சென்னையில் உச்சம் தொட்ட ஆபரணத்தங்கம்- ஒரு சவரன் ரூ.37000த்தை தாண்டி விற்பனை

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சென்னையில் ஒரு சவரன் ரூ. 37,000 ஆயிரத்தை தாண்டியது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா வைரஸ் நோய் தொற்று காலத்திலும் தங்கத்தின் விலை நாளுக்கு உயர்ந்து வருகிறது. இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 168 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 37,032க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை இந்த மாதத் தொடக்கம் முதலே உயர்ந்து வருகிறது. இந்த வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

சென்னையில் ஜூன் 22ஆம் தேதியான இன்று ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,629 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை 4,608 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 21 ரூபாய் உயர்ந்துள்ளது.அதேபோல, நேற்று 36,864 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 168 ரூபாய் உயர்ந்து 37,032 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Gold price hits fresh record high Today

வெள்ளி விலை இன்று சிறிதளவு உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை நேற்று ரூ.53.40 ஆக இருந்தது. இன்று அதன் விலை ரூ.54.10 ஆக அதிகரித்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 54,100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கொரோனா வைரஸ் லாக் டவுனில் கூட, தங்கம் காட்டில் மழை தான். தொடர்ந்து விலை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. உலக பொருளாதாரத்தில் ஒரு நிலையற்ற தன்மை வந்தால், முதலீட்டாளர்கள் பணத்தை தங்கத்தில் தான் கொண்டு வந்து கொட்டுவார்கள். அது இப்போது வரை நடந்து கொண்டு தான் இருக்கிறது. எனவே சர்வதேச அளவில் தங்கம் விலை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

கொரோனா வைரஸ் லாக் டவுன் அறிவிக்கப்படும் முன்பு வரை தங்கத்தின் விலை இந்த அளவிற்கு உயரவில்லை. கடந்த மார்ச் 19, 2020 அன்று 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் 41,920 ரூபாய். பவுனுக்கு 33,536 ரூபாயாக இருந்தது. பின்னர் படிப்படியாக உயர்ந்து மே 16, 2020 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 47,880 ரூபாய். பவுனுக்கு 38,304 ரூபாயாக எகிறியது. ஏற்ற இறக்கத்துடன் ஊசலாடி வந்த தங்கத்தின் விலை இன்று மேலும் ஒரு சவரன் 37032 ரூபாயாக உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் சாமானியர்களுக்கு தங்கம் எட்டாக்கனியாகி விடுமோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+