மீண்டும் மீண்டுமா? இன்றும் தங்கம் விலை உயர்வு.. சென்னையில் இன்றைய நிலவரம் இதோ!
சென்னை: தங்கம் விலை மீண்டும் உயர்வைக் கண்டுள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 80 அதிகரித்து ரூ.56,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூபாய் 7,110 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணம் செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை இந்த ஆண்டின் ஏப்ரல் மாதவாக்கில் புதிய உச்சத்தை தொட்ட நிலையில் அதன்பிறகு ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வந்தது.

கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இறக்குமதி சுங்க வரி குறைப்பால் தங்கம் விலை சரிந்தது. அமெரிக்க ஃபெடரல் வங்கி வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை குறைத்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, விலை சரிவு நின்று, அதன்பிறகு வேகமாக தங்கம் விலை உச்சம் தொட்டு வருகிறது.
கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி சனிக்கிழமை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56,760-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.7,095-க்கு விற்பனையானது. செப்டம்பர் 30 ஆம் தேதி ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 15 குறைந்தது. அதன்படி, ஒரு சவரன் ரூ.56,640க்கு விற்பனை செய்யப்பட்டது.
அக்டோபர் 1 ஆம் தேதி ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்தது. ஒரு சவரன் ரூபாய் 56,400க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூபாய் 50 அதிகரித்தது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூபாய் 400 அதிகரித்து, ரூபாய் 56,800க்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு 80 ரூபாய் உயர்வைச் சந்தித்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 7,110 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் ரூ.56,880 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
நாளுக்கு நாள் விலை உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் விலை 57 ஆயிரத்தை நெருங்கி வருவதால், தங்க நகைகளை விரும்பும் இல்லத்தரசிகள், பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.
24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7,746 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், வெள்ளி விலையைப் பொறுத்தவரை, விலை மாற்றமின்றி கிராம் ரூ.101க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒரு கிலோ ரூ.1,01,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க மக்களே! சடக்குனு சரிந்த தங்கம்! இது தான் சரியான டைம்! எப்படி? -
Gold Price: தங்கம் விலை இன்று கடும் சரிவு.. ஒரே நாளில் ரூ.1,845 குறைந்தது.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட்? -
1,200 கோடி டாலர் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி? அப்படியெல்லாம் இல்லவே இல்லை! விளக்கம் சொன்ன ஆளுநர்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications