனவரி 9 (இன்று) - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 58,080
* ஜனவரி 10 - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 58,280
* ஜனவரி 11 - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 58,520
* ஜனவரி 12 - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 58,520
* ஜனவரி 13- ஒரு சவரன் தங்கம் ரூபாய் 58,720
* ஜனவரி 14 - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 58,640
* ஜனவரி 15 (இன்று) - ஒரு சவரன் தங்கம் ரூபாய் 58,720
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications