ஒரு லட்சம் ஆகப் போகுது! அரை பவுன் தங்கமாவது வாங்குங்க..குறையவே குறையாது! நிபுணர்கள் வார்னிங்!
சென்னை: தங்கத்தின் விலை தொடர்ந்து சாதனை அளவை தொட்டு வரும் நிலையில், தற்போதைய சூழலில் ஏறக்குறைய ஒரு சவரன் 85 ஆயிரம் என்ற நிலையில் உள்ளது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றம் காணும் நிலையில், "இப்படியே போனால் ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்தை எப்போது அடையும்?" என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது. மேலும், இப்போது தங்கம் வாங்கலாமா? என கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது.
தங்கம் இந்தியர்களின் வாழ்க்கையில் வெறும் ஆபரணமல்ல, அது ஒரு உணர்ச்சி, ஒரு முதலீடு. திருமணம் முதல் திருவிழா வரை தங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் பல நாடுகளின் கஜானாவில் கூட இல்லாத வகையில், இந்தியர்களின் வீடுகளில் தங்கம் குவிந்து கிடக்கிறது.
அதே நேரத்தில், தங்கத்தின் விலை கடந்த 10 ஆண்டுகளில் ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளது. 2015ல் ஒரு சவரன் தங்கம் சுமார் ரூ.24,000 மட்டுமே இருந்தது. அதற்கு பிறகு ஏற்ற இறக்கம் இருந்தாலும், தற்போது இதுவரை இல்லாத அளவு சாதனை உச்சத்தை தொட்டுள்ளது.

தங்கம் விலை உயர்வு
உலக பொருளாதார மாற்றங்கள், டாலர் மதிப்பு, சர்வதேச தங்க கையிருப்புகள் ஆகியவற்றால் விலை உயர்ந்து, 2020-ஆம் ஆண்டில் கொரோனா காலத்தில் ரூ.50,000 கடந்து சென்று சாதனை படைத்தது. 2022-ல் ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் உலக பொருளாதார மந்தநிலை காரணமாக தங்க விலை மீண்டும் உயர்ந்து, ரூ.52,000 முதல் ரூ.54,000 வரை நிலைத்தது. 2024-இல் மத்திய வங்கிகள் தங்க கையிருப்பை அதிகரித்தது, அமெரிக்க வட்டி விகிதங்கள் குறைந்தது போன்ற காரணங்களால் விலை மேலும் உயர்ந்து சென்றது.
1 சவரன் தங்கம்
2025 ஜனவரி மாதத்தில் ஒரு சவரன் தங்கம் சுமார் ரூ.52,000 - ரூ.57,000 வரை இருந்தது. ஆனால் கடந்த 9 மாதங்களில் சர்வதேச சந்தையில் தங்கத்திற்கு ஏற்பட்ட டிமாண்ட், அமெரிக்க பொருளாதார மந்தநிலை, டாலர் மதிப்பில் ஏற்பட்ட குறைவு போன்ற காரணங்களால் தங்க விலை பல மடங்கு அதிகரித்தது. தற்போது (செப்டம்பர் 2025) ஒரு சவரன் தங்கம் சுமார் ரூ.84,000 - ரூ.85,000 வரை விற்கப்படுகிறது. இது கடந்த 10 ஆண்டுகளில் மிக அதிகமான விலை உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச சந்தை
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து இவ்விதமாக உயர்ந்தால், நிபுணர்கள் கணிப்பின் படி 2026 நடுப்பகுதி அல்லது 2027 ஆரம்பத்தில் ஒரு சவரனஅ தங்கம் ரூ.1 லட்சம் என்ற மைல்கல்லை எட்டும் வாய்ப்பு அதிகம் உள்ளது. குறிப்பாக அமெரிக்க பொருளாதாரம் மேலும் சிக்கலில் சிக்கினால், முதலீட்டாளர்கள் பங்கு சந்தையிலிருந்து தங்கத்திற்கு மாற வாய்ப்புள்ளது. இதனால் தங்க விலை அதிவேகமாக உயர வாய்ப்பு இருக்கிறது.
தங்கம் விலை கணிப்பு
இதனால் இப்போது தங்கம் வாங்கலாமா? என்ற கேள்வி பொதுமக்கள் மனதில் எழுந்துள்ளது. தங்கம் வாங்க சிறந்த நேரம் எது என்ற கேள்விக்கு பதிலளிக்கும் நிபுணர்கள், "விலை குறையும் வரை காத்திருக்க வேண்டாம்" என்கிறார்கள். தங்கம் நீண்டகால முதலீட்டில் நஷ்டமளிக்காத சொத்து என்பதால், சிறு சிறு அளவில் தங்கம் வாங்குவது நல்லது என அறிவுறுத்துகிறார்கள். மேலும், வரும் தீபாவளி மற்றும் திருமண காலங்களில் தங்க விலை இன்னும் உயர வாய்ப்பு இருப்பதால், தற்போது வாங்குவது நன்மை தரும் என நிதி ஆலோசகர்கள் பரிந்துரைக்கின்றனர். தங்கத்தின் விலை கடந்த ஒரு தசாப்தத்தில் இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. தற்போதைய பொருளாதார சூழ்நிலை தொடர்ந்து நீடித்தால், 1 சவரன் தங்கம் ரூ.1 லட்சம் அடைவது காலத்தின் கேள்வி மட்டுமே. எனவே, தங்கம் வாங்க திட்டமிட்டிருந்தால், சிறு சிறு அளவில் இப்போதே முதலீடு செய்யலாம் என்றும் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications