Gold Rate: ஆஹா தங்கத்தின் விலை இன்னிக்கு குறைஞ்சிடுச்சே!.. ஒருவேளை புலி பதுங்குறதே பாயத்தானோ!
சென்னை: சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ 48 ரூபாய் குறைந்துள்ளது. அது போல் சவரனுக்கு ரூ 384 குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். எனினும் இனி பண்டிகை காலம் என்பதால் விலை உயரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே கொரோனாவால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் தற்போது தங்கத்தின் விலை நாள் தோறும் அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்தது. கடந்த மாதம் முழுவதும் தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது.
இந்த நிலையில் இந்த மாதத்தின் முதல் நாளான நேற்று விலையேற்றம் இருந்தது. ஆனால் இன்று அதன் விலை குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ரூ 4,964க்கு விற்பனையானது.

சவரன்
ஆனால் இன்றைய தினம் கிராமுக்கு ரூ 48 குறைந்து ஒரு கிராமின் விலை ரூ 4,916 க்கு விற்பனையாகிறது. அது போல் சவரன் ஒன்றுக்கு 384 ரூபாய் குறைந்துள்ளது. நேற்று ஒரு சவரன் ரூ 39,712க்கு விற்பனையானது. ஆனால் இன்று சவரன் ரூ 39,328க்கு விற்பனையாகிறது.

தூயத் தங்கம்
அது போல் 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் நேற்று ரூ 5212 விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ 5,164 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ41,696க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 41,312 க்கு விற்பனையாகிறது.

புதுவையில் விலை
மும்பையில் ஒரு கிராம் 5,018க்கும், பெங்களூரில் ரூ 4,874 க்கும், ஹைதராபாத்தில் ரூ 4,962க்கும், கேரளாவில் ரூ 4,706க்கும். டெல்லியில் ரூ 5,066க்கும் கொல்கத்தாவில் ரூ 5050க்கும் விற்பனையாகிறது. யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ 4,975 ஆக உயர்ந்துள்ளது.

வெள்ளி விலையும் குறைவு
அது போல் வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை நேற்று ரூ 76.70 ஆக இருந்த நிலையில் இன்று ரூ 74.90-க்கு குறைக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ வெள்ளி 74,900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications